உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஒரு குடும்பம் பிழைப்பதற்கு சுரண்டப்படும் 8 கோடி பேர்: திமுகவை விமர்சிக்கும் இபிஎஸ்

ஒரு குடும்பம் பிழைப்பதற்கு சுரண்டப்படும் 8 கோடி பேர்: திமுகவை விமர்சிக்கும் இபிஎஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நிலக்கோட்டை: 'மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்' என்ற தன் பிரசாரத்தை, நேற்று நிலக்கோட்டையில் மேற்கொண்டார் அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி. அப்போது அவர் பேசியதாவது: தி.மு.க., ஆட்சிக்கு வந்த 51 மாதங்களில் மக்கள் நலனுக்கான திட்டங்கள் எதையுமே நிறைவேற்றவில்லை. ஆனால், ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு 25,000, 50,000 ரூபாய், 1 சவரன் தங்கம் அ.தி.மு.க., ஆட்சியில் கொடுத்தோம். இப்படி பத்தாண்டுகளில், 12 லட்சம் பேருக்கு கொடுத்தோம். அதையும், தி.மு.க., அரசு நிறுத்தியது. மீண்டும் அ.தி.மு.க., ஆட்சி அமைந்ததும் அத்திட்டத்தைத் தொடருவோம். ஏழை, விவசாயத் தொழிலாளிகள், தாழ்த்தப்பட்ட, மலைவாழ், மீனவ மக்களுக்கு மனை இருந்தால் போதும். அதில், கான்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும். திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, 350 கோடி ரூபாயில் அமைத்துக் கொடுத்தோம். தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், அதில், தாங்கள் செய்தது போன்ற பிரம்மையை ஏற்படுத்தி, அதை திறந்தனர். குடிமராமத்துப் பணி திட்டத்தில் ஏரி, குளம், கண்மாய்கள் துார்வாரப்பட்டன. வண்டல் மண் விவசாயத்துக்கு பயன்பட்டது. தி.மு.க., ஆட்சியில் ஒரு லோடு மண் அள்ளினால், 2,000 ரூபாய் கொடுக்க வேண்டும். பயிர்க் கடன்களை இரண்டு முறை தள்ளுபடி செய்தோம். விவசாயத் தொழிலாளிகளுக்கு பசுமை வீடுகள், ஆடுகள், கறவை மாடுகள், கோழிகள் கொடுத்தோம். தமிழகம் முழுதும் 2,000 அம்மா மினி கிளினிக் தொடங்கினோம். தி.மு.க., அரசு ஏழைகளுக்கு சிகிச்சை அளிப்பதிலும் காழ்ப்புணர்ச்சி பார்த்து கிளினிக்கை மூடிவிட்டது. ஒரு குடும்பம் பிழைக்க, எட்டு கோடி பேரை பழிவாங்குகிறது தி.மு.க., மக்களைச் சுரண்டும் குடும்பத்துக்கு தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும். ஊரக வளர்ச்சித் துறைக்கென்று அமைச்சர் இருக்கிறாரா... அவர் செயல்படுகிறாரா என்றே தெரியவில்லை. ஊரகத்தில் குப்பையும் அள்ளுவதில்லை, சரியாக குடிநீரும் வழங்குவதில்லை. நிர்வாகம் இருக்கிறதா என்றே தெரியவில்லை. கிராம ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள நிதியை எடுத்து, வேறு பணிக்குப் பயன்படுத்துகின்றனர். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக பங்கேற்ற முத்துராமலிங்க தேவர், தனது சொத்தின் ஒரு பகுதியை ஜாதி, மதம் பார்க்காமல் மக்களுக்குத் தானம் செய்தவர். ஒரே நேரத்தில் சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு வென்றவர். அவருக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்குவதோடு, மதுரை விமான நிலையத்துக்கு அவருடைய பெயரை வைக்க மத்திய அரசை வலியுறுத்துவோம். குரூப் 4 தேர்வில் முறைகேடு நடை பெற்றதாக புகார் வந்திருக்கிறது. இதனால், தேர்வு எழுதிய இளைஞர்கள் பாதிப்படைந்து உள்ளனர். இந்த அரசு, குரூப் 4 தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு பழனிசாமி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Kanns
செப் 08, 2025 09:25

Both Dravidian Parties are Extensively Power-Misusing VoteBribing MegaLooters. Sack& Convict them All by NeutralJudges. Recover All their Assets for Wasting Peoples Money as 90%VVFat Salaries& UnWanted Freebies


பாலாஜி
செப் 08, 2025 09:11

காலம் சென்ற அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவும் அவருடைய உடன் பிறவாத சகோதரி சசிகலாவும் தற்போதைய எதிர்கட்சித் தலைவராக உள்ள அதிமுக எடப்பாடி பழனிசாமி தமிழக மக்களிடம் சுரண்டியதை வேறு எந்த கட்சியினரும் மிஞ்ச முடியாது.


