உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இளையராஜாவின் பெயரில் விருது வழங்கப்படும்; பாராட்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

இளையராஜாவின் பெயரில் விருது வழங்கப்படும்; பாராட்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: இசைஞானி இளையராஜாவின் பெயரில் விருது வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். மேலும், மத்திய அரசின் உயரிய விருதான பாரத ரத்னா வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.இசையமைப்பாளர் இளையராஜாவின் 50 ஆண்டு இசைப்பயணத்தை கவுரவிக்கும் விதமாக, அரசு சார்பில் அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதில், முதல்வர் ஸ்டாலின், நடிகர்கள் ரஜினி, கமல் ஆகியோர் பங்கேற்றனர். அவர் இசையமைத்த பாடல்கள் நிகழ்ச்சியில் பாடப்பட்டது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=5pvggswq&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

கமல்ஹாசன் பேசியதாவது:

உயிரே உறவே தமிழே வணக்கம், இது வரவேற்புரை அல்ல இருந்தாலும் எல்லோரையும் மறுபடி மறுபடி வரவேற்க வேண்டும்போல் தோன்றுகிறது. நாம் இசையில் நனைந்ததை போல, நமது மண்ணையும் இசை நனைந்திருக்கிறது. அதிக பிரசங்கம் செய்வது நன்றாக இருக்காது. அண்ணன் இளையராஜாவுடன் நான் கடந்து வந்த இந்த 50 வருட நிலையை ஒவ்வொரு வாக்கியமாக சொன்னால் இந்த விழா நேரம் போதாது. அதனால் அவருக்காக நான் எழுதிக்கொண்டு வந்திருக்கிறேன்.நல்லவேளை இசை கலைஞர்கள் எல்லாம் போயிட்டாங்க. அதனால ஸ்ருதி சேரலனா மன்னிச்சுக்கோங்கோ. இந்த விழாவுக்கு முதலில் நான் நன்றி சொல்ல வேண்டும். முதல்வருக்கு பெயர் வைத்த அதே மாமனிதர்தான், என் அண்ணன் இளையராஜாவுக்கும் எனக்கும் பெயர் சூட்டினார்கள். இந்த விழாவில் நாம் பேசுவது எனக்கு எவ்வளவு பெருமையாக இருக்கும் என்பது என் அண்ணனுக்கு தெரியும் இந்த இசைஞானிதான் என் அண்ணன்.உனை ஈன்ற உலகுக்கொரு நன்றி...நமைச்சேர்த்த இயலுக்கும் நன்றி...மாறாத ரசிகன் சொல்லும் நன்றி... நன்றி...மனம் கொண்ட உறவு சொல்லும் நன்றி... நன்றி...உயிரே வாழ்... இசையே வாழ்... தமிழே வாழ்... என்று இளையராஜாவை பாராட்டி பாட்டுப்பாடினார்.

அதன்பிறகு நிகழ்ச்சியில் ரஜினி பேசியதாவது;

