உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு; நாளை தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு

உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு; நாளை தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று (டிச.,16) குறைந்த காற்றழுத்த தாழ்வாக உருவானது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=l2x4iof3&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இது குறித்து, சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல், ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, அப்பகுதியில் இன்று (டிச.,16) காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது.அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு உருவாகும். அது, அடுத்த 2 நாட்களில் தமிழக கடற்கரை நோக்கி நகரும். தமிழகத்தில் டிச., 17 மற்றும் 18 தேதிகளில் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.12 முதல் 20 செ.மீ., வரை மழை பொழிய வாய்ப்பு உள்ளதால், 2 நாட்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் வரும் டிசம்பர் 19ம் தேதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

ponssasi
டிச 16, 2024 17:21

இன்றைய காலகட்டத்திற்கு வேண்டுமானால் நேரு பாதை, காந்தி பாதை பயன்படாமல் போகலாம், ஆனால் சுமார் 1950 முதல் 1980 வரை அதுதான் சரியான முறை.


VSMani
டிச 16, 2024 13:48

நேருவின் வளர்ச்சி மாடல் என்ற புத்தக வெளியீட்டு விழாவிலே "நேரு மாடல் தோல்வியடைந்து விட்டது சரி செய்ய முயற்சிக்கிறோம் என்று மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கூறியது விழாவை ஏற்பாடு செய்து இவரை அழைத்தவர்கள் மீது சேறு வீசுவதுபோல் ஆகிவிட்டதே?


முக்கிய வீடியோ