மேலும் செய்திகள்
பிரேமலதாவுக்கு அ.தி.மு.க., அழைப்பு
21-Nov-2024
சென்னை:அ.தி.மு.க., செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம், டிச., 15ல் நடக்க உள்ளது.அ.தி.மு.க., பொதுச் செயலராக பழனிசாமி பொறுப்பேற்ற பின், கடந்த ஆண்டு டிச., 26ல் செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் நடந்தது. கட்சி விதிமுறைகளின்படி, ஆண்டுக்கு ஒரு முறை பொதுக்குழு கூட்டப்பட வேண்டும். அந்த வகையில், செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம், அடுத்த மாதம் 15ம் தேதி காலை 10:00 மணிக்கு, சென்னை, வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் நடக்க உள்ளது. அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமை வகித்து கூட்டங்களை நடத்த உள்ளார்.
21-Nov-2024