உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நடிகர் விஜய் ஆட்சி மாற்றத்துக்கு வித்திட வேண்டும் கஸ்துாரி

நடிகர் விஜய் ஆட்சி மாற்றத்துக்கு வித்திட வேண்டும் கஸ்துாரி

சென்னை: ''நடிகர் விஜய், தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான இலக்கை நோக்கித்தான் பயணிக்க வேண்டும்,'' என, தமிழக பா.ஜ., பிரமுகர் நடிகை கஸ்துாரி கூறினார்.

நேற்று அவர் அளித்த பேட்டி:

கரூரில் நடிகர் விஜய் சென்ற பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் இறந்து போனது துரதிருஷ்டவசமானது. அப்படியொரு நிகழ்வு நடந்திருக்கக்கூடாது. சம்பவம் நடந்த பின்பும், கரூர் மக்களும், நெரிசலில் சிக்கி பாதிப்படைந்தோர் குடும்பத்தினரும், விஜய் பக்கம் இருப்பதாக கூறுகின்றனர். ஆனால், அவரோடு இருக்க வேண்டிய, த.வெ.க., நிர்வாகிகள், அப்படி இல்லை. கரூர் மக்களுக்கு நம்பிக்கைக்குரியவராக, நடிகர் விஜய் தொடர்ந்து இருக்க வேண்டும். நடிகர் விஜய் தலைமையில் தமிழகத்தில் ஒரு கூட்டணியை கட்டமைக்க முயல்கின்றனர். ஆனால், தற்போதைய சூழ்நிலையில் அது நடக்க வாய்ப்பில்லை. அதனால், தன் தலைமையில் கூட்டணி அமைக்கும் முயற்சியை விட்டு விட்டு, இருக்கும் கூட்டணியில் தன்னை இனைத்துக் கொள்ள வேண்டும். ஆந்திராவில் அப்படித்தான் செய்தார் துணை முதல்வரான பவன் கல்யாண்; அதே பாணியில் விஜயும் செயல்பட வேண்டும். இப்போதைக்கு அவர் முன்னாள் இருக்கும் ஒரே சவால் - ஆட்சி மாற்றத்துக்கு வித்திட வேண்டும் என்பதுதான். அதை நோக்கிய பயணத்தைத்தான் அவர் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Madras Madra
அக் 21, 2025 16:56

கூட்டணி உறுதி TVK+VCK+CONG திமுக தோற்பது உறுதி அதிமுக ஆட்சி அமைப்பது உறுதி


Oviya Vijay எனும் Ajrjunan
அக் 21, 2025 11:07

அர்ஜுனா, உன்போல் அமைதிமார்க்க பூனை எல்லாம் விதவிதமான பெயர்களில் வெளிவரும்போது, வீரதமிழச்சி சிறுத்தை போல கருத்து சொல்வது, பாராட்டதக்கதே...உங்களைப் போல் பசுத்தோல் போர்த்திய புலி அல்ல எங்கள் கஸ்தூரி...ஆனால், நீர் சொன்னதில் ஓர் உண்மை...தாமரை மலராது...காரணம் சூரியனின் வெப்பம்...ஆம் அத்தனையும் மக்கள் அனுபவிக்கும் துயரங்களின் வெப்பம்...இங்கு மக்கள் மனதில் குளிர்ச்சி இல்லை...உங்களைப் போன்ற மார்க்கத்தை ஆதரிக்கும் வரை தமிழ்நாட்டில் தாமரை மலரவும் வேண்டாம். உங்களுக்கு சிறந்த, நேர்மையான ஆட்சி கிடைக்கவும் வேண்டாம்...இப்படியே பதற்றத்தில் அவதிப் படுங்கள்... ஜெய் பாரத்...


Ajrjunan
அக் 21, 2025 12:02

சிறந்த, நேர்மையான ஆட்சியா? எங்க எங்க நண்பா. சிரிக்காம கமெண்ட்ஸ் போடறீங்க


Ajrjunan
அக் 21, 2025 09:03

பூனை வெளியே வருகிறது. எந்த ரூபத்தில் வந்தாலும் தாமரை தமிநாட்டில் மலராது தாயம்மா.


திகழ் ஓவியன்
அக் 21, 2025 07:50

உண்மை அக்கா, ஆட்சி மாற்றம் நிச்சயம்...


Vasan
அக் 21, 2025 06:48

பிஜேபி 2026 போட்டியில் இருந்து விலகிக்கொள்ள வேண்டும். இதை கஸ்தூரி அக்கா மேலிடத்தில் சொல்ல வேண்டும். கொள்கை எதிரி பிஜேபி இருக்கும் கூட்டணியில் விஜய் எப்படி இணைவார்?


Senthoora
அக் 21, 2025 05:57

திராவிட ஆட்சி, கூத்தாடி ஆட்சியைவிட பரவாய் இல்லை, படங்களாவது ஒழுங்கா இருப்பாங்க.


Velan Iyengaar, Sydney
அக் 21, 2025 09:18

திராவிடன் அப்டின்னு ஒண்ணுமே இல்லை. அவனே கூத்தாடி. இதுல அடுத்தவரை செல்லும் ஈன பிறவிகள் சட்டினி யில் இருந்து...


Senthoora
அக் 21, 2025 13:14

தம்பி கூத்தாடி கூத்தடிதான், திராவிடன் திராவிடன்தான், இப்போ உங்களுக்கு புரியாது


சமீபத்திய செய்தி