உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மாற்று மதத்தினர் தேவையற்ற சொற்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்: இயக்குனர் அமீருக்கு நடிகை கஸ்துாரி பதிலடி

மாற்று மதத்தினர் தேவையற்ற சொற்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்: இயக்குனர் அமீருக்கு நடிகை கஸ்துாரி பதிலடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: ''மாற்று மதத்தினர் தேவையற்ற சொற்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்'' என இயக்குனர் அமீருக்கு மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த நடிகை கஸ்துாரி பதிலடி தந்தார்.அவர் கூறியதாவது: கும்பாபிஷேகம், முருக பக்தர்கள் மாநாடு நடத்துவதில் அரசியல் இல்லை. தி.மு.க., நடத்திய முருக பக்தர்கள் மாநாடும் சிறப்பாக நடந்தது. ஆனால் மக்களின் பேரெழுச்சியுடன் மதுரை மாநாடு நடக்கிறது. ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் இங்கு அரசியல் கட்சித் தலைவராக வரவில்லை. முருக பக்தராக வரவுள்ளது பெருமை. அதை தி.மு.க., ஆதரிக்க வேண்டும்.சனாதனத்தை ஒழிப்போம் என்று சொல்வதுதான் 'அக்மார்க்' மதவாதம். முருகனை போற்றுவோம் என்று சொல்வது ஆன்மிகம். முருக பக்தர்கள் மாநாட்டில் மத நல்லிணக்கத்தை பார்க்கப்போகிறீர்கள். முருக பக்தர்கள் என்று சொல்லி மதவாதம் செய்வதாக இயக்குனர் அமீர் கூறியுள்ளார்.மாற்று மதத்தினர் தேவையில்லாத சொற்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.அமீரின் மூதாதையர்கள் தமிழர்கள் தானே. அவர்களை அமீர் தமிழனாக நினைக்கவில்லையா எனத் தெரியவில்லை. மதுரையம் பதியில் மாற்று மதத்தினர் இதற்கு அரணாக நிற்க வேண்டும். சுல்தான் கூட கோயிலுக்கு நற்பணி செய்ததாகதான் வரலாறில் உள்ளது.த.வெ.க., தலைவர் விஜய் பிறந்தநாள் கொண்டாட்டம் ஒரு இடத்தில் தான் நடக்க வேண்டும் என்பதில்லை. எங்களுடைய ஒவ்வொருவர் மனதிலும் நடக்கிறது. அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் என்பதற்கு இணங்க, விஜய் மீதுள்ள அன்பு குறைந்து விடாது. அவர் சரியான பாதையிலேயே பயணிக்கிறார். இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 28 )

Ramesh Sargam
ஜூன் 23, 2025 21:21

மதுரையில் நேற்று நடந்த முருகர் மாநாட்டில் சேர்ந்த கூட்டம் தானா சேர்ந்த கூட்டம். ஆனால் திமுக கூட்டும் மாநாட்டில் கூடும் கூட்டம் டாஸ்மாக் தண்ணிக்காத சேர்ந்த கூட்டம்.


beindian
ஜூன் 23, 2025 17:22

அப்போ நீங்க மட்டும் மாற்றுமத மக்களின் உணவு பழக்கவழக்கங்களில் தலையிட எந்த சட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது


Ramesh Sargam
ஜூன் 23, 2025 14:31

அமீர் ஆந்திராவில் பேசி இருந்தால் பவன் கல்யாண் தன்னுடைய காலில் உள்ளதை கெழற்றி அடித்திருப்பார். தமிழகம் என்பதால் பொறுமையுடன் இருந்தார்.


சுந்தரம் விஸ்வநாதன்
ஜூன் 23, 2025 14:07

சாதாரணமாக அணியும் உடையில் கூட இந்திய கலாச்சாரத்தை அவர்களால் ஏற்றுக் கொள்ளமுடியாது. உண்மை. பேச்சும் மூச்சும் சாப்பாடும் டாஸ்மாக்கும் தமிழே என்பவர்கள் அணியும் உடை பேண்ட் சட்டையாக இருக்கிறதே .வேஷ்டி கட்ட மறுக்கிறார் களே


baala
ஜூன் 23, 2025 12:38

மாற்று மதத்தினர் மட்டுமல்ல யாராக இருந்தாலும் அதை செய்ய வேண்டும்.


Rajah
ஜூன் 23, 2025 12:34

நாகூர் எம் ஹனிஃபா இலங்கையில் ஓர் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது "தமிழர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் " என்று பேசியபோது அவரை நோக்கி கற்கள் வீசப்பட்டன. "நாங்கள் தமிழர்கள் அல்ல முஸ்லிம்கள் " என்று கோஷமிட்டனர். இது நடந்து பல வருடங்கள் ஆகிவிட்டன. இப்போது இந்தியாவில் உள்ள முஸ்லிம்களின் நிலைப்பாடும் அதுதான். சாதாரணமாக அணியும் உடையில் கூட இந்திய கலாச்சாரத்தை அவர்களால் ஏற்றுக் கொள்ளமுடியாது. இந்து மத அடையாளங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் திராவிடர்கள் இஸ்லாமிய மத அடையாளங்களுக்கு எதிர்ப்பு ஹெரிவிக்க மாட்டார்கள். இனியும் இந்த திராவிட மாயையில் வீழ்ந்து அழிந்து போகாமல் இந்துக்கள் விழித்துக்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம். திராவிடம் வாக்கு வங்கிக்காகவே இதைச் செய்கின்றது. மாறாக சிறுபான்மையினர் மீது கொண்ட பற்று அல்ல.


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜூன் 23, 2025 12:24

உச்சியிலே ஏறி ஒரு எம் பி பிரியாணி சாப்பிட்டப்ப அமீர் எங்கே போயிருந்தார் ??


வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூன் 23, 2025 11:07

கஸ்தூரி அக்கா ஒரு வழக்கறிஞர் ...அதான் அற்புதமாய் பேசுது ...


R. SUKUMAR CHEZHIAN
ஜூன் 23, 2025 10:39

சூடு சொரனை சோற்றில் உப்பு போட்டு சாப்பிடுபவர்கள் சிலர் சினிமா துறையில் உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது, அருமை கஸ்தூரி வாழ்த்துகள்.


madhesh varan
ஜூன் 23, 2025 10:35

கஸ்தூரிபோல வருமா ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை