உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இன்டர்போல் போன்று இந்தியாவில் பாரத் போல் உருவாக்கம்; அமித்ஷா பெருமிதம்

இன்டர்போல் போன்று இந்தியாவில் பாரத் போல் உருவாக்கம்; அமித்ஷா பெருமிதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'இன்டர்போல்' எனப்படும் சர்வதேச குற்ற விசாரணை அமைப்பை போன்று இந்தியாவில் பாரத் போல் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.டில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில், மத்திய புலனாய்வுத் துறை (சி.பி.ஐ.,) உருவாக்கியுள்ள பாரத்போல் இணையதளத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா துவங்கி வைத்தார். இந்தியாவில் சர்வதேச காவல் துறையின் தேசிய பணியகமாக உள்ள சிபிஐ அமைப்பானது சட்ட அமலாக்க ஏஜென்சிகள், உட்பட நாடு முழுவதும் உள்ள பல்வேறு புலனாய்வு ஏஜென்சிகளுடன் இணைந்து குற்றவியல் தொடர்பான விஷயங்களில் சர்வதேச புலனாய்வு அமைப்புடன் ஒத்துழைக்க இந்த இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=9xj59lfw&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியதாவது: 'இன்டர்போல்' எனப்படும் சர்வதேச குற்ற விசாரணை அமைப்பை போன்று இந்தியாவில் பாரத் போல் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. சி.பி.ஐ., அமைப்பின் கீழ் செயல்படும் அமைப்பு சர்வதேச விசாரணை அமைப்புகளுக்கு உதவும். வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லும் குற்றவாளிகளை பிடிக்க பாரத் போல் அமைப்பு உதவி செய்யும். சர்வதேச போலீஸ் உதவியை விரைவாக அணுக முடியும். சி.பி.ஐ.,யால் உருவாக்கப்பட்ட பாரத்போல் போர்டல், நமது விசாரணை நிறுவனங்களின் உலகளாவிய அணுகலை மேம்படுத்தும், அனைவருக்கும் பாதுகாப்பான பாரதம் என்ற அரசாங்கத்தின் பார்வையை நிறைவேற்றும். இன்று ஒரு முக்கிய நாள். நமது நாட்டின் சர்வதேச விசாரணைகளை பாரத்போல் புதிய சகாப்தத்திற்கு கொண்டு செல்லும். குற்றங்களை கட்டுப்படுத்த திறம்பட செயல்பட முடியும். இவ்வாறு அமித்ஷா பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

சாண்டில்யன்
ஜன 07, 2025 21:01

எவனையாவது புடிச்சு ஐஸ்லாந்தில் ஒரு கேசில் உன்னை தேடுறாங்க போய்வான்னு அனுப்பிடலாம்


சாண்டில்யன்
ஜன 07, 2025 21:00

கைலாயத் தீவில் ஆட்சியில் உள்ளவரை கொண்டு வந்துவிடலாம்


Ramesh Sargam
ஜன 07, 2025 20:31

அப்படி என்றால் இந்தியாவுக்கு திரும்பி வராத விஜய் மல்லையா, நீரவ் மோடி போன்ற குற்றவாளிகள் சீக்கிரம் பிடிபடுவார்கள், இந்தியாவுக்கு கொண்டு வரப் பட்டு சிறைத்தண்டனை பெறுவார்கள்... அப்படித்தானே...??


Mettai* Tamil
ஜன 07, 2025 17:16

வாழ்த்துக்கள் .....


Yogeendra Bhaarati VP
ஜன 07, 2025 17:08

அருமை. மக்களுக்கு மிக நல்ல பாதுகாப்பு. நன்றிகள்....


Constitutional Goons
ஜன 07, 2025 17:07

இவர்களே ஒன்றன் பின் ஒன்றாக அனைத்தையும் அந்நிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்துவிட்டார்கள் . அந்நியத்துவத்தை நாட்டில் திணித்து விட்டாரகள். அன்னியர்களை அந்நியத்துவதை வைத்து மக்களை ஏமாற்றுவது, மிரட்டுவது பாஜ அரசுக்கு அன்றாட நீண்ட கால வேலையாகிவிட்டது


வெள்ளைச்சாமி,அறந்தாங்கி
ஜன 07, 2025 18:48

பாரதத்திற்கு படையெடுத்து வந்த அந்நியர்களின் வாரிசுகளால் மட்டுமே இப்படியொரு கருத்தை பதிவிட முடியும்.


K.n. Dhasarathan
ஜன 07, 2025 16:59

எதற்கு ? பாராட் போல் எதற்கய்யா ? கண் முன்னாள் தப்பி சென்ற விஜய் மல்லையா, லலித் மோடி போன்றவர்களை இதுவரை ஒரு புள்ளும் புடுங்க இயவில்லை, இங்கே கொண்டுவர முடிந்ததா ? சரி, ஒலிம்பிக் வீராங்கனைகள் குற்றம் சாட்டிய பிரிஜ் பூஷன் சிங்க் உள்ளேதான் சுற்றுகிறார், பாலியல் குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் பதவி நீக்கம் செய்யப்பட்டாலும் அவரது கைத்தடியை அந்த பதவியில் வைத்து வேடிக்கை பார்க்கிறார், என்ன செய்ய முடிந்தது ? முதலில் நேர்மையான, உண்மையான மனிதர்கள் வேண்டும். அது இல்லாமல் என்ன செய்து என்ன பயன் ? ஒரு பயனும் இல்லை.


veera
ஜன 07, 2025 18:19

மன்னரே...தங்கள் பதிவில் டுமில் நாடு போலீஸ் பத்தி சொல்லலையே....உஷாரு அய்யா நீங்க


RAMESH KUMAR R V
ஜன 07, 2025 16:58

ஜெய் பாரத்


ராமகிருஷ்ணன்
ஜன 07, 2025 16:50

பாரத்போல் க்கு தமிழகத்தில் நிறைய வேலை இருக்கிறது. இங்கே பொணத்தோட பணம் வைக்கும் கும்பல் இருக்குது.


கொங்கு மக்கள்
ஜன 07, 2025 16:24

Much awaited organization established. Expectations are high from western


புதிய வீடியோ