உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சட்டசபை தேர்தலுக்கு தயாராகும் அதிமுக: டிச.,15 முதல் விருப்ப மனு விநியோகம்

சட்டசபை தேர்தலுக்கு தயாராகும் அதிமுக: டிச.,15 முதல் விருப்ப மனு விநியோகம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 2026ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் டிசம்பர் 15 முதல் 23 வரை விருப்ப மனு அளிக்கலாம் என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் அறிவித்துள்ளார்.தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. அதற்கு வாக்காளர் பட்டியல் அடிப்படை என்பதால், தீவிர சிறப்பு திருத்தப் பணி மும்முரமாக நடந்து வருகிறது. டிசம்பர் 16ல் வரைவு பட்டியல் வெளியாக உள்ளது. இச்சூழலில், அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=lrp3u2gd&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில் இன்று (டிசம்பர் 11) சட்டசபை தேர்தல் குறித்து இபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகம், புதுச்சேரி, கேரளா சட்டசபை தேர்தல்களில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனு அளிக்கலாம். டிசம்பர் 15ம் தேதி முதல் டிசம்பர் 23ம் தேதி வரை விருப்ப மனு விநியோகிக்கப்படும். தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் விருப்ப மனுக்கள் பெறப்படும்.டிசம்பர்15ம் தேதி மட்டும் நண்பகல் 12 மணியில் இருந்து விருப்ப மனுக்கள் விநியோகிக்கப்படும். படிவங்களில் கேட்கப்பட்ட அனைத்து விவரங்களையும் தெளிவாக பூர்த்தி செய்து, கட்சியின் தலைமையிடம் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.சட்டசபை தேர்தலுக்காக காங்கிரஸ், அமமுக கட்சிகள் ஏற்கனவே விருப்ப மனு விநியோகத்தை தொடங்கி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Ajrjunan
டிச 11, 2025 15:38

தோல்வி நிச்சயம் என்பதை தெரிந்து கொண்டதால் முன்னாள் அமைச்சர்கள் எல்லாம் ஜகா வாங்குகிறார்கள் என்ற செய்தி நம்ப தகுந்த வட்டாரங்கலில் கசிகிறது.


vivek
டிச 11, 2025 13:38

அங்கிட்டும் இங்கிட்டும் உருளுது , புரளுது ....அங்கே காங்கிரஸ் பிச்சிக்கிட்டு வெளியே போகுது...திமுக தனி மரமா நிக்குது...


R MANIVANNAN
டிச 11, 2025 14:27

கனவிலே


SIVA
டிச 11, 2025 13:33

அவரு பிஜேபி கூட கூட்டணி தான் என்று சொல்லி வேட்பு மனு வரைக்கும் வாங்க ஆரம்பிச்சு பாதி தமிழ்நாடு பிரச்சாரம் போய்ட்டு வந்துட்டாரு


SIVA
டிச 11, 2025 13:29

சரி சரி தூங்கறது போதும் எந்திருச்சு வேலையே பாருங்க 200 ரூபாய்க்காக தூக்கதுலயுமா கருத்து போடறது , காண்றது கனவா இருந்தாலும் அதுல ஒரு நியாயம் வேண்டாமா ....


திகழ்ஓவியன்
டிச 11, 2025 12:02

அதிமுக தலைமைக்குப் பிடிக்காத தினகரன், ஓபிஎஸ் ஆகியோருடன் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை அதிக நெருக்கமாக இருப்பதில் யாருக்கும் வியப்பில்லை. ஆனால், தங்களுக்குப் பிடிக்காத நபரான அண்ணாமலை, இவர்கள் இருவரையும் வைத்து என்னவோ திட்டம் தீட்டுகிறார் என்பதால் பழனிசாமி இந்த விவகாரத்தில் வெளிக்காட்டிக் கொள்ள முடியாத கோபத்தில் இருக்கிறார். அதேசமயம், அண்ணாமலையை வைத்து, தினகரனும் ஓபிஎஸ்ஸும் வேறெந்த திசையிலும் ஊடுபாய்ந்து விடாமல் இருக்க அணைபோட்டு வருகிறார் அமித் ஷா. அவரைப் பொறுத்தவரை பழனிசாமியை சாந்தப்படுத்த நயினார் நாகேந்திரனையும் ஓபிஎஸ், தினகரனுக்கு அணைகட்ட அண்ணாமலையையும் அழகாகப் பயன்படுத்தி வருகிறார். அந்தக் கட்சியில் அப்படியே இருந்து பழகிவிட்ட நயினார் நாகேந்திரன் இன்னும் முழுமையான பாஜக-காரராக மாறவில்லை. ஆனால், அண்ணாமலை அதற்கு நேர்மாறாக இருக்கிறார். அதனால் தான் அவரை ஆயுதமாக எடுத்துச் சுழற்றுகிறார் அமித் ஷா. அனால் எடப்பாடி தான் பாவம்


திகழ்ஓவியன்
டிச 11, 2025 11:52

எடப்பாடி எதற்கும் தயார் ஆகிவிட்டார் , OPS TTV சேர்க்க முடியாது, அண்ணாமலையே நீக்க வைத்தவர் அப்புறம் எப்படி இவர்களை சேர்ப்பார், கடைசி நேரத்தில் பிஜேபி யை கழட்டி விட்டு விஜய் கூட சேர்ந்து சாணக்கியருக்கு ஷாக் கொடுக்க போகிறார் பாருங்க அவர் மூவ் எல்லாம் இப்படி தான் இருக்கு


GUNASEKARAN
டிச 11, 2025 12:13

TTV and OPS ஐ சேர்த்து அவர்களுக்கு ஆளுக்கு 3 அல்லது 4 தொகுதிகள் கொடுத்தால் போதும் ADMK


முக்கிய வீடியோ