உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அரபிக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு; கோவை, நீலகிரியில் பேரிடர் மீட்பு படை!

அரபிக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு; கோவை, நீலகிரியில் பேரிடர் மீட்பு படை!

சென்னை: ''அரபிக் கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. ரத்னகிரி- டபோலி இடையே காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று முற்பகல் கரையை கடக்கும்.'' என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

உருவானது காற்றழுத்த தாழ்வு!

''அரபிக் கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. தற்போது, ரத்னகிரிக்கு வடமேற்கே 40 கி.மீ., தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது.காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று முற்பகல் கரையை கடக்கும். கிழக்கு நோக்கி நகர்ந்து ரத்னகிரி- டபோலி இடையே காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையை கடக்கும்.

மீட்பு படையினர் தயார்!

கோவை, நீலகிரிக்கு அடுத்த 2 நாட்களுக்கு அதி கனமழை பெய்யும் என்பதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு மாவட்டத்தில் பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரக்கோணத்தில் இருந்து கோவைக்கு மாநில பேரிடர் மீட்பு குழுவினர் வந்தடைந்து உள்ளனர்.

அதிக மழைப்பொழிவு எங்கே?

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று (மே 24) காலை 8 மணி வரை கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை விவரம் மில்லி மீட்டரில்:

அரியலூர் மாவட்டம்

திருமானூர் 34.6குருவடி 26 ஜெயங்கொண்டம் 16 சுத்தமல்லி அணை 12

செங்கல்பட்டு மாவட்டம்

செய்யூர் 31செங்கல்பட்டு 19.2 மாமல்லபுரம் 18 மதுராந்தகம் 12 திருக்கழுக்குன்றம் 11.2

சென்னை மாவட்டம்

மேடவாக்கம் 48.3 மடிப்பாக்கம் 48.3 கண்ணகி நகர் 40.8 ஒக்கியம் துரைப்பாக்கம் 39.3 ஈஞ்சம்பாக்கம் 37.2 பள்ளிக்கரணை 35.4 நீலாங்கரை 33 பெருங்குடி 26.4 சைதாப்பேட்டை 25.2 அடையார் 21.3 வேளச்சேரி 20.7 சோழிங்கநல்லூர் 19.4 ராஜா அண்ணாமலைபுரம் 15.6

தர்மபுரி மாவட்டம்

அரூர் 36பென்னாகரம் 13

ஈரோடு மாவட்டம்

வரட்டு பள்ளம் 17 அம்மாபேட்டை 15.2 கொடிவேரி 12.2 குண்டேரி பள்ளம் 7.4

கன்னியாகுமரி மாவட்டம்

பெருஞ்சாணி 38.6 புத்தன் அணை 37.2 பேச்சிப்பாறை 36.4 சித்தார் 35.4 திற்பரப்பு 32.8 குழித்துறை 32.4 கோழிப்போர்விளை 30.8

தென்காசி மாவட்டம்

அடவிநைனார் கோவில் அணை 52 குண்டார் அணை 44 செங்கோட்டை 38.4 கருப்பநதி அணை 23.5 தென்காசி 11

நீலகிரி மாவட்டம்

அவலாஞ்சி 113 பந்தலூர் 108 தேவாலா 84 வென்ட்ஒர்த் 63 பார்வுட் 55 அப்பர் கூடலூர் 49 எமரால்டு 46 கூடலூர் பஜார் 38 அப்பர் பவானி 37 ஊட்டி 26.4 நடுவட்டம் 21 குந்தா பாலம் 14

தேனி மாவட்டம்

பெரியாறு 44.4 தேக்கடி 36

திருவாரூர் மாவட்டம்

திருவாரூர் 37 மன்னார்குடி 34 திருத்துறைப்பூண்டி 27.8குடவாசல் 26.2 முத்துப்பேட்டை 24.2 நன்னிலம் 17.2நீடாமங்கலம் 15

கோவை மாவட்டம்

சின்னக்கல்லார் 92 சோலையார் 61 சின்கோனா 55 சிறுவாணி அடிவாரம் 53 மாக்கினாம்பட்டி 41 வால்பாறை பிஏபி 32 வால்பாறை தாலுகா ஆபிஸ் 30 பொள்ளாச்சி 22 ஆனைமலை 18 வேளாண் பல்கலை 14.4 ஆழியார் 12மதுக்கரை 12 போத்தனூர் 9கிணத்துக்கிடவு 9

நாகை மாவட்டம்

நாகப்பட்டினம் 67.9 வேளாங்கண்ணி 35 திருக்குவளை 28 வேதாரண்யம் 58.4


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Balasubramanian
மே 24, 2025 14:18

அந்த கேஸில் எதிரணிக்கு ஆதரவாக கபில் சிபல் அபிஷேக் சிங்வி போன்ற, ஒரு முறை கோர்ட்டில் தலையை காட்ட ரூ 50 லட்சம் பெறும், பெரிய பெரிய வக்கீல்கள் உள்ளனர்! இந்து மதத்தை காப்பாற்ற சாதாரண வக்கீல்கள் மற்றும் ஆண்டவன் மட்டுமே உள்ளனர்! கோர்ட்டும் வெறுமனே வாதங்களை பார்த்து வாய்தா வழங்கிக் கொண்டிருக்கின்றன! அதுவரை இந்துக்கள் கொசு ஒழிப்பை பொறுத்துக் கொள்ள வேண்டியதுதான்!


Nada Rajan
மே 24, 2025 12:07

பேரிடர் மீட்பு படையினர் தீவிர நடவடிக்கை எடுக்கணும்


Nada Rajan
மே 24, 2025 12:01

கனமழை காரணமாக மீட்பு பணி அவசியம்


Nada Rajan
மே 24, 2025 12:00

கனமழை காரணமாக மீட்பு பணி அவசியம்


புதிய வீடியோ