உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  விஜயை முதல்வராக ஏற்கும் கட்சிகளுடன் கூட்டணி: த.வெ.க.,

 விஜயை முதல்வராக ஏற்கும் கட்சிகளுடன் கூட்டணி: த.வெ.க.,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னை - பனையூரில் உள்ள, த.வெ.க., தலைமை அலுவலகத்தில், நேற்று, மாவட்டச் செயலர்கள் கூட்டம் நடந்தது. இதில், கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்கவில்லை. எனவே, பொதுச் செயலர் ஆனந்த் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இதில், செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா, நிர்மல்குமார் உள்ளிட்ட, த.வெ.க.,வின் மாநில நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில், 'ஊழல் மலிந்த தி.மு.க., ஆட்சியை அகற்றி, புதியதோர் தமிழகத்தை சிறப்புற உருவாக்க வேண்டும். அதற்காக, விஜயை முதல்வராக ஏற்று, அவரது தலைமையை விரும்பி வருவோரை, கூட்டணிக்கு அரவணைப்போம். த.வெ.க.,வின் கூட்டணி குறித்து, அனைத்து இறுதி முடிவுகளையும் எடுக்க, கட்சியின் தலைவர் விஜய்க்கு முழு அதிகாரம் வழங்கப்படுகிறது' என கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 38 )

சிட்டுக்குருவி
டிச 13, 2025 01:36

இதுவரையில் கட்சியில் சேரவில்லையென்றால் இனிமேலும் வேகமிருக்காது என்பது புலப்படுகின்றது .இதுவரையில் சேந்தவர்களை 3.2 லட்சம் என்கிறார் .அப்படியென்றால் ஒரு தொகுத்திக்கு சுமார் 1367 பேர் மட்டுமே என்றால் ஒரு முனிசிபல் கொன்சிலர்க்கூட தேரர்மாட்டார் .2 கோடி வாக்காளர் வைத்திருபவர்களுக்கே முடியுமா என்று சந்தேகப்படும் வேளையில் ஓவரான ஜோக்க்காக தெரியவில்லை .DMK வில் சேருவதற்கு வழியில்லை .அதனால் AIADMK வில் சேர்ந்தால் அரசியலில் நீடிப்பார் .இல்லையென்றால் சரித்திரம்தான் .சீமானுக்கே 30 லட்சம் வாக்காளர்கள் இருக்கின்றார்கள் .ஒரு MLA பதவிகூட பெறமுடியவில்லை .


ஜெய்ஹிந்த்புரம்
டிச 12, 2025 20:56

முதல் துண்டு பாஜக போட்டுருக்கும்.


V.Mohan
டிச 12, 2025 17:41

இல்லை, வேண்டாம், பிறகு பார்ப்போம் என்கிற வார்த்தைகளின் பவர் புரியாத தலைவராக உள்ள விஜய், வேறு கட்சி அதிருப்தி தலைவர்களை உடனுக்குடன் வரவேற்று சேர்த்துக் கொள்வது தவெக விற்கு தலைவலியாக மாறும். விஜய்யின் அரசியல் பிரவேசம் தமிழக அரசியலுக்கு புதிய உயிர் தருகிறது என்றாலும் அவரது காப்பியடித்த கொளி


Rengaraj
டிச 12, 2025 12:53

தலைமை பண்பு என்பது விஜய் கற்றுக்கொள்ளவேண்டிய பாடம். கட்சி ஆரம்பித்து இத்தனை நாட்கள் வரை வேறு எந்த கட்சியையும் அவர் கூட்டணிக்கு இழுக்கமுடியவில்லை. இதுவே அவருடைய தலைமை பண்பை பறைசாற்றி விடுகிறது. எனவே மாற்று கட்சியின் ஆட்களை மட்டும் கூட்டிட்டு வர ஏற்பாடு பண்ணுகிறார். தேர்தல் வரப்போகிறது. ஏப்ரலில் தேர்தல் என்றால் இன்னும் நூறு நாட்களில் தேர்தல் வேட்பு மனு தாக்கல் செய்யவேண்டிய கட்டாயம் கூட ஏற்படலாம். இந்த நேரத்தில் தான் அவர் தன் கூட இருப்பவர்களை சரியாக ஹாண்டில் பண்ணவேண்டும். ஆனால் அப்படி பண்ணுவதாக தெரியவில்லை.


ramesh
டிச 12, 2025 12:22

அரசியல் கட்சி ஆதரவாளர்கள் தவிர ரஜினி மற்றும் அஜித் ரசிகர் விஜய்க்கு ஒட்டு போட மாட்டார்கள் . அவர்கள் விஜய்க்கு எதிரானதோற்கவேண்டும் என்பதற்காக பலமான கட்சிக்குத்தான் ஒட்டு போடுவார்கள் பிறகு எங்கே விஜய் வெற்றிபெற . விஜய் ரசிகர்கள் தேவை இல்லாமல் கடைசியாக வந்த ரஜினி படத்தை கிண்டல் செய்து பிரச்சனை செய்தார்கள் . அதுவும் தேர்தலில் எதிரொலிக்கும்


Madras Madra
டிச 12, 2025 12:06

இவருக்கு பேராசை அதனால் பெரு நஷ்டம் ஏற்படவே வாய்ப்பு


Haja Kuthubdeen
டிச 12, 2025 11:58

டிடிவி அண்ணன் பண்ணீர் அண்ணன் தவிற வேறு யாரும் இந்த நிபந்தனையை ஏற்க மாட்டார்கள்.


சங்கர்
டிச 12, 2025 11:36

கமல் ,சிவாஜி சினிமாவில் எவ்வளவு பெரிய நடிகர் அவராலேயே அரசியலில் ஜொலிக்க முடியவில்லை.


திகழ்ஓவியன்
டிச 12, 2025 11:18

புயலால் பாதிக்கப்பட்டவங்க யாராவது இருக்கீங்களா? அண்ணன் ஆறுதல் சொல்லணுமாம் பனையூருக்கு வாங்க


திகழ்ஓவியன்
டிச 12, 2025 11:15

இன்னும் விஜய் GROUNDக்கு விளையாட வரவே இல்லை, ADMKக்கு 25-30 வரை SOLID வோட்டு வங்கி, DMKக்கு 25 % வோட்டு, அப்படி எனில் இருவரிடமும் 55 % வோட்டு , நோர்மல் ஆஹ் வோட்டு POLLING ஆவது 70 % அதிக பட்சம் அப்போ காங்கிரஸ் 2 % உள்ள பீசப்பி , 8 % உள்ள நாம் டம்பலர் , VCK , PMK ,DMDK இப்படி எல்லாம் போக இவருக்கு எத்துணை சதவீதம் தான் வரும் ஆகவே இவர் கிரௌண்ட் கு வந்தா தான் PLAYER தானா இல்லை WATER BOTTLE SUPPLIER தான என்று தெரியும்


முக்கிய வீடியோ