வாசகர்கள் கருத்துகள் ( 1 )
காற்றழுத்த தாழ்வு உருவாகட்டும்.. மழை பெய்தால் சரிதான்... திருநெல்வேலியில் இன்று மாலை அதிக வெயில் அடித்தது
சென்னை: '' தமிழகத்தில் மே 20ம் தேதி வரை மழை தொடரும். வரும் 22ம் தேதி அரபிக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும்'' என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில், ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. வரும் 22ம் தேதி அரபிக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும். தமிழகத்தில் மே 20ம் தேதி வரை மழை தொடரும்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=yogoyggs&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கிருஷ்ணகிரி, திருப்பத்துார், தருமபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், திருச்சி, பெரம்பலுார், அரியலுார், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை ஆகிய 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. கிருஷ்ணகிரி,தருமபுரி, திருப்பத்துார், வேலுார், திருவண்ணாமலை ஆகிய 5 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில், லேசான மழை பெய்யலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
காற்றழுத்த தாழ்வு உருவாகட்டும்.. மழை பெய்தால் சரிதான்... திருநெல்வேலியில் இன்று மாலை அதிக வெயில் அடித்தது