உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தோழி வேறு பள்ளிக்கு சென்றதால் 9ம் வகுப்பு மாணவி தற்கொலை

தோழி வேறு பள்ளிக்கு சென்றதால் 9ம் வகுப்பு மாணவி தற்கொலை

மதுரை: மதுரையில் 8ம் வகுப்பு வரை தன்னுடன் படித்த தோழி வேறு பள்ளிக்கு சென்றதால் 9ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்டார்.மதுரை விசாலாட்சிபுரத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், கணவரை இழந்தவர். வீட்டு வேலைகளை செய்து இரு மகன்கள், 14 வயது மகளை படிக்க வைத்து வருகிறார். அரசு உதவி பெறும் பள்ளியில் 8ம் வகுப்பு வரை இவரது மகளுடன் படித்த மாணவி ஒருவர், வேறு ஒரு பள்ளியில் 9ம் வகுப்பு சேர்ந்து படித்து வருகிறார்.சிறு வயது முதலே நெருங்கிய தோழிகளாக இருந்ததால், அந்த மாணவி சேர்ந்த பள்ளியிலேயே தன்னையும் சேர்த்துவிடுமாறு தாயாரிடம் மகள் கூறிவந்தார். 'அந்த பள்ளியில் சேர்த்தால் கல்விக்கட்டணம் கூடுதலாக செலுத்த வேண்டியிருக்கும். என்னால் செலவழிக்க முடியாது' என தாயார் சமரசம் செய்தார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான 14 வயது மகள் சேலையால் துாக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். தல்லாகுளம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

தர்மராஜ் தங்கரத்தினம்
ஜூன் 12, 2025 11:23

மனோதிடம் இல்லாததே காரணம் ...... அரசின் தவறல்ல ..... கல்விமுறையின் தவறுமல்ல .....


ஆரூர் ரங்
ஜூன் 12, 2025 11:06

நீட் தேர்வு அச்சத்தில் நடந்தது என தீயமுக பிரச்சாரம் செய்யலாம். பிண அரசியல்.


வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூன் 12, 2025 10:27

ஒருஏழை பெண் தான் விரும்பிய கல்விகற்கமுடியாத மாநிலம் அனிதாவிற்காக பொங்கிய 200 உபிஸ் இப்போது எங்கே எந்த டாஸ்மாக் வாசலில் ..நட்புக்கும், கல்விக்கும் , வறுமைக்கும் நடந்த மும்முனை போராட்டத்தில் வறுமை வென்றுவிட்டது ...


MP.K
ஜூன் 12, 2025 11:15

இதுக்கும் அரசு தான் காரணமா ?


VENKATASUBRAMANIAN
ஜூன் 12, 2025 07:35

இதுதான் திமுக அரசின் லட்சணம்.


ராமகிருஷ்ணன்
ஜூன் 12, 2025 06:36

இந்த தற்கொலைக்கு முழு காரணம் திறனற்ற திமுக அரசு மட்டுமே, உடனடியாக திமுக அரசு ராஜினாமா செய்ய வேண்டும். கல்வி அமைச்சருக்கு கடுமையான தண்டனை தர வேண்டும். எதிர் கட்சிகள் மிக பெரிய போராட்டம் அறிவிக்க வேண்டும்.


Gentleman
ஜூன் 12, 2025 05:24

நமது கல்வி முறையில் அடிப்படை பிரச்சனை தான் காரணம் பிரைவேட் பள்ளிகளில் குறைந்த கட்டணம் வசூலிக்க அறிவிக்க வேண்டும் அரசியல் விளையாட்டால் முடியாது


Kasimani Baskaran
ஜூன் 12, 2025 03:54

நட்புக்கு இலக்கணம் என்று சொல்வதா அல்லது மன நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக எடுத்துக்கொள்வதா அல்லது நமது கல்வி முறையில் அடிப்படை பிரச்சினையா இல்லை பெற்றோர் வளர்த்தது சரியில்லையா...


சமீபத்திய செய்தி