நான்காக அ.தி.மு.க., பிளவு
பெண்கள் தலைமை பதவிகளை வகிப்பது எளிதல்ல. அவதுாறுகள் மற்றும் விமர்சனங்கள் தொடர்ந்து வரிசை கட்டும். அதனை வெல்ல மிகுந்த மன உறுதி தேவை. ஜெயலலிதா ஒரு வலிமையான தலைவராகவும் முதல்வராகவும் தனித்து நின்றார். அவருடைய சாதனைகள் குறிப்பிடத்தக்கவை. நான் அவரை, ஒரு முன்மாதிரியாகவே பார்க்கிறேன். ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது, அ.தி.மு.க., மாபெரும் சக்தியாக இருந்தது. தற்போது, பழனிசாமி, பன்னீர்செல்வம், தினகரன் , சசிகலா என நான்காக பிளவுபட்டு நிற்கிறது; 'கூடி வாழ்ந்தால் கோடி நன்மை'. தே.மு.தி.க., வுக்கு ராஜ்யசபா சீட்டை, வரும் 2026ல் தருவதாக சொல்லி உள்ளனர்; பார்க்கலாம். - பிரேமலதா பொதுச்செயலர், தே.மு.தி.க.,