உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நீட் தேர்வு தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டம்: புறக்கணிப்பதாக அறிவித்தார் இ.பி.எஸ்.,

நீட் தேர்வு தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டம்: புறக்கணிப்பதாக அறிவித்தார் இ.பி.எஸ்.,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: நீட் நுழைவுத் தேர்வை ரத்து செய்வது குறித்து தி.மு.க. அரசு நாடகம் நடத்தி வருகிறது; இது தொடர்பாக மாநில அரசு கூட்டும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை புறக்கணிப்போம் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., கூறியுள்ளார்.அவரது அறிக்கை:ஏப்ரல் ஒன்பதாம் தேதி பேரவை அனைத்து சட்டமன்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தைக் கூட்ட உள்ளதாக சட்டமன்றத்தில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு செய்துள்ளார். இந்த கூட்டத்தில் அதிமுக பங்கேற்காது. 'நீட் நுழைவுத் தேர்வை மத்திய அரசுதான் ரத்து செய்ய முடியும், மாநில அரசு அல்ல, அந்த உரிமை மாநில அரசிற்கு இல்லை என்பதை ஸ்டாலினே ஒத்துக்கொண்டுள்ளார்.மேலும், 2021 சட்டமன்றப் பொதுத் தேர்தலின்போது, நீட் குறித்த வழக்கு நிலுவையில் இருந்தது தெரிந்திருந்தும் ஸ்டாலினும், உதயநிதியும் அதை மறைத்து, வாக்குகள் பெறுவதற்காக பொய்யாக தேர்தல் பிரசாரம் செய்தார்கள்.தி.மு.க.,வின் இரட்டை வேடத்தால் இதுவரை, நீட் நுழைவுத் தேர்வில் போதிய மதிப்பெண் எடுக்க முடியாது என்ற மன வருத்தத்தில் 20 மாணவ, மாணவிகள் தங்கள் இன்னுயிரை மாய்த்துள்ளனர்.2021ல் ஸ்டாலின் மாடல் திமுக அரசு பொறுப்பேற்றது முதலே, தமிழகத்தில் ஏதேனும் பிரச்சனை என்றால், உடனடியாகக் குழு அமைப்பது; அறிக்கை விடுவது; அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுவது; சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றுவது என்பது, செய்த தவறுகளை மக்களிடம் மறக்கச் செய்யும் நாடகமாக உள்ளது.நீட் நுழைவுத் தேர்வை ரத்து செய்வதாக பொய்யான வாக்குறுதி அளித்து மாணவர்களையும், பெற்றோர்களையும் ஏமாற்றியதற்கு, முதல்வர் ஸ்டாலினும், அவரது மகன் உதயநிதியும் தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்கும் காலம் விரைவில் வரும்.இவ்வாறு இ.பி.எஸ். அறிக்கையில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 30 )

chinnamanibalan
ஏப் 09, 2025 12:45

நீட் தேர்வை கொண்டு வந்தது, அன்று மத்தியில் இருந்த காங்கிரஸ்- திமுக கூட்டணி அரசுதான். 2010 ல் நீட் தேர்வு கொண்டு வந்த போது, அதை எதிர்த்து மத்திய கூட்டணி அரசிலிருந்து விலகுவதாக திமுக உறுதிபட அறிவித்து இருந்தால், நீட் தேர்வு அப்போதே காணாமல் போய் இருக்கும். ஆனால், நீட் தேர்வை நடைமுறைப்படுத்த, தமிழகத்துக்கு கால அவகாசத்தை திமுக கேட்டு பெற்றது. ஆனால் அன்று நீட் தேர்வை கொண்டு வர முழுக் காரணமாக இருந்த திமுக, இன்று நீட் தேர்வை எதிர்ப்பதாக கூறி, அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுவது தேர்தல் கால ஸ்டன்ட் ஆகும். மக்களின் மறதி மீது திமுக வுக்கு எவ்வளவு பெரிய நம்பிக்கை!!


Kasimani Baskaran
ஏப் 09, 2025 04:03

தீம்க்காவைப்பார்த்து பயந்து விட்டாரா? முகம் வாடிவிட்டது.


adalarasan
ஏப் 08, 2025 22:05

நல்ல முடிவு.சும்மா பாலிடிக்ஸ் பண்றங்க, ஒன்றும் தேறாது என்று தெரிந்தும், டிராமா செய்கின்றனர்>/TIME WASTE


T.sthivinayagam
ஏப் 08, 2025 21:45

மாண்புமிகு ஈபிஸ் அவர்களையும் ஓபே த ஆடர் தலைவராக்கி விட்டார்கள் என்று மக்கள் வேதனைப்படுகிறார்கள்


vivek
ஏப் 09, 2025 11:40

சூப்பர் முடிவு என்று அறீவீலிகு உனக்கு மக்கள் கூறுகின்றனர்


Rajendra
ஏப் 08, 2025 20:39

உப்புக்கு சப்பாணி


pandit
ஏப் 08, 2025 20:16

சூப்பர். அடுத்து துணைவேந்தராக ஞானசேகரனா? சாரா??


vadivelu
ஏப் 08, 2025 19:30

மாதம் கூட்டணி கட்சிகளுடன் ஒரு கூட்டம் போட்டு வரி பணத்தில் சில கோடி ரூ க்களை காபி, டீக்கே கொடுத்து செலவு கணக்கில் எழுதி தக்க வைக்க வேண்டிய அவசியம் அந்த விட்டதே. .


Priyan Vadanad
ஏப் 08, 2025 19:14

மக்கள் தலைவர், அரசியல் வித்தகர், ஆழ்ந்த அரசியல் அனுபவம் உள்ளவர் என்று போற்றப்படும் துணை முதல்வர் நீட் குறித்து தலைமை ஏற்று செயல்பட்டால் ஓபிஎஸ், இபிஎஸ், தினகரன், சசிகலா, ராமதாஸ் போன்ற அத்தனை தலைவர்களும் போட்டிபோட்டு ஒத்துழைக்க முன்வருவார்கள்.


தாமரை மலர்கிறது
ஏப் 08, 2025 18:51

வெரி குட். எடப்பாடி நீட் தேர்வை கடைசியாக ஆதரிக்க முடிவெடுத்து விட்டார்.


vadivelu
ஏப் 08, 2025 19:33

சுப்ரீம் கோர்ட்டுக்கு என்றால் மட்டுமே நீட் வேண்டுமா வேண்டாமா என்று முடிவு எடுக்க முடியும் என்பதை உணர்ந்தவர்.உருட்டல்கள் உங்களை போன்றோர்களுக்கு மட்டும்தான். மனிதன் வெறுப்பை விட்டு விட்டு சிந்திக்கவும் வேண்டும்.


sankaranarayanan
ஏப் 08, 2025 18:26

நீட்டாகாவே நீட்டைப்பற்றி இ.பி.எஸ். அருமையாக சொல்லிவிட்டார் இனி என்ன செய்தவரை மறைக்கவே கூட்டும் கூட்டம் இது இதற்குப்பிறகு அனைத்து மாநிலங்கள் கூட்டம் கூட்டுவார் இப்படி செய்து செய்து பிரபலமாக நினைக்கிறார் ஆனால் எதிர்மறையாகவே செல்லும்


புதிய வீடியோ