உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆபாச பேச்சு அமைச்சர் பொன்முடிக்கு எதிராக அ.தி.மு.க., போராட்டம் அறிவிப்பு

ஆபாச பேச்சு அமைச்சர் பொன்முடிக்கு எதிராக அ.தி.மு.க., போராட்டம் அறிவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: பெண்களையும், ஹிந்து மதத்தையும் மிகவும் ஆபாசமாக பேசிய அமைச்சர் பொன்முடிக்கு, அனைத்து தரப்பிலும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கக்கோரி, ஏற்கனவே ஹிந்து அமைப்புகள் ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ள நிலையில், பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க.,வும் களமிறங்குகிறது. வரும் 16ம் தேதி, சென்னையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை அக்கட்சி அறிவித்துள்ளது.சென்னையில் உள்ள தி.மு.க., இளைஞரணி அலுவலகத்தில், கடந்த 6ம் தேதி, பெரியார் திராவிடர் கழகம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில், அமைச்சர் பொன்முடி பங்கேற்றார். விலைமாதுவுடன் சைவம், வைணவ சமயங்களை தொடர்புபடுத்தி, ஏட்டில் அச்சேற்ற முடியாத அளவுக்கு, மிகவும் அசிங்கமாக அவர் பேசினார்.

நீக்கம்

அவர் பேசிய வீடியோ, சமூக வலைதளங்களில் பரவியதும், பொன்முடிக்கு, அவர் சார்ந்த தி.மு.க., உட்பட அனைத்து கட்சிகளின் மகளிரணியினர், பெண்கள், ஹிந்து சமய ஆர்வலர்கள் என, பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.இதற்கிடையில், தி.மு.க., துணை பொதுச்செயலர் பதவியில் இருந்து பொன்முடி நேற்று முன்தினம் நீக்கப்பட்டார். ஆனால், தமிழக அமைச்சரவையில் தொடர்ந்து அவர் நீடிக்கிறார்.அவரை அமைச்சர் பதவியில் இருந்தும் நீக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இதை, தி.மு.க., கண்டுகொள்ளாமல் இருப்பது, அக்கட்சி தொண்டர்களிடம், மகளிரிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.விழுப்புரத்தில் இருந்து சென்னை வந்த பொன்முடி, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள வீட்டுக்கு சென்று, முதல்வர் ஸ்டாலினை சந்தித்தார். பொன்முடி கொடுத்த விளக்கங்களை ஏற்காத ஸ்டாலின், அவரை எச்சரித்து அனுப்பியதாக தெரியவந்துள்ளது.தொடர்ந்து, ஹிந்துக்களையும், பெண்களையும் அவமதிக்கும் வகையில் பேசி வரும் பொன்முடியை, அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வலியுறுத்தி, விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில், நாளை மறுதினம் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.இதேபோல், மற்ற ஹிந்து அமைப்புகள் மட்டுமின்றி, பல்வேறு தரப்பினரும், சமூக ஆர்வலர்களும் போராட்டத்தை அறிவித்து வருகின்றனர். இந்நிலையில், பொன்முடியை கண்டித்து, பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க.,வும் போராட்டத்தில் குதிக்கிறது. 'பொன்முடியை அமைச்சரவையில் இருந்து நீக்க வலியுறுத்தி, வரும் 16ம் தேதி, சென்னை சைதாப்பேட்டையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:

தமிழ் பண்பாட்டில் பெண்களுக்கு அளித்து வரும் மாண்பும், மகத்துவமும் அளவிட முடியாதவை. வியப்புக்குரிய படைப்பாய், தன்னையே முழுதுமாக அர்ப்பணித்து, உலகம் இயங்க உந்து சக்தியாய் வாழ்பவர்கள் பெண்கள்.அறிவின் உருவாய், ஆற்றலின் வடிவமாய், தாய்மைக்கு இலக்கணமாய் திகழ்பவர்கள் பெண்கள். இத்தகைய போற்றுதலுக்கும், பெருமைக்கும் உரிய பெண்களை இழிவுபடுத்தும் நோக்கில், வனத் துறை அமைச்சர் பொன்முடி, சைவம் மற்றும் வைணவ சமயங்களின் குறியீடுகளை தொடர்புபடுத்தி, பெண்களை எவ்வளவு கொச்சையாக பேச முடியுமோ, அந்தளவுக்கு கொச்சைப்படுத்தி பேசியிருக்கிறார்.

