8 மாதங்களில் 3 எஸ்.ஐ.,க்கள் உட்பட 5 போலீசார் கொலை
மதுரை தமிழகத்தில் இந்தாண்டில் மட்டும் 3 எஸ்.ஐ.,க்கள், 2 போலீசார் குடும்ப பிரச்னை, நண்பர்களுடன் தகராறு, குடிபோதையில் தகராறு போன்ற காரணங்களால் கொலை செய்யப்பட்டுள்ளனர். இதில் உச்சபட்சமாக நேற்று முன்தினம் திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே குடிமங்கலம் ஸ்டேஷனிற்கு உட்பட்ட பகுதியில் தகராறு குறித்து விசாரிக்க சென்ற சிறப்பு எஸ்.ஐ., சண்முகசுந்தரம், கொடூரமாக கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டது போலீசார் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 8 மாதங்களில் 5 போலீசார் கொலை
• பிப்., 2: தேதி மதுரை மாவட்டம் நாகையாபுரம் ஸ்டேஷன் கிரேடு 1 போலீஸ்காரர் சிவா, குடும்ப பிரச்னையில் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=449ttrys&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0• பிப்.,5: சென்னை தனிப்பிரிவு குற்றப்புலனாய்வு எஸ்.ஐ., விஜயபாஸ்கரும் குடும்ப பிரச்னையில் மகன் தாக்கியதில் காயமுற்று இறந்தார். • மார்ச் 19: சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் ஸ்டேஷன் கிரேடு போலீஸ்காரர் மலையரசன், மதுரை ரிங் ரோட்டில் ஆட்டோ டிரைவருடன் ஏற்பட்ட திடீர் நட்பால் மது அருந்திய போது, பணத்துக்காக எரித்துக் கொலை செய்யப்பட்டார். • மார்ச் 27: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகர் ஏட்டு முத்துக்குமார், கஞ்சா வியாபாரிகளை கண்டித்ததால் கல்லால் அடித்துக்கொலை செய்யப்பட்டார். • ஜூலை 25: நண்பர்களுடன் ஏற்பட்ட தகராறில் சென்னை ஆயுதப்படை எஸ்.ஐ., ராஜாராமன் கீழே தள்ளிவிடப்பட்டதில் தலையில் அடிபட்டு இறந்தார். சமீபகாலமாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடும்போது அவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுவது அதிகரித்து வருகிறது. சில மாதங்களுக்கு முன் மதுரை தெற்குவாசல் பகுதியில் வாகன சோதனையின்போது குடிபோதையில் வந்த நபர் தகராறு செய்து ஏட்டுடன் மல்லுக்கட்டியதில் ஏட்டுக்கு கால் முறிவு ஏற்பட்டது. வாகன சோதனை பணியின்போதும், போலீசார் ரோந்து செல்லும்போதும் ரவுடிகள், திருடர்கள், போதை நபர்களால் தாக்கப்படுவதை தவிர்க்க கைத்துப்பாக்கி வைத்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் துப்பாக்கியுடன் செல்வது 'ரிஸ்க்' என்பதால் பெரும்பாலான சிறப்பு எஸ்.ஐ.,க்கள் எடுத்துச் செல்வதில்லை. போலீசார் கூறுகையில், ''போதையால் அதிக குற்றங்கள் நடந்து வருகிறது. சம்பவ இடத்திற்கு முதலில் செல்வது போலீசாரும், எஸ்.ஐ.,க்களும்தான். தங்களுக்கே பாதுகாப்பற்ற சூழல் நிலவும்போது எப்படி சட்டம் ஒழுங்கை தைரியமாக பாதுகாப்பார்கள். போலீசாருக்கும் குடும்பம் இருக்கிறது என்பதை அரசு உணர்ந்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்'' என்றனர்.