| ADDED : டிச 09, 2025 05:40 AM
ஜாதி என்பது ஒரு மனநோய். மனித உழைப்பை சுரண்டி, பரம்பரை பரம்பரையாக அடிமையாக இருந்து மீள முடியாமல் இருந்தவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள். அதிலிருந்து மீள, பொருளாதார வளர்ச்சி அடைய வேண்டும். அந்த பொருளாதார வளர்ச்சிக்கு நிலம் தேவை. பஞ்சமி நிலத்தை மீட்போம். நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால், கடற்கரையில் இருக்கிற சமாதியை முதலில் எடுப்போம். கடற்கரையில் யாருக்கும் சமாதி கிடையாது. கல்வி அறிவு பெற்று உயர்வடைய வேண்டும். தாழ்த்தப்பட்டவன் என்ற சலுகை தேவை இல்லை. எஸ்.சி., பட்டியலில் இருந்தால்தான் சலுகைகள் கிடைக்கும் என்பர். அந்த சலுகை தேவையில்லை; உரிமைதான் தேவை. இட ஒதுக்கீட்டை எண்ணிக்கைக்கு ஏற்ப எண்ணி கொடுக்க வேண்டும். அதற்காக ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். நாம் தமிழர் கூட்டம் தத்துவ கூட்டம். இது தற்குறி கூட்டம் இல்லை. - சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர் கட்சி