உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழ் கற்க வந்துள்ள வாரணாசி மாணவர்கள்

தமிழ் கற்க வந்துள்ள வாரணாசி மாணவர்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: வாரணாசியில் இருந்து தமிழகம் வந்துள்ள, 300 மாணவர்கள், தமிழ் மொழியை கற்க ஆர்வமாக உள்ளனர். 'காசி தமிழ் சங்கமம் 4.0' நிகழ்ச்சியின் நிறைவாக, வாரணாசி மாணவர்களுக்கு தமிழ் மொழி, பண்பாடு, கலாசாரத்தை கற்பிக்க முடிவு செய்யப்பட்டு, அங்கிருந்து, 300 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.அவர்கள் கடந்த, 20ம் தேதி தமிழகம் வந்தனர். அவர்களை கவர்னர் ரவி, சென்னை ஐ.ஐ.டி., இயக்குநர் காமகோடி, செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவன இயக்குநர் சந்திரசேகரன் உள்ளிட்டோர் வரவேற்றனர். அந்த மாணவர்கள், 10 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, புதுச்சேரி, காந்தி கிராமம், சாஸ்த்ரா, சந்திரசேகரேந்திர சரஸ்வதி பல்கலை மற்றும் கொங்குநாடு, சுதர்சன் ஜெயின் உள்ளிட்ட கல்லுாரிகளுக்கு அனுப்பப்பட்டனர். இந்த ஆண்டு, 'தமிழ் கற்கலாம்' என்ற கருப்பொருளில், தமிழ் மொழி, இலக்கியம், கலாசாரம், கல்வி மரபுகள் உள்ளிட்டவை, வாரணாசி மாணவர்களுக்கு கற்பிக்கப்படுகின்றன.தேர்வு செய்யப்பட்ட 300 மாணவர்களுக்கு இந்த பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பேராசிரியர்கள், ஹிந்தி மொழி வழியாக, தமிழ் இலக்கண, இலக்கியங்கள், வட - தென் எல்லைகளின் கலாசார ஒற்றுமைகளை கற்பிப்பதுடன், கலாசார முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கும் அவர்களை அழைத்து செல்ல உள்ளனர்.இந்நிகழ்ச்சி வரும், 31ம் தேதி, ராமேஸ்வரத்தில் நிறைவு பெறும். அதில், துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பங்கேற்க உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