உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / "தொழில்நுட்பங்களின் உதவி தான் மக்கள் சேவை

"தொழில்நுட்பங்களின் உதவி தான் மக்கள் சேவை

சென்னை: 'தொழில்நுட்பங்களின் உதவி தான் மக்கள் சேவை' என்று, ராஜன் கண் மருத்துவமனை முதல்வர் மோகன் ராஜன் பேசினார். ராஜன் கண் மருத்துவமனையின், 16 வது ஆண்டு நிறைவு விழா, சென்னை தி.நகரில் நடந்தது. விழாவில், ராஜன் கண் மருத்துவமனையின் முதல்வர் மற்றும் மருத்துவ இயக்குநர் மோகன் ராஜன் பேசியதாவது: மருத்துவத் துறையில், தற்போது பல தொழில்நுட்பங்கள் வந்துவிட்டன. ராஜன் கண் மருத்துவமனை, 16 ஆண்டுகளைக் கடந்து, 17 ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. கடந்த 16 ஆண்டுகளில், மருத்துவத் துறையில் பல முன்னேற்றங்களைக் கண்டுள்ளது. ஆண்டுக்கு ஆண்டு கண் மருத்துவத்தில், புதிய தொழில்நுட்பங்கள் வந்து விட்டன. அந்த தொழில்நுட்பங்களின் உதவி தான் எங்கள் மருத்துவமனையை மக்கள் சேவையில் ஈடுபட வைத்தது. மேலும், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு சினிமா பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் வாயிலாக கண் தானம் பற்றிய விழிப்புணர்வை, மக்களுக்கு ஏற்படுத்தியது ராஜன் மருத்துவமனையின் மைல்கல். குணப்படுத்த முடியாத கண் நோய்களையும், குணப்படுத்த முடியும் என்ற தன்னம்பிக்கை நோக்கோடு, தற்போது அதி நவீன வசதிகளுடன், உலகத் தரம் வாய்ந்த கண் சிகிச்சை அளிக்கப்படுகிறது என்றார்.தொடர்ச்சியாக, 'டாக்டர் ராஜன் நினைவு விருது,' லண்டனில் உள்ள மூர்பீல்ட்ஸ் கண் மருத்துவமனை டாக்டர் ரிச்சர்டு காலின்ஸுக்கு வழங்கப்பட்டது. விழாவில், அனைத்திந்திய கண் மருத்துவத் தலைவர் குரோவர், பிரிட்டிஷ் உயர் அதிகாரி மைக் நித்விரானகிஸ், எமிரிட்டஸ் நிறுவன முதல்வர் பத்ரி நாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