உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அரசு பள்ளிகளில் 3,000 ஆசிரியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் தகவல்

அரசு பள்ளிகளில் 3,000 ஆசிரியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் தகவல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருவள்ளூர: ''தமிழகத்தில் உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளுக்கு தேர்வான, 3,000 ஆசிரியர்களுக்கு விரைவில் முதல்வர் ஸ்டாலின் பணி ஆணை வழங்குவார்,'' என, பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் தெரிவித்தார்.திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் நேற்று ஆய்வு செய்த பின், அமைச்சர் மகேஷ் கூறியதாவது:பள்ளிக்கல்வி துறை சார்பில், 100 கோடி ரூபாயில் மாணவர்களுக்கு, பள்ளிகளில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தருவது குறித்து ஆய்வு நடத்தி வருகிறோம். தமிழகத்தில் பிறமொழியில் படிக்கும் மாணவர்கள் எத்தனை பேர் என்று கணக்கெடுக்கிறோம். கர்நாடக மாநில எல்லையில் கன்னடம், கன்னியாகுமரி மாவட்ட எல்லையில் மலையாளம், திருவள்ளூர் மாவட்ட எல்லையில் தெலுங்கு மொழிகளில் மாணவர்கள் படித்து வருகின்றனர். அவர்களுக்கு தேவையான ஆசிரியர்கள் உள்ளனரா, அடிப்படை வசதிகள் உள்ளதா என்றும் விபரம் சேகரித்து வருகிறோம். உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள 3,192 ஆசிரியர் பணியிடங்களுக்கு தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்துள்ளோம். இம்மாதத்திற்குள், 3,000 ஆசிரியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை வழங்குவார். அரசு பள்ளிகள் வறுமையின் அடையாளம் இல்லை. பெருமையின் அடையாளம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

ஆரூர் ரங்
நவ 10, 2024 14:09

இந்நேரம் உங்க இடத்தில் அணில் இருந்திருந்தால் எல்லாம் நிரம்பியிருக்கும்.


Barakat Ali
நவ 10, 2024 12:17

கட்டிங் வாங்கிக்கிட்டு விசாரணைன்னு வந்தா மட்டும் வாங்கினதைத் திரும்பக் கொடுத்துட்டா யோக்கியன்னு ஒப்புத்துக்குற பாரத் இது ..... புண்ணிய பூமி.....


Venkateswaran Rajaram
நவ 10, 2024 12:10

இவர்கள் ஆட்சியில் இருந்து கிளம்பும் நேரம் வந்துவிட்டது ,எவ்வளவு சுருட்டனுமோ சுருட்டியாக வேண்டும் ...


duruvasar
நவ 10, 2024 10:08

இவருக்கு இதை பற்றியெல்லாம் பேசுவதற்கு நேரம் இருப்பதை பார்த்தல் உடம்பு புல்லா அரிக்கிரது


வைகுண்டேஸ்வரன்
நவ 10, 2024 09:20

சிறப்பு. பாராட்டுக்கள். இப்போதைய மாநில அரசின் ஒவ்வொரு அமைச்சரும் சிறந்த தேர்வு. வாழ்த்துக்கள்.


Mani . V
நவ 10, 2024 08:53

உதய் ரசிகர் மன்ற வேலைகளையும் தாண்டி இது போன்று எப்பொழுதாவது செய்வதற்கு வாழ்த்துக்கள்.


ராமகிருஷ்ணன்
நவ 10, 2024 08:49

அடுத்த சுருட்டுக்கு ரெடியாகி விட்டாராம்


raja
நவ 10, 2024 07:53

அட்ரா சக்க .. அட்றா சக்க...மக்கா 15 3000 = 45000 லட்சம் திருட்டு திராவிடர்கலுக்கு கை மாற போவுது...


S.kausalya
நவ 10, 2024 07:04

அடுத்த கொள்ளைக்கு 3000 மீன்கள் சிக்கிடுச்சா


Kasimani Baskaran
நவ 10, 2024 06:58

இந்த ஆண்டு விபரம் சேகரித்து இன்னும் நாலு ஆண்டுகளுக்குப்பின் நடவடிக்கை. பள்ளிகள் பற்றியும் கூட நினைக்கிறார்கள் என்ற மகிழ்ச்சி.