உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆர்.டி.இ., சேர்க்கையில் 70,449 மாணவர்கள்

ஆர்.டி.இ., சேர்க்கையில் 70,449 மாணவர்கள்

சென்னை:கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ், இந்த ஆண்டு தனியார் பள்ளி களில், 70,449 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து, பள்ளி கல்வி துறை செயலர் சந்திரமோகன் வெளியிட்டுள்ள அறிக்கை: கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ், நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு, 25 சதவீதம் ஒதுக்கீடு வழங்கும் வகையில், 7,717 தனியார் பள்ளிகளில், எல்.கே.ஜி., மற்றும் ஒன்றாம் வகுப்பு சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கு, 82,000க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர். கடந்த இரு நாட்களாக குலுக்கல் முறையில் சேர்க்கை நடத்தப்பட்டது. அதன்படி, 7,717 பள்ளிகளில், 70,350 மாணவ, மாணவியர் எல்.கே.ஜி., வகுப்பிலும், 21 பள்ளிகளில், 99 மாணவ, மாணவியர் ஒன்றாம் வகுப்பிலும் என மொத்தம், 70,449 பேர் இந்தாண்டு சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான கல்வி கட்டணத்தை அரசு ஏற்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