உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க.,வை வேரோடு சாய்ப்போம்: அமித் ஷா

தி.மு.க.,வை வேரோடு சாய்ப்போம்: அமித் ஷா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருநெல்வேலி: ''சட்டசபை தேர்தலில் தி.மு.க.,வை வேரோடு சாய்ப்போம் என, அமித் ஷா பேசினார்.திருநெல்வேலியில் நேற்று நடந்த பா.ஜ., பூத் கமிட்டி மாநாட்டில் பங்கேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாவது: தமிழகத்தை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் துணை ஜனாதிபதி பதவிக்கு முன்னிறுத்தப்பட்டுள்ளார். பிரதமர் மோடி எப்போதும் தமிழ் மண்ணையும், தமிழ் மக்களையும், தமிழ் மொழியையும் நேசிப்பவர்.மதத்தின் பெயரால் நடந்த பயங்கரவாத தாக்குதலை வேரோடு அழிப்பதற்காக, பாகிஸ்தானில் இருந்து செயல்பட்ட ஒவ் வொரு பயங்கரவாதியின் வீட்டுக்குள்ளும் புகுந்து அவர்களை அழித்து 'ஆப்ப ரேஷன் சிந்துார்' மூலம் சாதனை படைத்துள்ளார்.எது நல்லாட்சி என்பதை திருவள்ளுவர், திருக்குறள் மூலம் விளக்கியுள்ளார். ஒரு நல்ல மன்னன் என்பவர், அருமையான குடிமக்கள், வலிமையான சேனை, நல்ல விளைநிலம் ஆகியவற்றைக் கொண்டு செயல் பட வேண்டும் என்பதை உணர்ந்து குறள் வழியில் பிரதமர் செயல்படுகிறார்.பார்லிமென்டில் தற்போது புதிதாக ஒரு சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். முதல்வரோ, பிரதமரோ யாராக இருந்தாலும் 30 நாட்கள் சிறைக்கு செல்ல நேர்ந்தால், அவர்கள் பதவியில் தொடரக்கூடாது என்பதுதான் அந்த சட்டம்.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பல மாதங்கள் சிறையில் அமைச்சராக இருந்தார். இனி அப்படி நடக்காது. அதனால்தான், இந்த சட்டத்தை, ஸ்டாலின், கருப்பு சட்டம் என்கிறார். இருட்டு நடவடிக்கைகளில் ஈடுபடும் ஸ்டாலினுக்கு, இந்த சட்டம் பற்றி கூற தகுதி இல்லை.தமிழகத்தில் டாஸ்மாக், எல்காட், போக்குவரத்து, கனிமவளம், ரேஷன் என எல்லா துறைகளிலும் ஊழல் நிறைந்துள்ளது. வேட்டி, சேலை வாங்கியதிலும் கூட ஊழல் செய்துள்ளனர்.பா.ஜ., பூத் கமிட்டி பொறுப்பாளர்கள், வரும் 8 மாதங்களில் தொடர்ந்து தெருமுனை கூட்டங்களை நடத்த வேண்டும். தமிழகத்தில் தி.மு.க.,வை வேரோடு பிடுங்கி சாய்ப்போம். இதை சபதமாக ஏற்று செயல்படுவோம்.'தமிழகத்தில் உதயநிதியை முதல்வராக்க வேண்டும், மத்தியில் ராகுலை பிரதமர் ஆக்க வேண்டும்' என்ற ஒரே நோக்கத்தில் 'இண்டி' கூட்டணியினர் செயல்படுகின்றனர். அவர்க ள் எண்ணம் ஈடேறாது.தற்போது ஜி.எஸ்.டி., வரிவிதிப்பு குறைக்கப்பட்டுள்ளது. ஒரு லட்சம் கோடி ரூபாய் முதலீட்டில் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு திட்டங்களை பிரதமர் அறிவிக்க உள்ளார். இதையெல்லாம் மக்களிடம் கொண்டு சென்றாலே, தே.ஜ., கூட்டணி தமிழகத்தில் கட்டாயம் வெற்றி பெறும்.இவ்வாறு அமித் ஷா பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 74 )

M Ramachandran
ஆக 30, 2025 21:11

ஊர் அறிந்த உண்மையயை நீங்க உரக்க கேட்டாமட்டும் பதில் வரபோவுதா. யாரியோ குறிப்பிடுகிறார் என்பார்.


