உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரூ.60 கோடி மோசடி வழக்கு 3 பெண்கள் உட்பட 4 பேர் கைது

ரூ.60 கோடி மோசடி வழக்கு 3 பெண்கள் உட்பட 4 பேர் கைது

சென்னை:முதலீட்டாளர்களுக்கு அதிக வட்டி தருவதாக, 60 கோடி ரூபாய் வரை மோசடி செய்த, ஏ.ஆர்.டி., ஜுவல்லர்ஸ் மற்றும் நிதி நிறுவன அதிபர் ராபினின் நெருங்கிய தோழி உட்பட, நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். சென்னை முகப்பேரை சேர்ந்தவர் ஆல்வின்; இவரது சகோதரர் ராபின். இவர்கள் இருவரும் அதே பகுதியில், ஏ.ஆர்.டி., ஜுவல்லர்ஸ் மற்றும் நிதி நிறுவனங்களை நடத்தி வந்தனர். தங்கள் நிறுவனத்தில், 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், வட்டியாக வாரம், 3,000 ரூபாய் தரப்படும் என்று அறிவித்தனர். அதேபோல, 10,000 ரூபாய் செலுத்தினால், 12 மாதத்தில், 2.40 லட்சம் ரூபாய்க்கு நகை வாங்கிக் கொள்ளலாம் என்றும் தெரிவித்தனர். இப்படி பல விதமான கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து, மக்களிடம் இருந்து, 60 கோடி ரூபாய் வரை மோசடி செய்துள்ளனர். இதுகுறித்து, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து, 2023ல், டில்லியில் பதுங்கி இருந்த ஆல்வின், ராபின் ஆகியோரை கைது செய்தனர். அதன்பின், மோசடிக்கு உடந்தையாக இருந்த முகவர்கள் பிரியா உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், இரண்டு ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த, ராபினின் நெருங்கிய தோழியான அம்பத்துார் சுஜாதா, புழல் பானுவள்ளி, ஆவடி திவ்யா, புழல் சந்தோஷ், என, நான்கு பேர் நேற்று கைது செய்யப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை