| ADDED : ஜன 09, 2025 01:50 AM
சபரிமலை: சபரிமலையில் அலைமோதும் பக்தர் கூட்டத்தால் தேவசம்போர்டு திணறிவருகிறது. பம்பையில் கூட்டத்தை கட்டுப்படுத்த மூன்று 'ஸ்பாட் புக்கிங் 'கவுன்டர்கள் நிலக்கல்லுக்கு மாற்றப்பட்டது. மகரஜோதி நாளில் 'ஸ்பாட் புக்கிங் 'ஆயிரம் பேருக்கு மட்டுமே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=cded7s6j&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0சபரிமலையில் 41 நாட்கள் நடைபெற்ற மண்டல காலம் பெரிய அளவிலான புகார்களுக்கு இடம் கொடுக்காமல் நிறைவு பெற்றது. ஆனால் மகர விளக்கு கால பூஜைகளுக்காக நடை திறந்த நாள் முதல் பக்தர்களின் நீண்ட கியூ எப்போதும் மர கூட்டம் வரை காணப்படுகிறது.இதனால் ஏழு முதல் 10 மணி நேரம் வரை காத்திருந்துதான் 18 படிகளில் ஏற முடிகிறது. குளறுபடி அதிகம்
'ஸ்பாட் புக்கிங் 'கவுன்டர்களில் எப்போதும் கூட்டம் நிரம்பி வழிகிறது. அதில் அதிகபட்சமாக 10 ஆயிரம் பேருக்கு மட்டுமே பாஸ் வழங்க வேண்டும் என்று கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையிலும் தினமும் 22 முதல் 25 ஆயிரம் பேருக்கு வழங்கப்படுகிறது .இதனால் குளறுபடிகளும் அதிகமாகிவிட்டது. இதற்கிடையில் எருமேலியிலிருந்து 16 கி.மீ. நடந்து பெருவழிப்பாதை வழியாக வரும் பக்தர்கள் ஆன்லைன் பதிவு சீட்டு இல்லாத பட்சத்தில் பெரியான வட்டத்திலிருந்து நீலிமலைக்கு திருவாபரண பாதையில் வந்து ஏறுகின்றனர். இதனால் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து அதிகாரிகள் திணறிவருகின்றனர்.24 மணி நேரமும் பக்தர்கள் படி ஏற அனுமதிக்கப் படுகின்றனர். நடை அடைக்கப்பட்டிருக்கும் நேரத்தில் படியேறும் பக்தர்கள் வடக்கு வாசலில் பல மணி நேரம் கியூவில் நின்றுதான் தரிசனம் செய்ய வேண்டியுள்ளது. 'ஸ்பாட் புக்கிங்'கில் அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவதால் தினமும் ஒரு லட்சத்துக்கு அதிகமானோர் வருவதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. 90 ஆயிரம் பேர் வந்தால் எவ்வித பிரச்னையும் இருக்காது. அதற்கு மேல் வரும் பட்சத்தில் சிரமம் ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. காத்திருக்கும் பக்தர்கள்
இதற்கிடையில் நேற்று முதல் 'ஸ்பாட் புக்கிங் 'எண்ணிக்கை 5000 ஆக குறைக்கப்பட்டது .ஆனால் பக்தர்கள் அதிக அளவில் இதற்காக காத்து நிற்கின்றனர். பாஸ் கிடைக்காதவர்கள் காடுகள் வழியாக நடந்து சன்னிதானத்துக்கு வருகின்றனர். பம்பையில் கூட்டத்தை கட்டுப்படுத்த இங்கு செயல்பட்டு வந்த ஏழு கவுன்டர்களில் மூன்று 'ஸ்பாட் புக்கிங்' கவுன்டர்கள் நிலக்கல்லுக்கு நேற்று மாற்றப்பட்டன. ஆனால் இது பெரிய அளவுக்கு பலன் தரவில்லை.ஜன.14 மகரஜோதி நாளில் ஆயிரம் பேருக்கு மட்டுமே 'ஸ்பாட் புக்கிங்' அனுமதி உண்டு என்று தேவசம்போர்டு அறிவித்துள்ளது. இது போல எருமேலி பெருவழிப்பாதை மற்றும் சத்திரம் புல்மேடு பாதையில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவது ஒரு மணி நேரம் குறைக்கப்பட்டுள்ளது.மண்டல காலத்தில் 40 லட்சத்து 95 ஆயிரத்து 566 பக்தர்கள் தரிசனம் செய்தனர். மகர விளக்கு கால பூஜைகளுக்கு டிச. 30 ல் நடை திறந்த பின்னர் நேற்று மதியம் வரை 10 லட்சம் பேர் தரிசனம் செய்தனர். நடப்பு சீசனில் பக்தர்கள் எண்ணிக்கை 50 லட்சத்தை கடந்துள்ளது.