உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆவின் பால் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத்தொகை ரூ.140.98 கோடி ஒதுக்கீடு!

ஆவின் பால் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத்தொகை ரூ.140.98 கோடி ஒதுக்கீடு!

ஆத்துார்: ஆவின் பால் கொள்முதலுக்கான ஊக்கத்தொகை, லிட்டருக்கு 3 ரூபாய் என்ற அடிப்படையில் வழங்க, 140.98 கோடி ரூபாய் ஒதுக்கி தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது.தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், கடந்த 2023, டிசம்பர் 18, 2024, ஜனவரி முதல், ஜூன் வரை, 165.12 கோடி ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது. ஜூலை முதல் அக்டோபர் வரை, 140.98 கோடி ரூபாய் என, மொத்தம் 295.97 கோடி ரூபாய், பால் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டுள்ளது என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Ramesh Sargam
அக் 31, 2024 21:38

அத்தனை ஊக்கத்தொகையும் பால் விலையை ஏற்றி மக்கள் மீது திணிப்பார்கள். பிறகு தாங்கள்தான் ஏதோ தங்கள் சொந்தப்பணத்திலிருந்து கொடுத்ததுபோல தம்பட்டம் அடித்து மக்களை ஏமாற்றுவார்கள். மக்களும் ஒன்றும் புரியாமல் ஏமாந்து திமுகவுக்கே வோட்டு போடுவார்கள். முதலில் மக்கள் புரிந்துகொள்ளவேண்டும் இந்த திருட்டு திமுகவின் தில்லாலங்கடித்தனத்தை.


N Sasikumar Yadhav
அக் 31, 2024 18:18

ரம்ஜானுக்கும் கிஷ்மஸ்ஸுக்கும் வாழ்த்து சொல்லி அச்சிட்ட ஆவின் தீபாவளிக்கு வாழ்த்து சொல்லியதா


புதிய வீடியோ