உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மயானத்தை தனியார்மயமாக்க அ.தி.மு.க., கடும் எதிர்ப்பு

மயானத்தை தனியார்மயமாக்க அ.தி.மு.க., கடும் எதிர்ப்பு

சென்னை:'சொத்து வரி உயர்வை கண்டித்ததுடன், மயானத்தை தனியார்மயமாக்குவதை, அ.தி.மு.க., கடுமையாக எதிர்க்கும்' என அக்கட்சி பொதுச் செயலர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:சென்னை மாநகராட்சியில் நிறைவேற்றப்பட்ட ஒரு சில தீர்மானங்கள், சென்னை மக்களின் பாக்கெட்டுகளில் இருந்து, நேரடியாக பணத்தை பிடுங்கும் வகையில் அமைந்துள்ளன. இது கண்டனத்துக்குரியது.ஆண்டுதோறும் 6 சதவீதம் சொத்து வரி உயர்வு; மயான பூமி அமைக்க தனியாருக்கு அனுமதி வழங்குவது என்பது, மக்களை நேரடியாக பாதிக்கக்கூடியவை.ஏற்கனவே 100 சதவீதம் மின் கட்டண உயர்வை அறிவித்ததுடன், ஆண்டுதோறும் மின் கட்டணம் மாற்றி அமைக்கப்படும் என, தி.மு.க., அரசு அறிவித்துள்ளது.அடுத்து, 6 சதவீதம் சொத்து வரி உயர்வை அறிவித்து, சென்னை மாநகர மக்களின் தலையில் இடியை இறக்கியுள்ளது. இதன் வழியே குடிநீர் வரி, கழிவுநீர் அகற்றல் வரி என, அனைத்து வரிகளும் தானாகவே உயர்த்தப்படும். இத்துடன், குப்பை அகற்றும் வரியும் உயர்த்தப்பட்டுள்ளது; இது கண்டனத்துக்குரியது.அதேபோல், மயானத்தை வியாபார நோக்கில் தனியார்மயமாக்குவதை, அ.தி.மு.க., கடுமையாக எதிர்க்கும். சென்னை மாநகராட்சியில் தற்போது பணிபுரியும் பெரும்பாலான துாய்மைப் பணியாளர்கள், கடந்த 2007 - 08ம் ஆண்டுகளில், அப்போதைய தி.மு.க., ஆட்சியில், தனியார் நிறுவனங்கள் வழியே ஒப்பந்தத் தொழிலாளர்களாக பணி அமர்த்தப்பட்டனர்.தற்போது, துாய்மைப் பணிக்கான ஒப்பந்தத்தை, வேறொரு நிறுவனத்திடம் சென்னை மாநகராட்சி ஒப்படைக்க உள்ளதாகவும், அந்நிறுவனம், நீண்டகாலமாக பணிபுரிந்து வரும் துாய்மைப் பணியாளர்களை நீக்கிவிட்டு, குறைந்த சம்பளத்தில், அண்டை மாநிலம் மற்றும் வட மாநிலங்களில் இருந்து, ஆட்களை நியமிக்க உள்ளது. இதை எதிர்த்து துாய்மைப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர். அவர்களின் பணிப் பாதுகாப்பை தி.மு.க., அரசு உறுதிசெய்ய வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இதேபோல் சொத்து வரியை 6 சதவீதம் உயர்த்தி சென்னை மாநகராட்சி தீர்மானம் நிறைவேற்றி இருப்பதற்கு, அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஏழை மக்கள் மீது சுமையை ஏற்றாமல், வருவாயை பெருக்க, ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என, அவர் வலியுறுத்தி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

அப்புசாமி
செப் 29, 2024 03:08

இப்போ மட்டும் என்ன வாழுதாம்? பிணத்தை எரிக்க அரசுக்கட்டணம் ஐநூறோ என்பவோ. ஆனா, அங்கு இருக்குறவங்களுக்கு எரிக்க மினிமம் 1500, சாம்பல் வேணும்னா இன்னொரு 1500 குடுக்கணும். கூடவே ஆம்புலன்சில் எரிமயானத்துக்கு கொண்டு செல்ல 4000. அய்யரை வெச்சு காரியம் செய்யணும்னா முதநாள் 10000. அடுத்த நாள் 10000. செத்தாலும் துக்ஜத்திற்கு அழுவதை விட இவனுங்களுக்கு அதிகமாவே அழணும். தனியாருக்கு குடுத்தா காரியம் நல்லா நடக்கும். ரெண்டு பொணம் எரிச்சா ஒண்ணு ஃப்ரீன்னு ஆஃபர் குடுப்பாங்க.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை