உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அஜித்குமார் மரண வழக்கு: த.வெ.க. போராட்டம் நடத்த போலீஸ் அனுமதி

அஜித்குமார் மரண வழக்கு: த.வெ.க. போராட்டம் நடத்த போலீஸ் அனுமதி

சென்னை: திருப்புவனம் அஜித்குமார் சம்பவத்தை கண்டித்து த.வெ.க., நடத்தும் போராட்டத்துக்கு காவல்துறை அனுமதி வழங்கி உள்ளது.மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் போலீஸ் விசாரணையில் இறந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. அ.தி.மு.க., பா.ஜ., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. த.வெ.க. தலைவர் நடிகர் விஜயும் கண்டனம் தெரிவித்து உயிரிழந்த அஜித்குமார் வீட்டுக்கு சென்று ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கினார். மேலும், அவரின் மரணத்துக்கு நீதி கேட்டு, சென்னையில் ஜூலை 3ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் அறிவித்து இருந்தார். போராட்டத்துக்கு போலீஸ் தரப்பில் இருந்து அனுமதி கிடைக்கவில்லை. இதையடுத்து, ஜூலை 6ம் தேதி போராட்டம் நடத்த அனுமதி கோரி, சென்னை ஐகோர்ட்டில் த.வெ.க., தரப்பு முறையிட்டது. ஆனால் அனுமதி கிடைப்பதில் தாமதம் நிலவியதால், போராட்டம் மீண்டும் தள்ளிப்போனது.இந் நிலையில், சென்னை ஐகோர்ட்டில் த.வெ.க., தொடர்ந்த வழக்கில் போராட்டம் நடத்த அனுமதி அளிக்கப்பட்டது. கோர்ட் உத்தரவை அடுத்து,தற்போது காவல்துறையும் போராட்டம் நடத்த உரிய அனுமதியை வழங்கி உள்ளது. ஆனால் சென்னை எழும்பூர் ராஜ ரத்தினம் மைதானம் அருகே நடத்தாமல் சிவானந்தா சாலையில் போராட்டத்தை நடத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

V.Mohan
ஜூலை 07, 2025 22:07

அதிக பணம் வைத்திருக்கும் நடிகர். தன்னுடைய தந்தையின் தொடர்ந்த தூண்டுதலாலும், முயற்சியாலும் தான் திரு. ஜோசப் விஜய் அவர்கள் தமிழ் சினிமாவில் காலூன்றினார். அதன் பின் வெற்றிப்பட நாயகன் ஆனார். இதில் எந்த விதத்திலும் தமிழக மக்களுக்கு நன்மை எதுவும் கிடைக்கவில்லை, அவரும் மக்களுக்கு தனியாக எதுவும் செய்யவில்லை. சம்பந்தப்பட்ட எந்த விஷயத்திலும் அவருக்கு நேரான அனுபவமும் இல்லை. மக்களை பாதிக்கும் பிரச்னை எதிலும் அவருக்கு கட்சி துவக்கும் வரை நாட்டமோ விஷய ஞானமோ இருப்பதாக காட்டியது இல்லை. அவருடைய நடிப்பு மற்றும் பட விஷயங்களை பாதித்த திமுக ஆட்சி மீது ஏற்பட்ட கோபமே கட்சி துவங்க வைத்தது. தனது கொள்கை மற்றும் கனவுகளால் உந்தப்பட்டு அவர் கட்சியை துவக்கவில்லை. பார்க்கப்போனால் அவர் தனது கட்சிக்கான கொள்கைகளாக அறிவித்தது மற்ற கட்சிகளின் கொள்கைகளில் அவருடைய அரசியல் பயணத்துக்கு மிகவும் பயனுள்ளவற்றை எடுத்து தூசி தட்டி புதுவார்த்தைகளை போட்டு தமது கொள்கைகளாக அறிவித்து உள்ளார். தனது சொந்த விருப்பு வெறுப்புக்காக அரசியலில் நுழைந்த விஜய் தன் அரசியல் பயணத்தை இந்த காவல் நிலைய அத்துமீறல் விஷயத்தை வைத்து துவக்க முயற்சி செய்வது - ஆஹா ஹா பெரிய புத்திசா..லித்தனமான முயற்சி. வெற்றி உங்களதே ஜோசப் விஜய்


சமீபத்திய செய்தி