உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தவெகவுடன் கூட்டணி என்பது அதிமுக பரப்பும் வதந்தி: திருமா புகார்

தவெகவுடன் கூட்டணி என்பது அதிமுக பரப்பும் வதந்தி: திருமா புகார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருச்சி: தவெகவுடன் விசிக கூட்டணி என்பது அதிமுக தரப்பில் பரப்பும் வதந்தி என விடுதலை சிறுத்தைக் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.திருச்சியில் விசிக - தவெக கூட்டணி அமையுமா என்ற கேள்விக்கு திருமாவளவளன் அளித்த பதில்: இது ஒரு யூகமான கேள்வி. தவெகவுடன் விசிக கூட்டணி என்பது அதிமுக தரப்பில் பரப்பும் வதந்தி. அவர்கள் ஏற்கனவே பாஜ உடன் கூட்டணியில் இருக்கிற போது, தமிழக வெற்றிக்கழகம் அந்த அணிக்கு எப்படி வரும் என்ற கேள்வி எழுகிறது. ஏனென்றால், விஜய் பாஜ எங்களது கொள்கை எதிரி என்று ஏற்கனவே அறிவித்து இருக்கிறார். அப்படி என்றால் பாஜ, அதிமுக, தவெக ஆகிய கட்சிகள் கூட்டணியில் இருக்குமா? அல்லது பாஜவை கழற்றி விட்டு விட்டு, அதிமுக வெளியேறுவதற்கு தயாராக இருக்கிறதா? என்ற இன்னொரு கேள்வியும் எழுகிறது. எனவே அதிமுக தலைமை ஒரு கூட்டணிக்கு கூட நம்பக தன்மை உடைய ஒரு கட்சியா என்ற கேள்வி இயல்பாக எழுகிறது. பாஜவை கழற்றி விட்டு, அதன் பின்னர் தவெக உடன் கூட்டணி வைக்க அவர்கள் தயாராக இருக்கிறார்களா என்ற இந்த கேள்வி எழும் போது, அதிமுக மீதான நம்பகத்தன்மையும் கேள்விக்குறி ஆகுகிறது. இவ்வாறு திருமாவளவன் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

ராமகிருஷ்ணன்
அக் 11, 2025 14:08

தன்னுடைய மனவிருப்பத்தை சொல்லி உள்ளார்.


Sundar R
அக் 11, 2025 14:08

We could see many grea of greater risks in Thirumavalavans side. He should either address them immediately or appraise them to the people of Tamil Nadu. Only weakest of the weaker politicians will tell more about the rats and cockroaches moving around the residences of the leaders of the opposition parties.


Mr Krish Tamilnadu
அக் 11, 2025 14:04

த.வெ.க வை தனிமை படுத்த அடுத்த திட்டமா?. உங்களை போல் பேசிவிட வேண்டியது தான், அதிமுக உடன் கூட்டணி, அவர்கள் மற்றவர்களுடன் கொண்டு உள்ள கூட்டணி பற்றி கவலையில்லை. எங்கள் இலக்கை நோக்கிய பயணம். தலைமை பண்பு இல்லை, அரசியல் அனுபவம் இல்லை. என்ற பேச்சு எழுந்து விட்டது. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் ஆன சமமான ஆசை, எண்ணம் மதிக்கப்பட வேண்டும் என்ற கொள்கையால், ஆகவே கூட்டணியுடன் பயணிக்க முடிவு எடுத்து உள்ளோம். நாமே பலம் கொண்ட இரண்டு யானைகள், இப்போது நாம் மேலும் வலிமையுடன் நமது இலக்கை அடைய முற்படுவோம். நமது வார்த்தைகள் எதுவும் மாறவில்லை. அதே இரு முனை மோதல். தமிழக மக்களுக்கு எதிரான கொள்கை உடன் எந்த திட்டம் செயல்படுத்த பட்டாலும் அவர்கள் எந்த கூட்டணியில் இருந்தாலும் அந்த செயல்பாட்டை எதிர்ப்போம். இப்படி எதாவது சாமர்த்தியமாக பேச வேண்டியது தான்.


V K
அக் 11, 2025 13:56

அவன் கூட்டணி வைக்கிறான் வைக்கவில்லை விசிக எப்பொழுதும் அறிவாலயம் வாசலில் தான் இருக்கிறது


duruvasar
அக் 11, 2025 13:56

நங்கள் திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம் என்று வதந்தி பர்பினால் அது முறையா ?


கோட்டையன்
அக் 11, 2025 13:45

அ.தி.மு.க, த.வெ.க கூட்டணி வெறும் வதந்தி என்பதை ஒண்ணு அ.தி.மு.க சொல்லனும் இல்லை த.வெ.க சொல்லணும். இதை சொல்றதுக்கு நீங்க யாருன்னே? வர,வர உங்க கட்சி பிரச்சனைய விட்டுட்டு மத்த எல்லா கட்சியையும் பத்தி பேசறீங்களே? வன்னியரசும், ஆளூர் ஷா நவாசும் சேர்ந்து உங்கள விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்தே தூக்கப் போறதா மக்கள் பேசிக்கிறாங்களே அது உண்மையான்னே? இதுக்கு முதல்ல பதில் சொல்லுங்கன்னே?


RAMAKRISHNAN NATESAN
அக் 11, 2025 13:37

தவெகவுடன் அதிமுகவுக்கு கூட்டணி அமைஞ்சா அந்தக்கூட்டணியே ஆட்சி அமைக்கும் வாய்ப்பு ..... 200+ உறுதி ..... அப்படி ஆயிருச்சுன்னா விசிக மீதான வழக்குகள் தூசு தட்டி எடுக்கப்படும் ....


தர்மராஜ் தங்கரத்தினம்
அக் 11, 2025 13:31

கதறிக் கதறியே


Kjp
அக் 11, 2025 13:26

வதந்தி இல்லாமல் உண்மையாகவே இருந்தால் திருமாவுக்கு நால்வர் கூட்டணி கதை தான்.


S.L.Narasimman
அக் 11, 2025 13:15

அதிமுக கூட்டணி வைக்கதோ இல்லையோ உனக்கு ஏன் வலிக்குது. எசமானுக்கு விசுவாசத்தை இந்த அளவு காட்டணுமா.


தர்மராஜ் தங்கரத்தினம்
அக் 11, 2025 13:32

இதைத்தான் எஜமானனை மீறிய எஜமான விசுவாசம் என்று சொல்வார்கள் .....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை