உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க., அரசுக்கு அடுத்த சிக்கல்; சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்த உத்தரவு ரத்து

தி.மு.க., அரசுக்கு அடுத்த சிக்கல்; சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்த உத்தரவு ரத்து

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ரூ.2 கோடி சொத்து குவித்த வழக்கில், அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்த உத்தரவை ரத்து செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக இருப்பவர் ஐ.பெரியசாமி. இவர் 2006ம் ஆண்டு முதல் 2010ம் ஆண்டு வரையிலான தி.மு.க., ஆட்சியில், அமைச்சராக இருந்த போது, வருமானத்துக்கு அதிகமாக ரூ.2 கோடி சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ஐ.பெரியசாமி, அவரது மனைவி சுசீலா, மகன்கள் செந்தில் குமார், பிரபு ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.இந்த வழக்கை விசாரித்த திண்டுக்கல் நீதிமன்றம், ஐ.பெரியசாமி மற்றும் அவரது குடும்பத்தினரை விடுவித்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் மேல்முறையீடு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை இன்று (ஏப்ரல் 28) நீதிபதி வேல்முருகன் விசாரித்தார்.அப்போது அவர் சொத்து குவித்த வழக்கில், அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார். வழக்கை மறு விசாரணை செய்யும்படி திண்டுக்கல் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டார். விசாரணையை 6 மாதங்களில் முடிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்து சிக்கல்தமிழக அமைச்சர்களாக இருந்த பொன்முடி வாய்க்கொழுப்பு பேச்சு காரணமாக பதவி இழந்துள்ளார். செந்தில்பாலாஜி, வேலை வாங்கித்தருவதாக மோசடி செய்த வழக்கில் சிக்கி பதவி இழந்துள்ளார்.சொத்துக்குவிப்பு வழக்கு மறு விசாரணைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், அமைச்சர்கள் துரைமுருகன், எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் ஆகியோர் சிக்கலில் உள்ளனர். தற்போது ஐ.பெரியசாமிக்கும் அதே நிலை ஏற்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 32 )

thehindu
ஏப் 28, 2025 21:57

கோர்ட்டுகளில் உள்ள இந்து மதவாத குண்டர்கள் ஒரு அரசுக்கு எதிராக சதிசெயகிறார்கள்


K V Ramadoss
ஏப் 29, 2025 14:15

thehindu உன் ஆதரவு ஹிந்து மத எதிர்ப்பாளர்களுக்கு என்பது பெயருக்குகந்ததாக இல்லை.. பெயரை மாற்றிக்கொள்..


K.Ramakrishnan
ஏப் 28, 2025 21:38

ஒண்ணுமே புரியல்லே உலகத்திலே என்னமோ நடக்குது மர்மமா இருக்குது


sridhar
ஏப் 28, 2025 21:19

திமுக சிபாரிசு இல்லாமல் நீதிபதி ஆனவர்களும் இருக்கிறார்கள் என்பது ஆறுதல் .


theruvasagan
ஏப் 28, 2025 20:06

ஊழல் திமிங்கிலங்களை சட்டத்தின் ஓட்டை வழியாக தப்பிக்கவிட்ட நீதிபதிகளின் மேல் விசாரணையோ தண்டனையோ எதுவும் கிடையாதா நீதி அரசர்களே. அவங்களுக்கு ஒரு காட்டு காட்டுனாதான் ஊழல் வழக்குகள் முறையாக விசாரிக்கப்பட்டு கிரிமினல் அரசியல்வியாதிகள் தண்டிக்கப்படுவார்கள்.


sridhar
ஏப் 28, 2025 18:56

அதெல்லாம் சரி சாமி இந்த 2 ஜீ வழக்கு என்னாச்சு சாமியோவ்


Anantharaman Srinivasan
ஏப் 28, 2025 18:52

நீதிமன்றங்கள் முதலில் மந்திரிகளை விடுப்பதேன்.? பின் ரத்து செய்து வழக்கை மீண்டும் எடுப்பதால் நீதிமன்றங்கன் நம்பகத்தன்மை குறைகிறது.


Easwar Kamal
ஏப் 28, 2025 17:57

இது எல்லாம் சின்ன மீன்கள். பெரிய முதலைகள் நேரு /வேலு பிடிப்பது எப்போது ? இந்த இருவரையும் பிடித்தல் திமுக ஆட்டம் அடங்கும். அது நடக்குமா ?


V RAMASWAMY
ஏப் 28, 2025 17:21

CONGRATULATIONS DRAVIDIAN MODEL FOR CLAIMING TO BE FIRST IN EVERYTHING.


Barakat Ali
ஏப் 28, 2025 16:43

அண்ணாமலை பத்தின செய்தியின்னா வரிஞ்சு கட்டிக்கிட்டு வர்ற எடுப்புகள் இங்கே கருத்து எழுதவே தயங்குறாங்களே ????


V Venkatachalam
ஏப் 28, 2025 17:32

க.உ.பீஸ் இதுக்குன்னே கனமான முக்காடு வாங்கி ஸ்டாக் வச்சிருக்கானுவ. அதில் ரெண்டு எடுத்து கண் தெரியாதபடி மூடிக்குனுவாங்க.. அதனால கருத்து வாந்தி எடுக்குறவனுங்கள தேடித்தான் கண்டு பிடிக்கணும்.


தர்மராஜ் தங்கரத்தினம்
ஏப் 28, 2025 18:14

அந்த எடுப்ஸ் ல உங்க ஆளுங்கதான் அதிகம் லுங்கியண்ணே .... ஊழல், ரவுடியிசம் இதுக்கெல்லாம் இஸ்லாத்துல அனுமதி உண்டான்னு கொஞ்சம் மதநூலைப் பார்த்து சொல்லுங்க .... நானும் தெரிஞ்சுக்கிறேன் ....


Narayanan
ஏப் 28, 2025 16:39

விடுவித்த அதே நீதி மன்றத்திற்கு மீண்டும் விசாரிக்க சொலவ்து அபத்தம் . அந்த வழக்கை வேறு இடத்திற்கு மாற்றவேண்டும் .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை