உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மேட்டூர் அனல் மின் நிலையத்தில் விபத்து: இருவர் பலி

மேட்டூர் அனல் மின் நிலையத்தில் விபத்து: இருவர் பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மேட்டூர்: மேட்டூர் அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட விபத்தில் இருவர் உயிரிழந்தனர். 5க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=d4kho6sb&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மேட்டூர் 840 மெகாவாட் அனல் மின் நிலையத்தின் ஆறாவது யூனிட்டில் இன்று மாலை திடீர் விபத்து ஏற்பட்டது. சாம்பல் செல்லும் குழாய் மற்றும் மேலடுக்கு சாய்ந்தது. இதில் சிக்கி இரண்டு பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தது வெங்கடேஷ் மற்றும் பழனிசாமி என்பதும், இவர்கள் ஒப்பந்த தொழிலாளர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. 5 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்னும் சிலர் சிக்கி உள்ளதாக கூறப்படுகிறது. அவர்களை தேடும் பணி நடக்கிறது. இதனால் மின் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Velu
டிச 19, 2024 21:45

உண்மை


Barakat Ali
டிச 19, 2024 21:38

பாதுகாப்பு நடைமுறைகள், அதற்கான பயிற்சி வகுப்புக்கள் ...... இப்படியெல்லாம் அங்கே உண்டா ????


வைகுண்டேஸ்வரன் V
டிச 19, 2024 20:13

உடனே அரசியல், எதிர்மறை கருத்து?


அப்பாவி
டிச 19, 2024 18:44

கட்டுன நாளிலிருந்து காலணாவுக்கு பராமரிப்பு செஞ்சிருக்க மாட்டாங்க. அவிங்களே ஆட்டையப்போட்டிருப்பாங்க.


புதிய வீடியோ