உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / குர்பானிக்காக வந்த 30,000 ஆடுகள்; களை கட்டத் தொடங்கியது சந்தை!

குர்பானிக்காக வந்த 30,000 ஆடுகள்; களை கட்டத் தொடங்கியது சந்தை!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: முஸ்லிம்களில் தியாக திருநாளான பக்ரீத் பண்டிகை, வரும் 7 ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதற்காக, ஆடு, மாடுகளை பலி கொடுத்து, உறவினர்கள், ஏழைகளுக்கு இறைச்சி தானம் அளிப்பது வழக்கம்.பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, மாதவரம், புழல் காவாங்கரை, புளியந்தோப்பு, தாம்பரம், அடையாறு, பல்லாவரம் உட்பட ள்ளிட்ட சென்னை முழுதும் நேற்று முதல் ஆட்டு சந்தை களை கட்ட ஆரம்பித்துள்ளது.மாதவரத்தில் கூடிய சந்தையில், ராய்ப்பூர் உள்ளிட்ட வடமாநிலங்களில் இருந்தும், தமிழகத்தின் மதுரை, வேலுார், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை போன்ற பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.மாதவரத்தில் நேற்று தொடங்கிய சந்தையில், 30 முதல் 50 கிலோ வரை உள்ள வெள்ளாடுகள், 35,000 முதல் 50,000 ஆயிரம் ரூபாய் வரை விலை போயின.சென்னை ஆட்டிறைச்சி மொத்த வியாபாரிகள் சங்க செயலர் கோவிந்தராஜ் கூறியதாவது:சந்தை தற்போதுதான் துவங்கியுள்ளது. இந்தாண்டு ஆடுகளின் விலை, 500 முதல் 1,000 ரூபாய் வரை கூடியுள்ளது. முன்பெல்லாம் குறிப்பிட்ட ஓரிரு பகுதியில் மட்டுமே ஆட்டு சந்தை கூடும். தற்போது சென்னையில், 10க்கும் மேற்பட்ட இடங்களில் சந்தை கூடுகிறது.சென்னையை பொறுத்தவரை அடுக்குமாடி குடியிருப்பு அதிகம் வந்து விட்டது. அதனால், ஆடுகளை இரண்டு நாட்களுக்கு முன்பே வாங்கி வைப்பது குறைந்து விட்டது. அதனால், பக்ரீத் முந்தைய நாள் விற்பனை அதிகரிக்கும். இந்தாண்டு சென்னையில் மட்டும், 30,000 க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு வந்துள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Iyer
ஜூன் 06, 2025 02:12

கான்செர் புற்றுநோய் வீட்டுக்கு வீடு பரவுதல் காரணம் மாமிச உணவுதான். மாமிச உணவு ஜெரிப்பதற்கு பல நாள் ஆகும். அப்பவும் முழு ஜீரணம் ஆகாமல் அழுகி புற்று நோயை முடுக்கிவிடுகிறது. ஆகையால் மாமிச உணவை விற்பதற்கும், குளிர்பெட்டியில் சேமிக்கவும், SLAUGHTER HOUSES ஐ தடை செய்து பொது னால சுகாதாரத்தை கடைபிடிப்பது அவசியம்.


Iyer
ஜூன் 06, 2025 02:07

உண்மையான கடவுள் பக்தி உள்ளவர் தன்னுடைய தலையை வெட்டி கடவுளுக்கு பலி கொடுக்கணும். அடுத்த ஜீவனின் தலையை வெட்டி பலி கொடுத்தால் - அது போலி பக்தியாகும்.


உ.பி
ஜூன் 05, 2025 15:43

அடேய் பீட்டா? இப்ப எங்கடா இருக்க?


ram
ஜூன் 05, 2025 12:54

ஒரே நாளில் கோடி கணக்கான கால்நடைகளை கொல்லுவது என்ன லாஜிக்கோ.


தமிழன்
ஜூன் 05, 2025 17:47

ஒரே ஒரு பட்டு புடவையில் லட்சக்கணக்கான பட்டு பூச்சிகள் கொல்லப்படுகிறதே அதுக்கு வருத்தம் தெரிவித்தீர்களா ?


Rathna
ஜூன் 05, 2025 12:23

சுத்தத்தை கடைபிடியுங்கள். கொரானா பரவி வரும் நிலையில் ஆடுகளை பொது இடங்களில் வெட்டி அதன் மூலம் பரவும் சுகாதார கேட்டால் நோயை பரவ விடாதீர்கள்.


கரீம்
ஜூன் 05, 2025 09:01

பழைய பாடல் நினைவுக்கு வந்தது.


Kulandai kannan
ஜூன் 05, 2025 08:58

விலங்கு ஆர்வலர்களின் வாயில் என்ன வாழைப்பழமா?


Arul. K
ஜூன் 05, 2025 12:22

அவர்களுக்கும் பிரியாணி உண்டு


Barakat Ali
ஜூன் 05, 2025 08:51

எங்காளுங்க பலபேரு கழகத்துக்கு ஏத்த ஆடுகளா செயல்படுறது வேதனையான விஷயம் .....


தமிழன்
ஜூன் 05, 2025 10:56

அண்ணாமலை இல்லாமே போர் அடிக்குது


beindian
ஜூன் 05, 2025 16:39

இஸ்லாமிய பெயரில் ஒளிந்துகொண்டிருக்கும் சங்கீதானே நீ?


Nada Rajan
ஜூன் 05, 2025 08:46

நான் காத்திருக்கிறேன்... எனக்கு நண்பர்கள் அதிகம்... எனது நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்


புதிய வீடியோ