உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சட்டசபையில் நயினாருக்கு இன்ப அதிர்ச்சி: புகழ்ந்து பேசிய முதல்வர் ஸ்டாலின்!

சட்டசபையில் நயினாருக்கு இன்ப அதிர்ச்சி: புகழ்ந்து பேசிய முதல்வர் ஸ்டாலின்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: வெளிநடப்பு செய்யும் போது கூட சிரித்து கொண்டே, யாருக்கும் எந்த வித கோபம் வராத வகையில் அணுக கூடியவர் என பாஜ தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.சட்டசபையில் பேசும் போது தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் அமைச்சர் முத்துசாமிக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார். அப்போது முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: பாஜ தலைவராக பொறுப்பு ஏற்று இருக்கும் நயினார் நாகேந்திரனுக்கு இன்று பிறந்த நாள். அவரை பொறுத்தவரை கட்சி பாகுபாடுயின்றி அனைவர் இடத்திலும் அன்போடு, அமைதியோடு பேசக்கூடியவர். அவர் கோபமாக பேசி நான் இதுவரை பார்த்தது இல்லை. எதிர்க்கட்சிகள் வரிசையில் இருந்தாலும், அவர் விமர்சனங்களை செய்யும் போது கூட பொறுமையாக, அமைதியாக தான் பேசுவார். வெளிநடப்பு செய்யும் போது கூட சிரித்து கொண்டே, யாருக்கும் எந்த வித கோபம் வராத வகையில் அணுக கூடியவர். ஆகவே அப்படிப்பட்ட சிறந்த அரசியல்வாதியாக விளங்கி கொண்டு இருக்க கூடியவர். 64 முடிந்து 65 வயது வயதில் அடியெடுத்து வைத்து இருக்கிறார். அவருக்கு என்னுடைய சார்பில், திமுக எம்எல்ஏக்கள் சார்பில், வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். எங்களது அமைச்சரவையில் இடம் பெற்று இருக்கும் முத்துசாமிக்கும் இன்று பிறந்த நாள். அவருக்கும் என்னுடை வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார். சட்டசபை சார்பில் இருவருக்கும் (நயினார் நாகேந்திரன், முத்துசாமி) பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 25 )

Oviya vijay
அக் 16, 2025 18:51

இப்படி தான் கரூர் செ பா வை இகழ்ந்தாலும் ஒடனே புகழ்ந்தார். இதென்ன மயக்கம்?


தாமரை மலர்கிறது
அக் 16, 2025 18:49

நயனாருக்கு முக்கியம் ஸ்டாலினிடம் பாராட்டு பெறுவதல்ல. தமிழகத்தில் கட்சியை வளர்ப்பது தான்.


சாமானியன்
அக் 16, 2025 18:15

யார் நல்லவர் சாது பொறுமை என்ற குணங்களுக்கு சட்டசபையில் நீயா நானா பட்டிமன்றமா நடக்கின்றது. முத்துசாமி அவர்கள் டாஸ்மாக்ஐ ரிவியூ செய்யும் போது எந்த கடையிலும் ரசீதே தருவதில்லை என்பதை அறிந்தபோது தனக்குத் தானே தலையில் அடித்துக் கொண்டது எனது நினைவில்.


M Ramachandran
அக் 16, 2025 16:07

இவர் ஒரு சாது . அண்ணாமலை என்றால் தான் அஸ்தியில்ஜுரம்.


sundarsvpr
அக் 16, 2025 15:45

காரணம் இப்போது புரிகிறது. ஏன் தி மு க காரசாரமாய் திட்டுவதில்லை.


MP.K
அக் 16, 2025 14:37

செய்தியை படிக்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது


Barakat Ali
அக் 16, 2025 15:32

எப்படி ????


angbu ganesh
அக் 16, 2025 14:12

எதிர் கட்சி ஆளு ஓகே எங்களுக்கு தீவாளி வாழ்த்து சொல்லு பாக்கலாம்,


Radha Krishnan
அக் 16, 2025 14:00

வேறு என்ன திராவிட பாசம் தான்.


G Ramachandran
அக் 16, 2025 14:00

தற்போது நமக்கு 200 கிடைத்தால் போதும்.


Tirunelveliகாரன்
அக் 16, 2025 13:11

அது எங்க ஊர் பழக்கம். யாரையும் நாங்க பகைமையாக பார்க்க மாட்டோம்.


Mariadoss E
அக் 16, 2025 13:47

அப்படினா ஏன்பா


ramesh
அக் 16, 2025 17:29

நைனார் அமைச்சராக இருந்தபோது என்னுடைய வீட்டுக்கு பக்கத்து வீட்டுக்கு அடுத்த வீட்டில் தான் வாடகைக்கு தான் குடி இருந்தார் . பிறகு அடுத்த தெருவில் வீடு கட்டி குடி ஏறினார் . தான் குடி இருந்த வீடு தனக்கு ராசியான வீடு எண்தரு தெரிந்தும் கூட அந்த வீட்டிற்கு ஆசைப்படவில்லை . அப்போது அவர் கட்சி பாகுபாடு இன்றி யாரை பார்த்தாலும் நாம் வணக்கம் செலுத்துவதற்கு முன்பே இரு கை கூப்பி வணக்கம் செலுத்தும் பண்பு கொண்டவர் . இது எனக்கு கூட நடந்து இருக்கிறது . நான் DMK ஆதரவாளராக இருந்தாலும் நைனார் நாகேந்திரன் வெற்றி பெற வேண்டும் என்று நானே நினைத்தவன்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை