உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஈரோட்டில் ஆசிட் டேங்கர் சுத்தம் செய்தபோது விபரீதம்; 2 பேர் உயிரிழப்பு

ஈரோட்டில் ஆசிட் டேங்கர் சுத்தம் செய்தபோது விபரீதம்; 2 பேர் உயிரிழப்பு

ஈரோடு: ஈரோடு மாவட்டம் பவானி அருகே ஆசிட் டேங்கர் லாரியை சுத்தம் செய்யும் பணியின் போது இரண்டு பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.ஈரோடு மாவட்டம், பவானி அருகே ஆசிட் ஏற்றிச் செல்லும் டேங்கர் லாரியை சுத்தம் செய்யும் பணி நடந்தது. அப்போது டேங்கர் உள்ளே இறங்கி சுத்தம் செய்யும் போது 3 ஊழியர்கள் மயக்கம் அடைந்தனர்.மயங்கி விழுந்த யுவனேந்தல் (55), சக்திவேல் (52) இருவர் உயிரிழந்தனர். செல்லப்பன் (52) உயிருக்கு ஆபத்தான நிலையில் பவானி அரசு மருத்துவமனையில் அனுமதிப்பட்டு உள்ளார். பவானி அருகே லட்சுமி நகர் அடுத்த கோண வாய்க்கால் பகுதியில் செயல்பட்டு வரும் வாட்டர் சர்வீஸ் ஸ்டேஷனில் அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

W W
மார் 31, 2025 15:05

Forced Draft Fan வைத்து முதலில் டாங்கை அதிக Time PURGE செய்தபின்னரே அஃக்சிஜென் O2 Level ,Check செய்த பின்னரே ஆட்கள் உள்ளே அனுமதிக்கப்பட்ட வேண்டும். இந்த செட் ஆப் இல்லயில் அந்த வேலையை எடுக்க கூடாது.காஸ் மாஸ்க் கொண்டு Fire & Safety ஆட்களின் கண்காணிப்பில் செயல்படுத்த பட வேண்டும்.


visu
மார் 30, 2025 16:50

இது போன்ற வாகனங்களை சுத்தம் செய்ய முறைகள் வகுக்கப்பட்டிருக்க வேண்டும்


முக்கிய வீடியோ