வக்கிரத்தின் உச்சம்

ஒரு மனிதன் மனதில் இருக்கவே கூடாத குரூர வக்கிரத்தின் உச்சம், அவருடைய பேச்சில் வெளிப்பட்டு இருக்கிறது. தமிழகத்தின் அரசியல் மேடைகளில் நாகரிகத்தை முழுதுமாக அழித்து, அநாகரிகத்தை புகுத்தி வளர்த்த கட்சி என்றால், அது தி.மு.க., தான்.அக்கட்சியின் பல பேச்சாளர்கள், அரசியல் தலைவர்களை மட்டுமின்றி, மிக மிக அநாகரிகமாக பெண்களையும், சமயங்களையும், பல்வேறு சமய நம்பிக்கை கொண்ட மக்களையும் தொடர்ச்சியாக கொச்சைப்படுத்தி, கேவலமாக பேசி வருகின்றனர்.இதில், அந்த நாலாந்தர பேச்சாளர்களுக்கு கொஞ்சமும் குறைவில்லாமல், பொன்முடி வக்கிரத்தின் உச்சிக்கே சென்று பேசியிருக்கிற இந்த இழிவான கருத்துக்கள், தமிழக மக்களின், பெண்களின் நெஞ்சங்களில் நெருப்பை கொட்டி இருக்கிறது.பொன்முடியின் இத்தகைய கீழ்த்தரமான பேச்சுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன். பொன்முடி, உயர் கல்வி துறை அமைச்சராக இருந்தவர். அவரது அநாகரிகமான பேச்சு, மக்களிடையே மிகுந்த வேதனையையும், அதிர்ச்சியையும் அளித்துள்ளது.அமைச்சர் பொன்முடியை கண்டித்து, தமிழகத்தில் இத்தகைய அநாகரிக அரசியலுக்கு இடமில்லை என்பதை உரக்கச் சொல்லுகிற வகையில், அ.தி.மு.க., மகளிர் அணி சார்பில், வரும் 16ம் தேதி காலை 10:00 மணிக்கு, சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கும்.இந்த ஆர்ப்பாட்டம், முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி தலைமையிலும், கோகுல இந்திரா முன்னிலையிலும் நடக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 25 )

Karthik
ஏப் 14, 2025 13:44

பிஜேபி PIL/case போடவில்லை என்றால் ஹிந்துக்களின் நம்பிக்கையை இழக்க நேரிடும்


spr
ஏப் 13, 2025 18:28

திரு அண்ணாமலைக்கு அரசியலில் அனுபவமில்லை என்பதற்கு மேலுமொரு சான்று அஇஅதிமுக கைகொண்டுள்ளது EPS ஒரு அனுபவமுள்ள அரசியல்வாதி என்று நிரூபித்திருக்கிறது தமிழக பாஜக செய்திருக்க வேண்டும் இந்து மதத் தலைவர்கள் செய்திருக்க வேண்டும் வெற்றியோ தோல்வியோ நீதிமன்றம் அவர்களைக் காப்பாற்றிவிடும் என்றாலும் தனிமனிதர் செய்வதனைவிட இது நல்ல பலன் தரும் போராட்டத்துடன் தொடர்ந்து அமைச்சர் மீது பொதுநல வழக்கு தொடுத்திருக்க வேண்டும் மாற்றி மாற்றி கழக தலைவர்களை வேறு வேலை செய்யவிடாமல் நீதிமன்றத்திற்கும் வீட்டுக்குமாக அலையவிட வேண்டும் அமெரிக்காவிலேயே இந்து மதம் இஸ்லாமிய மதத்திற்கு எதிராகப் பேசினால் தண்டனை என்ற செய்தி இதே செய்த்த்தாளில் வரும் போது ஒரு இந்து நாட்டில் இது வேண்டாமா


Mecca Shivan
ஏப் 13, 2025 17:56

ஆபாச அமைச்சர் என்று கூறினாலே போதுமானது .. அனால் இந்த கட்சியில் ஆபாசமாக பேசுவது அணைத்து தலைகளும் சாதாரணமாக உள்ளது. எந்த ஆபாச அமைச்சர் என்ற குழப்பமும் வரும். இவர்கள் வீட்டு பெண்கள் அதை ரசிக்கிறார்களா ?


Vijay D Ratnam
ஏப் 13, 2025 15:31

பொன்முடிக்கு ஒட்டு போட்ட 85 சதவிகிதம் பேர் ஹிந்துக்கள்தானே. 2026 சட்டமன்ற தேர்தலிலும் போட்டியிடுவார், ஜெயிப்பார். பொன்முடி பேசியதை ஹிந்துக்கள் அடுத்த வாரம் மறந்துவிடுவார்கள். 2021 பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு ஹிந்துக்களை வேசிமகன் என்று பேசிய ஆண்டிமுத்து ராசாவை நீலகிரி தொகுதியில் ரெண்டரை லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்து அழகு பார்ப்பவர்கள் ஹிந்துக்கள்தான். ஆண்டிமுத்து ராசாவிடம் கேவலமாக தோற்றுப்போனவர் பாஜக தமிழக மாநில தலைவர் எல்.முருகன்.


Sesh
ஏப் 13, 2025 14:23

ஒவ்வாரு மாவட்ட நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட வேண்டும் , தமிழ்நாடு மட்டுமின்றி நாடு முழுவதும் தொடர பிஜேபி ஆவண செய்யவேண்டும் .


R S BALA
ஏப் 13, 2025 14:14

ஆபாச அமைச்சர் என்ற பட்டத்தை இனி இவர் ஏற்பார்..


ராமகிருஷ்ணன்
ஏப் 13, 2025 12:52

ஆபாச அமைச்சரே பதவி விலகு, திமுக அரசே ராஜினாமா செய். மத்திய அரசு டிஸ்மிஸ் செய்ய வேண்டும். அரசே ஆபாச அமைச்சரை கைது செய்.


B MAADHAVAN
ஏப் 13, 2025 12:44

மானமிகு அமைச்சர் சைவம் வைணவம் சாராத மாற்று மதத்தை ஆராதிப்பவராக இருக்கலாம். ஆனால், அவர்களது பெற்றோர் சைவமா வைணவமா என்று அவரிடம் தான் கேட்க வேண்டும்.


பேசும் தமிழன்
ஏப் 13, 2025 12:30

பொன்முடியின் ஆபாச பேச்சை.... தமிழக மக்கள் அனைவருக்கும்... குறிப்பாக இந்துக்கள் அனைவருக்கும் கொண்டு சேர்க்க வேண்டும்.. உப்பு போட்டு சாப்பிடும் இந்துக்கள் எவனும் திமுக கட்சிக்கு ஓட்டு போட மாட்டார்கள். அப்படி ஓட்டு போட்டால் அவன் இந்து பெயரில் ஒளிந்து கொண்டு இருக்கும் மதம் மாறிய ஆளாக தான் இருப்பார்கள்.


Barakat Ali
ஏப் 13, 2025 12:50

எங்களுக்கு முதலில் மதம்... பிறகுதான் எதுவும்... ஹிந்துக்களும் இப்படி இருந்தால் அனைவரும் பாதம் பணிவர் ....


தர்மராஜ் தங்கரத்தினம்
ஏப் 13, 2025 11:45

பொன்முடியைக் கண்டித்து நாலு வார்த்தை எழுதத் துப்பில்லாத குடும்பக் கட்சியின் பிராக்சி அடிமைகள் இங்கே எழுதுவதைக் கவனிக்கவும் .... அதுவும் ஹிந்து பெயரில் .... அல்லது மதம் சாராத பெயர்களில் .....


முக்கிய வீடியோ