ராஜா
ஆக 23, 2025 15:50

ஒரே ஒரு பாராட்டுகள் மட்டுமே போதும் ஜகஜால பார்ட்டி தானே இல்லாமல் போய் விடும், வடக்கில் இருந்து வந்த கூட்டம் எல்லாம் எவ்வளவு நாளைக்கு வாலாட்டும்


Kadaparai Mani
ஆக 23, 2025 14:13

Very strange tamil main stream media. Why no media showing the EPS meetings which are getting crowds like MGR.Media third rate in tamil nadu. Yesterday mr.Annamalai praised EPS and wanted him to be the next CM.Why no media given headlines.In the last four years tamil media has earned very bad name and these people will be very active once EPS assumes power in 2026


திகழ்ஓவியன்
ஆக 23, 2025 13:44

ஷா அவர்களே பஞ்ச் டயலாக் அருமை ஆனா , MGR ராஜாஜி காமராஜ் ஜெயா எடப்பாடி இவ்வவ்ளு பேர் எதிர்த்தும் , வீரமா நிற்பது கருணாதி DMK , 70 வருட பாரம்பரியம் , நோட்டா வை முதலில் வெற்றி கொள்ளுங்கள்


Mettai* Tamil
ஆக 23, 2025 14:32

MGR இருந்தவரைக்கும் பாரம்பரியம் பஞ்சர் ஆகி இருந்தது. இந்தமுறை 70 வருட ஊழல் பாரம்பரியம் வீழ்த்தப்படுவது உறுதி ...


திகழ்ஓவியன்
ஆக 23, 2025 12:46

இதே அண்ணாமலை ஒரு மாதம் முன்னர் தான் தற்குறி எடப்பாடி என்று சொல்லுவிட்டு இன்று ஆட்சியில் அமர்த்தும் வரை சாப்பிட மாட்டேன் என்று சொல்லுவது , இதை ஒரு மாதம் முன்னர் சொல்லி இருந்தால் தலைவர் பதவி யில் இருந்து எடப்பாடி சொல்லி இறுக்க மாட்டார்கள் விதி வலியது


Mettai* Tamil
ஆக 23, 2025 13:44

வைகோ அவர்கள் கருணாநிதி குடும்பத்தை பத்தி பேசுனத விடவா ? கருணாநிதி அவர்கள் இந்திரா மற்றும் காங்கிரஸ் கட்சியை பத்தி பேசுனத விடவா ? அவங்க மட்டும் கூட்டணி போடலாமா ???


Amsi Ramesh
ஆக 25, 2025 18:36

தன் கட்சி தலைவரை கொன்னவனின் விடுதலைக்காக போராடி அவனை விடுவித்து கட்டை அணைத்து உச்சி மோர்ந்து அனுப்பியவர்களுடன் கூச்சமே இல்லாமல் கூட்டாளி வைத்து கொண்டிருப்பது கேவலமில்லையா ?


Eswaran
ஆக 23, 2025 12:43

தமிழ்நாடுக்கு விடிவு பிறக்கும் என்று நம்பியிருந்த போது எப்போ அண்ணாமலை என்ற மிக பெரிய தலைவரை திடீர்னு மாத்தினீஙகளோ அப்பவே பிஜேபி யோட வேர் பாதி புடுங்கிருச்சு...


Tamilan
ஆக 23, 2025 12:39

எத்தனை குண்டர்களுடன் வந்தாலும் அத்தனையையும் வென்றெடுக்கும் பலம் திமுகவிற்கு உண்டு . வீண் சவடால் வேண்டாம் . இது தமிழகத்திற்கு புதிதல்ல. உச்சிமீது வானிடிந்து வாழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை என்று தலைநிமிர்ந்து பல்லாயிரம் ஆண்டுகளாக வேரூன்றி இருக்கும் திராவிடம். அமித்ஸாவுக்கு அப்பன், தாத்தன் பூட்டனையெல்லாம் கண்டது வேரோடு சாய்த்தது திராவிடம்


Mettai* Tamil
ஆக 23, 2025 13:56

பல்லாயிரம் ஆண்டுகளாக வேரூன்றி இருக்கும் திராவிடம். ஆமாம் அந்த ஊழல் ஆலமரம் இந்தமுறை வேரோடு சாய்ப்பது உறுதி ..ஜெயிலும் உறுதி ...


