உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 4 ஆண்டாக டூ-வீலர்களை திருடி விற்ற கும்பல் கைது

4 ஆண்டாக டூ-வீலர்களை திருடி விற்ற கும்பல் கைது

மதுரை: மதுரை நகரில் அடிக்கடி டூ-வீலர்கள் திருட்டு போயின. இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் விசாரித்தனர். கண்காணிப்பு கேமரா, ஏற்கனவே உள்ள திருடர்களின் பதிவேடு அடிப்படையில் விசாரணை நடத்தினர். அதில், ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி தர்ம முனீஸ்வரன், 20, ஹரிகிருஷ்ணன், 28, உட்பட ஐவரை கைது செய்து டூ-வீலர்களை மீட்டனர். போலீசார் கூறியதாவது:கைதான நபர்களில் ஒருவரான பாலாஜி மீது டூ-வீலர் திருடியதாக மதுரையில் ஒன்பது வழக்குகள் உள்ளன. இவர் கொடுக்கும் 'ஐடியா' படி, கூட்டாளிகள் ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து வந்து, டூ-வீலர்களை திருடி கேட்ட விலைக்கு விற்பது வழக்கம். கூட்டாளிகள் மீதும் பல ஸ்டேஷன்களில் 5க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இவர்களிடம் டூ-வீலர் வாங்கியவர்களிடம் விசாரணை நடக்கிறது. கடந்த 4 ஆண்டுகளாக 50க்கும் மேற்பட்ட டூ-வீலர்களை இவர்கள் திருடி, விற்று வந்தது தெரிய வந்துள்ளது.இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை