உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 28, 29ம் தேதிகளில் பத்திரப்பதிவுக்கு கூடுதல் டோக்கன்

28, 29ம் தேதிகளில் பத்திரப்பதிவுக்கு கூடுதல் டோக்கன்

சென்னை:'ஆவணி மாதத்தில் வரும் முதல் முகூர்த்த நாட்கள் என்பதால், நாளையும், நாளை மறுநாளும் பத்திரப்பதிவுக்கு கூடுதல் டோக்கன்கள் வழங்கப்படும்' என, பதிவுத்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் சொத்து வாங்குவோர், முகூர்த்த நாட்களில் பத்திரங்களை பதிவு செய்ய விரும்புகின்றனர். இதை கருத்தில் வைத்து, முகூர்த்த நாட்களில் அதிக பத்திரங்கள் பதிவு செய்ய அனுமதிக்கப்படுகிறது. இதனால், ஆவணி மாதம் துவக்கத்தில் பத்திரப்பதிவு இயல்பை விட அதிகரிப்பது வழக்கம். அதன்படி நாளையும், நாளை மறுநாளும் பத்திரப்பதிவுக்கு கூடுதல் டோக்கன்கள் அனுமதிக்கப்படும் என, பதிவுத்துறை அறிவித்துள்ளது. இதன்படி, வழக்கமாக, 100 டோக்கன்கள் வழங்கப்படும் சார் பதிவாளர் அலுவலகங்களில், இந்த இரண்டு நாட்களிலும், 150 டோக்கன்கள் அனுமதிக்கப்படும். இதே போன்று வழக்கமாக, 200 டோக்கன்கள் அனுமதிக்கப்படும் இடங்களில், 300 டோக்கன்கள் அனுமதிக்கப்படும் என, பதிவுத்துறை அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி