உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டிசம்பர் 15ல் கூடுகிறது அ.தி.மு.க., பொதுக்குழு; அறிவிப்பு வெளியிட்டார் இ.பி.எஸ்.,!

டிசம்பர் 15ல் கூடுகிறது அ.தி.மு.க., பொதுக்குழு; அறிவிப்பு வெளியிட்டார் இ.பி.எஸ்.,!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னை, வானகரத்தில் டிசம்பர் 15ம் தேதி அ.தி.மு.க., செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அக்கட்சி பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., அறிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:

அ.தி.மு.க., செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் டிசம்பர் 15ம் தேதி காலை 10 மணிக்கு, சென்னை, வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில், கழக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெற உள்ளது.கழக செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் அனைவருக்கும் தனித் தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும். உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கு அனுப்பப்படும் அழைப்பிதழுடன் தவறாமல் வருகை தந்து, கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

SUBBU,
நவ 27, 2024 16:05

எம்ஜிஆர் பாடுபட்டு வளர்த்த கட்சியை கஷ்டப் படாமல் அழித்துக் கொண்டிருக்கிறார் இந்த எடப்பாடி பழனிச்சாமி. அதிமுக தொண்டர்கள் இவர் மீது நம்பிக்கை இழந்து விட்டார்கள். கட்சியும் பாதி கரைந்து விட்டது. இனி என்னதான் பொதுக்குழு கூட்டம், செயற்குழு கூட்டம் என்று வித விதமா பெயர் வைத்து பணத்தை தண்ணீராக செலவளித்து எடப்பாடி கூட்டங்களை கூட்டினாலும் கட்சியையும் தொண்டர்களையும் காப்பாற்றுவது கடினம்.


Perumal Pillai
நவ 27, 2024 12:08

ஒரு நிமிடம் மௌன அஞ்சலி admk க்கு .


sundarsvpr
நவ 27, 2024 10:54

தனிப்பட்ட நபர் சொந்த வேறுபாடுகளால் எம் ஜி யார் கட்சி தொடங்கினார். இதனை தொடந்தார் ஜெயராமன் ஜெயலலிதா. அரசாட்சியை தொடந்தனர். பல கொள்கை வேறுபாடுஇருந்தாலும் கடவுள் வழிபாடு முக்கியமான மாறுபாடு. இது அரசியலில் எடுபடவில்லை. இனிமேல் ஆஸ்திகம் சிறு சலசலப்பை உண்டாக்கும். பி ஜெ பி வளர்ச்சி ஒரு பாதிப்பை இரண்டு திராவிட கட்சிகளில் பிரிதிபலிக்கும் பழனிச்சாமி நெற்றியில் திலகம் விட்டதால் அவர் கட்சி வாக்கு வங்கி கூடும் என்று எண்ணமாட்டார்கள் மக்கள்.


Rpalnivelu
நவ 27, 2024 10:45

என்னத்த கூட்டி என்னத்த பேசி பஜ்ஜி போண்டா பிரியாணி மது சாப்டுட்டு நடைய கட்டுங்க. கட்சி பணம் கரையும் வரை சாப்பிடுங்க. சாப்பிட்டுட்டே இருங்க


Barakat Ali
நவ 27, 2024 10:39

கூட்டணியின்றி அனைத்துத் தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்களைக் களமிறக்க முடிவெடுங்கள் .....


புதிய வீடியோ