உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இரு வேறு இடங்களில் விபத்து; பள்ளி மாணவர்கள் 5 பேர் பலி

இரு வேறு இடங்களில் விபத்து; பள்ளி மாணவர்கள் 5 பேர் பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நமது நிருபர்

தமிழகத்தில் இரு வேறு இடங்களில் நடந்த சாலை விபத்துக்களில் பள்ளி மாணவர்கள் 5 பேர் உயிரிழந்தனர்.திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த காரக்கோட்டை அருகே, அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் சிலர், இன்று மாலை வகுப்பு முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியில் கட்டுப்பாடின்றி வந்த கார், நடந்து சென்ற மாணவர்கள் மீது மோதியது. இதில், லோகேஷ், 13, ரக்சித், 12, உள்ளிட்ட மூவர் அதே இடத்தில் உயிரிழந்தனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=cm41209j&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதேபோல, கள்ளக்குறிச்சி அருகே பள்ளி முடிந்து வீடு சென்று கொண்டிருந்த மாணவர்களின் இரு சக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். உளுந்துார்பேட்டை மேட்டத்துார் அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது. ஜஸ்டின், புருனோ ஆகிய இரு தனியார் பள்ளி மாணவர்கள் அதே இடத்தில் உயிரிழந்தனர். ஆலன், சுஜித், அஜய் ஆகிய 3 மாணவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த 5 பேரும் ஒரே இரு சக்கர வாகனத்தில் சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை