உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நடிகர் விஜயை பரந்தூருக்கு வர வைத்த சிறுவன் ராகுல்!

நடிகர் விஜயை பரந்தூருக்கு வர வைத்த சிறுவன் ராகுல்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

காஞ்சிபுரம்; சிறுவன் ராகுலின் பேச்சால் பரந்தூர் போராட்டக் களத்துக்கு நடிகர் விஜய் வந்துள்ள நிலையில் சிறுவன் ராகுல் பேசிய வீடியோ வைரலாகி உள்ளது.நடிகரும், த.வெ.க., தலைவருமான விஜய் இன்று (ஜன.20) பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிராக போராடும் மக்களை சந்தித்தார். போராட்டத்துக்கு முழு ஆதரவு அளிப்பதாகவும், தமிழக அரசை விமர்சித்தும் பேசினார். தனது பேச்சில், போராட்டக்களத்துக்கு தம்மை வரவழைத்த விஷயம் எது என்று நடிகர் விஜய் விளக்கமாக கூறினார். அதில், சிறுவன் ராகுல் பேசிய வீடியோ ஒன்றை பார்த்த பின்னரே இங்கு வந்து உங்களை சந்திக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது என்று தெரிவித்து இருந்தார். இதையடுத்து யார் அந்த சிறுவன், என்ன பேசினார் என்பதை இணையவாசிகள் தேட ஆரம்பித்தனர். சிறுவன் ராகுல் மழலை மொழியில் பேசியது இதுதான்; எங்களுக்கு விமான நிலையம் வேண்டாம். விவசாய நிலங்களை விட்டால் போதும். இந்த ஏரிகளை விட்டால் போதும், பள்ளிக்கூடங்களை விட்டால் போதும். எங்களுக்கு விமான நிலையம் வந்து நாங்க என்ன மேலேயே பறக்க போகிறோம். எங்களுக்கு படிக்கிற பள்ளி பாதிப்பாகிறது. அவங்க பசங்க எல்லாம் படிச்சு பெரிய ஆளாக வேண்டும் என்று நினைக்கிறாங்க. நாங்க ஆக வேண்டியதில்லையா? விவசாய நிலம் இருந்தா தானே நாங்க சாப்பிட முடியும், எதை வச்சு நாங்க சாப்பிட முடியும். ஏரி எல்லாம் இருந்தா நாங்க குளிப்போம். வெயில் டைமில் எங்களுக்கு இந்த ஏரி தேவைப்படும். அதை அழிச்சா நாங்க எங்க போவோம்?விமான நிலையம் வேண்டாம், ஊரை விட்டா போதும், எங்க பள்ளியை விட்டா போதும். நாங்க எல்லாம் படிக்க தேவையில்லையா? இவ்வாறு சிறுவன் ராகுல் வீடியோவில் பேசி இருக்கிறார்.விஜய் பேசியதை தொடர்ந்து, அவரது கட்சியினர் இந்த வீடியோவை இணையத்தில் பரப்பி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

அன்பே சிவம்
ஜன 21, 2025 10:46

1)Vijay அவர்கள், அரசாங்கம் எடுக்கும் இடம் பூமிக்கு கூடுதல் விலை அல்லது அந்த விவசாய பூமிக்கு ஈடுகட்ட வேறு விவசாய பூமி தர வேண்டும் என்று போராடினால் பரவாயில்லை. 2).அல்லது, Vijay இந்த மக்களுக்காக இனிமேல் flightயில் போக மாட்டேன் என்று சொல்லி இருந்தால் அது ஒரு நியாமான போராட்டம்.


angbu ganesh
ஜன 21, 2025 12:24

பனையூர் கொடுக்கலாமே


Nathi Magan
ஜன 20, 2025 21:52

சிறுவன் உசுப்பேத்தினதுக்கு உம்முன்னும் அரசு கடுப்பேத்துனதுக்கு கம்முன்னும் இருந்தா விஜய் ஜம்முன்னு இருக்கலாம்


Nathi Magan
ஜன 20, 2025 21:50

சிறுவன் உசுப்பேத்தினதுக்கு உம்முன்னும் அரசு கடுப்பேத்துனதுக்கு கம்முன்னும் இருந்தா விஜய் ஜம்முன்னு இருக்கலாம்


raja
ஜன 20, 2025 21:32

உங்களுக்கெல்லாம் சுயபுத்தி இல்லையா சின்னபுள்ளதனமா இருக்கே.


பாலா
ஜன 20, 2025 21:03

துண்டுச்சீட்டு 3, துண்டுச்சீட்டு 2- இழவுரசன், துண்டுச்சீட்டு 1-பூனை மேல் மதில் சுடலை


Ramesh Sargam
ஜன 20, 2025 20:32

அந்த சிறுவனை அப்படி பேசவைத்ததே விஜய் கட்சியினர்தான் என்று பின்னர் தெரியவரும்..


Sivagiri
ஜன 20, 2025 19:48

விவசாய நிலங்களை கிராமங்களை விட்டு விட்டு மஹாபலிபுரம் பக்கம் மாற்றுவதே சாலை சிறந்தது . . . G -என்ற சதுரத்திடம் கேட்டால் - ரெண்டே நாளில் , அனைத்து ரிசார்ட்களையும் காலி செய்து கொடுத்து விடுவார்கள் . . .


Alagusundram Kulasekaran
ஜன 20, 2025 19:25

அந்த சிறுவனின் உரையில் உண்மை இருக்கிறது அது அங்குள்ள விவசாயிகள் போராட்டம் நடத்தி ஒன்றும் நடக்கவில்லை அனால் நீ பாவடை சினிமா சூட்டிங் போய் எடுத்து அந்த சிறுவனின் பெயரை சொல்லி நாடகம் போடும் கூத்தாடி அந்த சிறுவனை சந்திக்க போராடியவர்கள் இடம் போய் பேசாமல் வண்டியில் இருந்து பேசி வருவது கோமாளி தனம்


KumaR
ஜன 20, 2025 18:38

எடப்பாடி ஆட்சில எதுக்கு எடுத்தாலும் போராட்டம் பண்ணும் பொது உங்க திருட்டு திராவிட தற்குறிக்கு முட்டு குடுக்கும் பொது இந்த வைகுண்டத்துக்கு தெரியலையே. போன ஆட்சில பரந்தூர் விமான நிலையம் வேண்டாம் சொன்னதும் உங்க தலைவர் தான். இப்ப வேணும் சொல்லுறீங்க.. சேலம் 8 வழி சாலை வேணாம் சொன்னிங்க இப்ப அதுக்கும் வாய துறக்க மாட்டீங்க.. போன ஆட்சில சுற்று சுழல் ஆர்வலர்கள் நிறைய பேர் எதுக்கு கத்திட்டு கத்திட்டு இருந்தாங்க.. இப்ப எல்லாரும் எங்க போனாங்க எலும்பு துண்டு நிறைய கிடைச்சிட்டு போல.


V வைகுண்டேஸ்வரன்
ஜன 20, 2025 16:53

எங்கே, எந்த ஊரில் விமான நிலையம் திட்டமிட்டாலும் எதிர்ப்பதற்கு நாலு கட்சிகள் இருக்கத் தான் போகிறது. தமிழ் நாட்டில் எங்கேயாவது, எப்படியாவது ஒரு கலவரம், அடிதடி உருவாக்கத் திட்டமிடுகிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது.


veera
ஜன 20, 2025 17:35

உண்மை....டங்ஸ்டன் திட்டத்திலும் திமுக இதையே செய்கிறது என்று சொல்லுகிறார்கள்


Arumugam Saravanan
ஜன 20, 2025 17:52

சார் ஒரு நரகத்தில் இரண்டு விமான நிலையங்கள் எதற்கு நான் பாண்டிச்சேரி ஐந்து தடவைகள் போக்குவரத்து நெரிசலை காரணமாக விமான தவறவிட்டன் வாரத்தில் மூன்று நாட்கள் சென்னை செல்ல முடியாது பரநதூர் ரத்து செய்து பாண்டிச்சேரி தமிழ் அரசு நிலத்தை ஒதுக்குவது வேண்டும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை