உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வங்கக்கடலில் உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு; அதிக மழைப்பொழிவு எங்கே!

வங்கக்கடலில் உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு; அதிக மழைப்பொழிவு எங்கே!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: வங்கக்கடலில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.வடமேற்கு வங்கக்கடலில், ஒடிசா கடலோர பகுதிகளை ஒட்டி, காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. வங்கக்கடலில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. இது அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு திசையில் மெதுவாக நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைய கூடும். தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில், காலை 8 மணி வரை பெய்த மழை விபரம் மில்லி மீட்டரில் பின்வருமாறு: சின்னகல்லாறு- 146அவலாஞ்சி-142சாம்ராஜ் எஸ்டேட் - 135அப்பர் பவானி 129நாலுமுக்கு-126ஊத்து-120கட்டாச்சி- 118சோலையாறு-105மாஞ்சோலை-102குந்தா பாலம்- 96பாபநாசம்- 82பெரியாறு-73சேர்வலாறு அணை -72சிறுவாணி அடிவாரம்- 70நடுவட்டம்-68கிளன்மார்கன்-66மாக்கினாம் பட்டி- 65.6பொள்ளாச்சி தாலுகா ஆபீஸ்-64எமரால்டு 64வால்பாறை பி.ஏ.பி.,-64வால்பாறை தாலுகா-61தேவாலா-59அப்பர் கூடலூர்-56கூடலூர் பஜார்-53சின்கோனா-50ஊட்டி-48.9கொடுமுடி ஆறு அணை-47குண்டாறு அணை-46ராமநதி அணை-39


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Pmnr Pmnr
மே 28, 2025 13:39

மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு


Nada Rajan
மே 28, 2025 12:31

கடும் மழை பெய்து விடுவதால் மக்கள் இயல்பு வாழ்க்கை முடக்கி போய்ருச்சு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை