உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பெண்களை அச்சுறுத்தியவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை * கனிமொழி வலியுறுத்தல்

பெண்களை அச்சுறுத்தியவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை * கனிமொழி வலியுறுத்தல்

சென்னை:'கிழக்கு கடற்கரை சாலையான இ.சி.ஆரில் காரில் சென்ற பெண்களை விரட்டி, அச்சுறுத்தியவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தி.மு.க., துணை பொதுச்செயலர் கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.அவரது அறிக்கை:சமீபத்தில், சென்னை கிழக்கு கடற்கரை சாலையில், பெண்கள் ஓட்டி வந்த வாகனத்தை, ஆண்கள் சிலர் வழிமறித்து, அவர்களை விரட்டிச் சென்று, அச்சுறுத்திய சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. குற்றம் செய்தவர்கள் யாராக இருப்பினும், முறையான விசாரணை நடத்தி, உடனடியாக அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதை, காவல் துறை உறுதி செய்ய வேண்டும்.அதே வேளையில், பெண்கள் பாதுகாப்பில் எந்தவித சமரசமும் இருக்கக்கூடாது என்று, நினைப்பவர் நமது முதல்வர் ஸ்டாலின்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