Santhakumar Srinivasalu
செப் 08, 2025 11:21

அரிச்சந்திரன் வீட்டுக்கு எதிரில் பிறந்த ஒழுக்க சீலர் பேசுகிறார்! பிஜேபி கூட்டணியே ரெய்டுக்கு பயந்து தானே?


Karthik
செப் 08, 2025 12:14

காலம் சென்ற திமுக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியும் அவருடைய புதல்வனும் தற்போதைய முதல்வருமாக உள்ள திமுக ஸ்டாலின் தமிழக மக்களிடம் சுரண்டியதை இந்த கட்சியினரையும் மிஞ்ச முடியாது.


நிக்கோல்தாம்சன்
செப் 08, 2025 08:32

அந்த குடும்பம் சின்னா பின்னமடைந்தால் எவ்ளோ நல்லா இருக்கும் என்று நினைத்துள்ளேன், அப்போது தான் கருநாடக முதல்வர் மகனின் மர்ம மரணம் எனக்கு நம்பிக்கையூட்டியது, அவர்களுடன் சேர்ந்து சென்றதால் ராகேஷ் சித்தராமையாவின் மரணமும் அதன் பின்னர் சித்தராமையா தனது இரண்டாவது மகனை முட்டி மோதி முன்னுக்கு கொண்டுவர முயன்றதும் அவனோ தத்தியா அலைவதும் கணக்கண்கொள்ளா காட்சி . இது காலத்தின் கட்டாயம் என்றும் நினைத்து கொள்வேன், அதாவது முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்


pakalavan
செப் 08, 2025 07:08

ஜெயலலிதா கட்சிதான் ஊழல் செஞ்சு ஜெய்ல ஊதுபத்தி உருட்டுணது


Santhakumar Srinivasalu
செப் 08, 2025 11:22

சரியான பதிவு


Naga Subramanian
செப் 08, 2025 06:57

அதெல்லாம் இருக்கட்டும் சார் திராவிட மாடலில் நல்லது நடந்தாதான் ஆச்சர்யம். தாங்கள் மற்றும் தங்கள் கட்சி நல்ல நிலையில் உயிர்ப்பெற்று வர, தங்களால் பிரித்துவிடப்பட்ட அனைவரையும் ஒன்று சேர்த்து, உருப்பட வழி பாருங்கள். அது செய்யாத வரையில், தாங்கள் செய்வது மேன்மைதகு எம்ஜியார் மற்றும் ஜெயலலிதாவுக்கு செய்யும் துரோகமே


Infomation Technology Officers ASSOCIATION Tamilnadu Municipal Dept
செப் 08, 2025 06:31

சரி சரி உன் கட்சியில் உன் மகன் சம்பந்தியின் ஆதிக்கத்தால் அஇஅதிமுக ஜெயிக்கவிடாமல் செய்வதாக பேச்சு உள்ளதே அதற்கு பதில் என்ன


vivek
செப் 08, 2025 07:31

திருட்டு பெயரில் இது என்ன போலி association


xyzabc
செப் 08, 2025 04:26

சார் கருனா குடும்பம் பெரிய குடும்பம். தேவை நிறைய.


Kasimani Baskaran
செப் 08, 2025 03:46

சத்யமானா வார்த்தை. ஆனால் எத்தனை பேர் மீது வழக்குப்போட்டார் அல்லது உள்ளே தூக்கி வைத்தார்? அரசியலுக்கு பேசுவதும் கிரிமினல் வேலைகளை பிடித்துக்கொடுப்பதற்கும் வெவ்வேறு வேறுபட்ட விஷயங்கள். ஒருவருக்கு ஊழல் ஒரு தேசவிரோத நடவடிக்கை என்று தெரிந்தும் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஒத்துழைப்பதற்கு சமம்.


முக்கிய வீடியோ