உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இபிஎஸ் அடுத்த கட்ட பிரசாரம் செப்.17ல் துவக்கம்

இபிஎஸ் அடுத்த கட்ட பிரசாரம் செப்.17ல் துவக்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ், அடுத்த கட்ட பிரசாரத்தை செப். 17ம் தேதி தொடங்குகிறார்.அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான இபிஎஸ் மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் சட்டசபை தொகுதிகள் வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இதுவரை 120 தொகுதிகளில் பிரசார பயணத்தை முடித்து விட்டார். நேற்று திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தொகுதியில் பிரசாரம் மேற்கொண்டார்.இந் நிலையில் அவரின் 5ம் கட்ட பிரசார சுற்றுப்பயண விவரத்தை (செப்.17-செப்.26) அக்கட்சி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கை; 5ம் கட்ட சுற்றுப்பயண திட்டம் - செப்.17 முதல் செப்.26 வரை17.9.2025 - தருமபுரி மாவட்டம், தருமபுரி, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் சட்டசபை தொகுதிகள் 18.9.2027 - தருமபுரி மாவட்டம், பாலக்கோடு, பென்னாகரம் சட்டசபை தொகுதிகள் 19.9.2025 - நாமக்கல் - ராசிபுரம், சேந்தமங்கலம் சட்டசபை தொகுதிகள் 20.9.2025 - நாமக்கல் - நாமக்கல், பரமத்தி வேலூர் சட்டசபை தொகுதிகள் 21.09.2025 - நாமக்கல் - திருச்செங்கோடு, குமாரபாளையம் சட்டசபை தொகுதிகள் 23.09.2025 - நீலகிரி - குன்னூர், உதகமண்டலம் சட்டசபை தொகுதிகள் 24.09.2025 - நீலகிரி - கூடலூர் தொகுதி 25.09.2025 - திண்டுக்கல் மேற்கு - வேடசந்தூர் சட்டசபை தொகுதி கரூர் - கரூர் ( கரூர் டவுன்) 26.09.2025 - கரூர் - அரவக்குறிச்சி(வேலாயுதம்பாளையம்), கிருஷ்ணராயபுரம் (தரகம்பட்டி), குளித்தலை(தோகைமலை)


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Oviya Vijay
செப் 07, 2025 09:59

என்ன பண்ணி என்ன பிரயோஜனம்... ஒன்னதுக்கும் யூஸ் இல்லை... உட்கட்சியில நடக்குற குடிமிப்பிடி சண்டைக்கே உங்களால தீர்வு காண முடியல... இதுல போற இடத்துல எல்லாம் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் உங்கள் குறைகள் தீர்க்கப் படும் அப்படின்னு வெட்டிப்பேச்சு வேற... அட போங்கப்பா... அதிமுகவுக்கு சிங்குச்சா தான்... அதிமுக பாஜக கூட்டணியோட சங்க மக்கள் கடிச்சுத் துப்பப் போற தேர்தல் இது...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை