மேலும் செய்திகள்
தவெக நிர்வாகிகளின் முன்ஜாமின் மனு தள்ளுபடி
4 hour(s) ago | 3
ஸ்டாலினை கருணாநிதியின் ஆன்மா மன்னிக்காது: பா.ஜ., செய்தி தொடர்பாளர்
4 hour(s) ago | 2
முதல்வருக்கு ஏன் இவ்வளவு பதற்றம்: அண்ணாமலை கேள்வி
7 hour(s) ago | 39
சென்னை: கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் கூட்டுறவு சங்கங்கள், ரேஷன் கடைகளை நடத்துகின்றன. பொது வினியோக திட்டத்தின் கீழ், ரேஷன் கடைகளில் அத்தியாவசிய உணவு பொருட்கள்வழங்கப்படுகின்றன.எனவே, ரேஷன் கடைகளுக்கான வாடகை, ஊழியர் சம்பளம் உள்ளிட்ட செலவினங்களை சமாளிக்க சங்கங்களுக்கு, தமிழக அரசு ஆண்டுதோறும் மானியம் வழங்குகிறது. இந்த மானியம் குறிப்பிட்ட காலத்தில் வழங்கப்படாததால், செலவினங்களை சமாளிக்க முடியாமல் சங்கங்கள் திணறுகின்றன.இந்த சூழலில், மொத்த நிலுவை தொகையில், 2022 - 23ம் நிதியாண்டிற்காக, 225 கோடி ரூபாயை கடந்த டிசம்பரில் அரசு விடுவித்தது. இந்த தொகை, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் வாயிலாக, தொடக்க மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் வாயிலாக, அனைத்து கூட்டுறவு சங்கங்களின் கணக்கிலும் செலுத்தப்பட வேண்டும். இதுவரை, மானிய தொகை வழங்கப்படவில்லை. இதுகுறித்து, தமிழக அரசு ரேஷன் கடை பணியாளர் சங்க தலைவர் ராஜேந்திரன் கூறியதாவது:அரசு விடுவித்த மானிய தொகை, இன்னும் கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்கப்படவில்லை. இதனால் அவை, ஊழியர்களுக்கு சம்பளம் கூட கொடுக்க முடியாமல் சிரமப்படுகின்றன. அரசின் மானியத்தை வேறு பணிகளுக்கு செலவிட வாய்ப்புள்ளது. எனவே விரைந்து, மானிய தொகையை சங்கங்களுக்கு விடுவிக்க, கூட்டுறவு துறை உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
4 hour(s) ago | 3
4 hour(s) ago | 2
7 hour(s) ago | 39