உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அதெல்லாம் மக்களிடம் எடுபடாது: அடித்துச்சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்

அதெல்லாம் மக்களிடம் எடுபடாது: அடித்துச்சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருநெல்வேலி: ''கட்சி துவங்கும்போதே ஆட்சி அமைக்கப்போகிறோம். முதல்வர் ஆகப்போகிறேன் என்கிறார்கள். இது மக்களிடம் எடுபடாது ,'' என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.திருநெல்வேலியில், வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் தி.மு.க.,வில் இணையும் நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:தேர்தலில் போட்டியிடலாமா என தொண்டர்களிடம் கருத்துக்கேட்டே தி.மு.க., தேர்தலில் களமிறங்கியது. ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஏழை எளிய மக்களுக்காக தி.மு.க., தொடர்ந்து பாடுபடும். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=9hbmghhs&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஒட்டு மொத்த தமிழினத்திற்காகவும் என்றும் பாடுபடும். தி.மு.க., படிப்படியாக வளர்ந்து 6வது முறையாக ஆட்சி அமைத்து உள்ளது. 2026லும் 7வது முறையாக தி.மு.க., ஆட்சி என்பதை மக்கள் முடிவு செய்துவிட்டனர்.கட்சி துவங்கிய உடனே நாங்கள் தான் ஆட்சி அமைக்கப் போகிறோம். நான் தான் முதல்வர் ஆகப் போகிறேன் என்கிறார்கள். தான் தான் முதல்வர் எனக்கூறுவது எல்லாம் மக்களிடம் எடுபடாது. மக்களுக்கு அனைத்தும் தெரியும். யார் மக்கள் பணியாற்றவார்கள்? யார் மக்களுக்கு தொண்டாற்றுவார்கள் என்பது மக்களுக்கு தெரியும்.இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.இந்த நிகழ்ச்சியில் பா.ஜ., முன்னாள் மாவட்ட தலைவர் தயா சங்கர் உள்ளிட்டோர், தி.மு.க.வில் இணைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 30 )

surya krishna
பிப் 07, 2025 14:54

vaai sollil veeran


vijai
பிப் 07, 2025 12:47

துண்டு சீட்டில் எழுதி கொடுக்கிறது எல்லாமே படிக்காதீங்க முதல்வரே


vijai hindu
பிப் 07, 2025 12:42

உங்களோட ஆசை ஈடுபடாது உங்களோட ஆசை 200 சீட் எடுபடாது


நரேந்திர பாரதி
பிப் 07, 2025 11:58

இரும்புக்கை மாயாவி சொன்னா சரியாத்தான் இருக்கும்


jayvee
பிப் 07, 2025 11:03

சிம்பாலிக்கா அல்வா கொடுத்து விட்டார்கள்


Sampath Kumar
பிப் 07, 2025 10:34

ஏது மக்களிடம் எடுபடும் எடுபடாது என்பதை மக்கள் நன்கு அறிவார்கள் முதல்வர் வரும் அறிவர் அதனால் தான் அவர் அறிந்து சொல்லி உள்ளார் அறியாத சில சில்வண்டுகள் கத்தினாள் கவலை இல்லை


Karthik
பிப் 07, 2025 10:22

வரும் தேர்தலில் பாரும்.. எடுபட்டது / எடுபடாதது யார் என்ன என்று தெரிந்து விடும்.


vbs manian
பிப் 07, 2025 09:56

ஆமாம். நீங்கள் சொல்வது செய்வது மட்டுமே எடுபடும். நிஜ விடியல் எப்போது.


Venkateswaran Rajaram
பிப் 07, 2025 09:53

நீங்கள் உங்கள் திருட்டு திராவிட மாடல் தொழிலை மட்டும் கவனித்தால் போதும் ...அடுத்தவர் தொழிலில் மூக்கை நுழைத்து வாய் இருக்கிறது துண்டு சீட்டு இருக்கிறது என்று ஏதாவது உளற வேண்டாம்


angbu ganesh
பிப் 07, 2025 09:49

ஏம்பா நானும் அந்த மக்களில் ஒருவன் தம்பி ஏன் எடுபடாது கண்டிப்பா என் வோட்டு உனக்கு இல்ல


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை