உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சென்னையில் இருந்து பெங்களூரு புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு: பயணிகள் அவதி

சென்னையில் இருந்து பெங்களூரு புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு: பயணிகள் அவதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னையில் இருந்து பெங்களூரு புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.சென்னையில் இருந்து பெங்களூருக்கு பயணிகள் 109 பேர் உடன் ஏர் இந்தியா விமானம் புறப்பட தயாரானது. விமானத்தில் விமானி கடைசி நேரத்தில் தொழில்நுட்ப கோளாறு இருப்பதை கண்டறிந்தார். இதனால் விமானம் நிறுத்தப்பட்டது. விமானத்தில் தொழில்நுட்ப கோளாறை நிபுணர்கள் சரி செய்த பிறகு சென்னையில் இருந்து விமானம் புறப்பட்டு சென்றது. விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறை விமானி தகுந்த நேரத்தில் கண்டுபிடித்ததால் 109 பேர் தப்பினர். விமானம் வழக்கமான நேரத்தை விட தாமதமாக புறப்பட்டு சென்றதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். விமானத்தில் அண்மைகாலமாக, விமானத்தில் அடிக்கடி தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு வருவது பயணிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.கடந்த அக் 17ம் தேதி, இத்தாலியின் மிலன் நகரில் இருந்து டில்லிக்கு இயக்கப்படும் ஏர் இந்தியா விமானம் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டதால், தீபாவளிக்கு சொந்த ஊர் வர இருந்த இந்திய பயணிகள் கடும் அவதி அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

nisar ahmad
அக் 19, 2025 17:14

ஏர் இந்தியா விமானம் பழுதடையாமல் இலக்கை போய் சேர்தால் தான் ஆச்சரியம்.


அப்பாவி
அக் 19, 2025 17:03

ஏர் இந்தியா இயக்குனர் நியூசிலாந்து காரர். சூப்பரா வேலை செய்யறாரு.


S.V.Srinivasan
அக் 19, 2025 15:30

ரத்தன் டாடா பேரை கெடுக்கவே இப்போதுள்ள டாடா மேனேஜ்மென்ட் குறியாக இருப்பதாக தெரிகிறது. நாளொரு மேனி பொழுதொரு வண்ணமும் இவர்கள் விமானத்தில் எதாவது கோளாறு.


duruvasar
அக் 19, 2025 14:22

ஏர் இந்தியா விமானம் பாழடைந்தால் பயணிகள் அவதி என்றால் அக்டோபர் 25 கடைசி வாரத்திலிருந்து சென்னையிலிருந்து 6க்கும் மேற்பட்ட உள்நாட்டு வெளிநாட்டு சேவைகளை இந்த நிறுவனம் நிறுத்தவிருக்கிறது கேரளாவில் இருந்தும் இந்த மாதிரியான சேவை நிறுத்தத்தை அறிவித்தவுடன் சஷி தரூர் இந்த நிறுவனத்திற்கு ஒரு எச்சரிக்கை கடிதத்தை அனுப்பி கேரளா மக்கள் சார்பாக கண்டனத்தை தெரிவித்திருந்தார். நம்ப 39 பஜ்ஜிகளிடமிருந்து இதுவரை எந்த எதிர்ப்பும் வரவில்லை. இந்த அழகில் ஒரு வாசகர் ஹேமமாலினி இது வரை தமிழகதிர்காக ஒரு முறை கூட குரல் கொடு த்ததில்லை என ஒரு கருத்து பதிவிட்டிருந்தார். மக்கள் சிந்திக்காதவரை இப்படி தான் இருக்கும்.


திகழ்ஓவியன்
அக் 19, 2025 13:49

பஸ் ரோட்டில் பழுதடைந்து நின்றால் திராவிட மாடல் பஸ் எங்கு கிண்டல் செய்யும் கூட்டம் இந்தியா விமானம் கோளாறு கோளாறு ஏற்பட்டால் ஆள் அட்ரஸ் இல்லை


duruvasar
அக் 19, 2025 16:09

தமிழ்நாட்டில் அரசு நடத்தும் போக்குவரத்து துறையில் ஓடும் வாகனங்களுக்கு பெயர் பஸ் என சொல்வதற்கும் ஒரு தைரியம் வேண்டும். .


திகழ்ஓவியன்
அக் 19, 2025 18:21

நாளை தீபாவளி சென்னையில் இருந்து 3 நாட்களில் 6 லட்சம் பேர் அரசு பஸ் இல் சொந்த ஊருக்கு பயணம், அறிவாளி இது தான் உமக்கு பதில்


திகழ்ஓவியன்
அக் 19, 2025 13:46

இனி விமானம் எல்லாம் ப்ரோப்லேம் தான் போல


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை