உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சென்னை மழைநீர் வடிகாலில் பலியான பெண்; அரசின் பதிலை கேட்கிறார் இபிஎஸ்

சென்னை மழைநீர் வடிகாலில் பலியான பெண்; அரசின் பதிலை கேட்கிறார் இபிஎஸ்

சென்னை:சென்னையில் மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்து பலியான பெண் குடும்பத்திற்கு தமிழக அரசு சொல்லும் பதில் என்ன என்று எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை; சென்னை சூளைமேடு பகுதியில் நேற்றைய தினம், மூடப்படாமல் இருந்த மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்து தீபா என்ற பெண் உயிரிழந்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. மூடப்படாமல் இருந்த மழைநீர் பணி பள்ளத்தை பல மாதங்களாக முடூவதற்கு அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்தும், அக்கறையற்று நடவடிக்கை எடுக்காமல் இருந்த காரணத்தினால் இந்த உயிர் பலி நடந்திருந்திருக்கிறது. உயிரிழந்த பெண்ணின் உடற்கூராய்வு அறிக்கையில், சுமார் அரை மணி நேரம் அவர் உயிருக்கு போராடியதாக வரும் தகவல்கள் பதை பதைக்க வைக்கின்றன. மழைநீர் வடிகால் பணிகள், 95%, 97% முடிவடைந்து விட்டன என்று நான்கரை ஆண்டுகளாக சதவீதக் கணக்கு போட்ட பொம்மை முதல்வர் அரசின் அமைச்சர்களும், சென்னை மேயரும் இந்த உயிரிழப்புக்கு சொல்லப்போகும் பதில் என்ன?ஆண்டுதோறும் நடக்கும் இது போன்ற மரணங்களை ஒருபோதும் ஏற்கமுடியாது. இதெல்லாம் எந்த பேக்கேஜில் வரும் என்று முதல்வர் ஸ்டாலின் சொல்வாரா? மழைநீர் வடிகால் பணிகள் முடிந்த பாடில்லை; மழைநீரும் வடிந்த பாடில்லை. இப்படிப்பட்ட ஒரு அவல ஆட்சி இருந்து என்ன பயன்?தீபா உயிரிழப்புக்கு ஸ்டாலின் மாடல் திமுக அரசு முழு பொறுப்பு ஏற்க வேண்டும். அவரது குடும்பத்திற்கு உரிய நிவாரணம் இந்த அரசு உடனடியாக வழங்கவேண்டும். மழைநீர் வடிகால் பணிகளை இனியாவது பாதுகாப்பு நெறிமுறைகளையோடு மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அந்த அறிக்கையில் இபிஎஸ் கூறி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

pakalavan
செப் 03, 2025 14:14

ஏன் ? திருச்சில ஒரு கற்பினி பென்னை எட்டி உதச்சு கொலை செஞ்சது எடப்பாடியோட ஆட்சிதானே ?


RAAJ68
செப் 03, 2025 13:43

ஆளும் கட்சியினரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இது மாதிரி இறந்தால் உடனே நடவடிக்கை எடுப்பார்கள்


Santhakumar Srinivasalu
செப் 03, 2025 13:24

தமிழ் நாட்டில் யார் இறந்தாலும் பதில் சொல்ல மாவட்டம் தோறும் ஒரு அதிகாரி வேண்டும் என்று தெரிகிறது!


pakalavan
செப் 03, 2025 13:14

கற்ப்பினி பென்னை எட்டி உதைச்சு கொலை செய்தது எடப்பாடி ஆச்சிலதான்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை