உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  மாற்று வழிமுறைகள் தேவை

 மாற்று வழிமுறைகள் தேவை

தமிழக அரசின் வெள்ளை அறிக்கை மீது மக்கள் மத்தியில் பொது விவாதத்தை உருவாக்க வேண்டும். அரசின் எதிர்கால பொருளாதார முடிவுகளை, மக்கள் கருத்தை கேட்டு முன்னெடுக்க வேண்டும்.தேர்தல் வாக்குறுதிகளை தமிழக வெற்றிக் கழக அரசு நிறைவேற்றுவது அவசியம். வெள்ளை அறிக்கைக்கு தீர்வு காண, பொருளாதார நடவடிக்கைகள் பற்றி, பல்வேறு பிரிவினர் மத்தியில் கலந்தாலோசித்து, மாற்று வழிமுறைகளை உருவாக்க வேண்டும்.நிதிக் கூட்டாட்சி உரிமைகளை நிலைநிறுத்த, தமிழக அரசியல் கட்சிகளின் கருத்துகள் திரட்டப்படுவது காலத்தின் தேவை. மாநில அரசின் வருவாயை அதிகரிக்க தேவையான திட்டங்களை, தமிழக அரசு தீட்ட வேண்டும். - சண்முகம், மாநில செயலர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

duruvasar
ஜூன் 18, 2026 10:44

மொத்தத்தில் குட்டைய குழுப்ப கொடுக்கப்படும் குறுக்குபுத்தி அறிவுரை. உங்க கூட்டாட்சி தத்துவத்தை கொண்டு போய் குப்பையில் போடுங்க. இவனுகளை எவ்வளவு சீக்கிரம் கழற்றி வீச வேண்டுமோ அதை விஜய் விரைந்து செய்யவேண்டும்.


கண்ணன்
ஜூன் 18, 2026 09:42

உண்டியலுக்குப் பதிலாக ஏதாவது மாற்று வழி உண்டா? வெட்டியாக கொடி பிடிப்பதிற்குப் பதிலாக மாற்று வழி உண்டா? அமைதியாகத் தொழிலகள் நடக்க எப்போதாவது யோசித்தது உண்டா? உருப்படியா இந்த நாட்டிற்கு ஏதாவது செய்தது உண்டா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை