மேலும் செய்திகள்
தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைவு
4 hour(s) ago
தமிழக வாக்காளர் பட்டியலில் 50 லட்சம் பேர் நீக்கம்?
4 hour(s) ago
சென்னை: 'ரயில்களில் கற்பூரம் ஏற்றுவதை தவிர்க்க வேண்டும். மீறினால், மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும்' என, ரயில்வே பாதுகாப்பு படை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து, ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகள் கூறியதாவது: சபரிமலை சீசன் துவங்கி உள்ளது. சிறப்பு ரயில்களில், பக்தர்கள் அதிகளவில் பயணம் செய்கின்றனர். ரயில்களில் பயணிக்கும்போது, விளக்கு மற்றும் கற்பூரங்களை ஏற்றி வைத்து வழிபடுவதை, தவிர்க்க வேண்டும். இந்திய ரயில்வே சட்டத்தின்படி, எளிதில் தீப்பற்றக்கூடிய பட்டாசுகள், காஸ் சிலிண்டர், அமிலம், பெட்ரோல், மண்ணெண்ணெய் போன்றவற்றை ரயில்களில் எடுத்துச் செல்லக் கூடாது. கற்பூரம், விளக்கு என, எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை, ரயில்களில் பயன்படுத்தினால் தண்டிக்கப்படுவர். அந்த வகையில், எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்களை, பயணியர் எடுத்துச் சென்றால், 1,000 ரூபாய் அபராதம் அல்லது மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படும். ரயில்களில் கற்பூரம் மற்றும் விளக்குகளை பற்ற வைக்கும் நபர்கள் குறித்து, சக பயணியர் உடனே டிக்கெட் பரிசோதகர், ரயில் பெட்டி உதவியாளர்கள், ரயில் நிலைய மேலாளர்கள், ரயில்வே பாதுகாப்பு படை, 139 என்ற உதவி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
4 hour(s) ago
4 hour(s) ago