திகழ்ஓவியன்
ஆக 23, 2025 12:39

தேர்தல் பத்திர ஊழல், சிஏஜி சுட்டிக்காட்டிய 7.5 கோடி ஊழல், ரஃபேல் விமான முறைகேடு ஊழல் என ஒன்றிய பாஜக அரசு மீது ஏராளமான ஊழல் குற்றச்சாட்டுக்கள் அணி வகுக்கின்றன. புலனாய்வு அமைப்புகளை வளைத்துவிட்டதால் பாஜக ஆட்சியாளர்கள் விசாரணை வளையத்தில் சிக்காமல் தப்பியோடுவது நாட்டுமக்களுக்கு நன்றாக தெரியும். ஊழல் புகார்களில் சிக்கியவர்களை பாஜக வாஷிங் மெஷினில் போட்டு, தூய்மையானவர்கள் என பட்டம் கொடுத்து பதவி கொடுத்து அழகு பார்க்கும் அமித் ஷாவிற்கு ஊழலை பற்றி பேச என்ன தகுதியிருக்கிறது ? பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்குத் திட்டமில்லை சமஸ்கிருதத்துக்கு நிதியை அள்ளிக் கொடுத்து விட்டு தமிழ் மொழிக்கு நிதி ஒதுக்க மனமில்லை தமிழர்களின் பெருமையைப் பறைசாற்றும் கீழடி உண்மையை ஏற்கத் திராணி இல்லை தமிழ்நாட்டு மீனவர்களின் கைதைத் தடுக்க வக்கில்லை இந்த லட்சணத்தில் தமிழ்நாட்டில் வெற்றி பெறுவோம் எனப் பேசக் கொஞ்சமும் வெட்கமில்லையா அமித் ஷா அவர்களே தமிழ்நாடு இன்றைக்கு நாட்டிலேயே பொருளாதாரத்தில் முதலிடத்தில் இருக்கிறது என்கிற உண்மை உறுத்தியிருப்பதால் மக்களிடம் தோற்றுப் போன இந்தப் பொய்களை நம்பி அரசியல் செய்து கொண்டிருக்கிறார் அமித் ஷா. ஆயிரம் அமாவாசைகள் வந்தாலும் சரி, பாஜகவின் நரித்தனம் தமிழ்நாட்டில் ஒருநாளும் வெற்றியடையாது விடியல் ஆட்சியை அசைத்துக் கூடப் பார்க்க முடியாது தமிழ்நாட்டின் உரிமைகளுக்கு எதிராகப் பாஜகவையும் அதன் பண்ணையடிமையாக மாறிவிட்ட அதிமுகவையும் தமிழ்நாட்டு மக்கள் 2026 தேர்தலில் ஓட ஓட விரட்டக் காத்திருக் கிறார்கள்” என்று ஆ.ராசா கூறியுள்ளார்.


Mettai* Tamil
ஆக 23, 2025 13:58

என்னதான் உருட்டுனாலும் இந்து விரோத ஊழல் வேரோடு சாய்வது நிச்சயம் நடக்கும் ...


Tamilan
ஆக 23, 2025 12:35

பாஜாவை மட்டுமல்ல இந்து மதத்தையே வேரோடு சாய்ப்போம் . மதவாத சூழ்ச்சி இங்கு எடுபடாது. ஏற்கனேவே ஒரே ஒரு பெண்ணால் உலகமெல்லாம் இந்துமதத்தின் ஒரு பெரிய மரம் வேரோடு சாய்ந்து கிடக்கிறது . எப்போதும் மீண்டு எழமுடியாது. சவடால்கள் வேற்று மிரட்டல்கள் மட்டும் இனியும் குறையவில்லை


Tamilan
ஆக 23, 2025 12:32

எந்த மிரட்டல்களுக்கும் எஞ்சியவர்கள் இல்லை திராவிட தமிழர்கள். இந்துக்களைப்போல இளித்தவாயர்களோ ஏமாளிகளோ பயந்தாங்கொள்ளிகளோ இல்லை திராவிடர்கள்


Mettai* Tamil
ஆக 23, 2025 14:07

அதென்ன திராவிட தமிழர்கள் . இந்துக்களைப்போல..... தமிழர்கள் என்றாலே அது இந்துக்கள் தான். இந்துக்கள் இருக்கும் வரைக்கும் தான் தமிழும் இருக்கும்.தமிழ் பண்பாடும் இருக்கும் . தமிழனும் இருப்பான் . பிற மதத்தவர்கள் பெயரைக்கூட தமிழில் வைப்பதில்லையே ...


முக்கிய வீடியோ