இந்திய நாட்டு அரசியலில் ஒரு நட்சத்திரமாக இருந்து கொண்டு, தமிழக அரசியலில் இந்திய நாட்டை ஆளும் கட்சியினருக்கும், புதிய, பழைய எதிர்க்கட்சியினருக்கும் ஒரு சவாலாக இருந்து கொண்டு, வாங்க 2026ல் பார்த்து கொள்ளலாம் என்று தனக்கே உறுதியான புன்னகையுடன் செயல்பட்டு கொண்டிருக்கும் என் நண்பர் முதல்வர் ஸ்டாலினுக்கு வணக்கம். சிம்பொனி எழுதி இதனை லண்டனில் அரங்கேற்றப் போகிறேன் என்று அறிவித்த உடனே முதல்வர் இளையராஜாவை நேரில் சென்று பாராட்டினார். மேலும், சிம்பொனியை முடித்துக் கொண்டு வந்த இளையராஜாவுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளித்து, பாராட்டு விழா நடத்துவதாக அறிவித்தார். அதன்படி, இந்தப் பாராட்டு விழாவை நடத்தியுள்ளார். புராணங்களில் அதிசய மனிதர்களை பார்த்துள்ளேன். ஆனால், கண்ணால் பார்த்த அதிசய மனிதர் இளையராஜா. அவரை பற்றி நிறைய பேசலாம். 1970,80ம் ஆண்டுகளில் அவர் போட்ட பாட்டுகளைப் இப்போது படங்களில் பயன்படுத்தினாலும் செம ஹிட்டாகி விடும். ஒரு 1,600 பாடங்கள், 800 படங்கள், 1,500 பாடல்களை பாடியுள்ளார். 50 வருடம் என்பது சாதாரண விஷயமா? கிராமங்களில் நெல் குவியலை ஒருவன் அளந்து கொடுப்பான், ஒருவன் தள்ளி கொடுப்பான். அதைப் போல, ராகங்களின் ராசியை வந்து ராக தேவி, இந்த ராக தேவனுக்கு தள்ளி கொடுப்பாள். இவர் ஹார்மோனியத்தில் அள்ளி கொடுக்கிறார். அனைவருக்கும் ஒரே மாதிரியான இசையை தான் போடுகிறேன் என்கிறார் இளையாராஜா. ஆனால், அதில் உண்மையில்லை. கமல்ஹாசனுக்கு மட்டும் கொஞ்சம் எக்ஸ்டிரா. இசை உலகில் இளையராஜா இருக்கிறார். எஸ்பிபி மற்றும் விவேக்கின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. தம்பி, மனைவி, மகளுக்கு சிந்தாத கண்ணீரை நண்பன் எஸ்பிபிக்காக சிந்தினார் இளையராஜா. நீதி, நியாயம், உண்மையோடு உழைத்தால் அனைத்தும் உன்னை தேடி வரும், என்றார். முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது; நேற்று இல்லை நாளை இல்லை, எப்பவும் நீ ராஜா. இசை எனும் தேனை உலகத்திற்கே தரும் இந்த தேனிக்காரரை பாராட்ட இங்கு எல்லோரும் கூடியிருக்கிறோம். இளையராஜா கலைத் தாய்க்கு மட்டுமல்ல, தமிழ்த்தாய்க்கும் சொந்தமானவர். பாராட்டும், புகழும் இளையராஜாவுக்கு புதிதா? நிச்சயமாக சொல்கிறேன் கிடையாது. அவரை பாராட்டுவதில் நாம் தான் பெருமையடைகிறோம். இன்னும் சொல்ல வேண்டுமெனில், நம் இதயங்களை ஆளத் தொடங்கி அரை நூற்றாண்டு காலமாகி விட்டது. ஒட்டுமொத்த தமிழகர்களின் சார்பில் உங்களின் ஒருவராக அவரை வாழ்த்துகிறேன். ராஜாவின் பாடல்களை முணுமுணுக்காதவர்களே கிடையாது. ராஜாவின் பாடலை தனது மனதில் ஏற்றி இன்ப, துன்பங்களுக்கு பொருத்திப் பார்க்காத ஆட்களே இருக்க முடியாது. தாய் தாலாட்டாக இருந்திருக்கிறது. இவர் இளையராஜா மட்டுமல்ல, இணையற்ற ராஜா. மொழி, எல்லையை கடந்து அனைவருக்குமானவர் இளையராஜா. இவர் மட்டும் இசையமைத்திருந்தாலும், திருக்குறள், நற்றிணை, புறநானூறு, சிலப்பதிகாரம் எல்லாம் எங்களுக்கு மனப்பாடம் ஆகியிருக்கும் என்று சமூக வலைதளத்தில் ஒருவர் எழுதியிருந்தார். நானும் இதையே தான் ஒரு கோரிக்கை வைக்கிறேன். சங்கத் தமிழ், தமிழ் இலக்கியங்களுக்கு இசையமைத்து ஒரு ஆல்பம் வெளியிட வேண்டும். இளையராஜாவின் பெயரில் விருது வழங்கப்படும் என்ற அறிவிக்கிறேன். நமது இளையராஜாவின் சாதனைகளுக்கு எந்த மகுடமும் சூட்டினாலும் அது சாதாரணம் தான். அப்படிப்பட்ட மேதைக்கு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறேன், இவ்வாறு அவர் கூறினார். இளையராஜா பேசியதாவது; இதுவரையில் எந்த அரசும், ஒரு இசையமைப்பாளருக்கு பாராட்டு விழா நடத்தியதில்லை. முதல்முறையாக அதை நடத்தியது தமிழக அரசு தான். என்னால் நம்பவே முடியவில்லை. என் மேல் இவ்வளவு அன்பு வைப்பதற்கு காரணம் இசை தானா? காரைக்குடியில் நடந்த பாராட்டு விழாவில் தான் கருணாநிதி எனக்கு இசைஞானி என்று பெயர் சூட்டினார். என்னுடைய குழந்தைகளுக்காக நான் நேரத்தை செலவிடவில்லை. அப்படி செலவிட்டிருந்தால், இந்த சிம்பொனியையும், நீங்கள் விரும்பி கேட்கும் பாடல்களையும் நீங்கள் கேட்டிருக்க முடியாது. கிராமத்தில் இருந்து வந்ததால் கிராமத்து சாயலோ, சினிமா படங்களின் சாயலோ வந்து விடக் கூடாது. நான் தமிழகத்தையோ, இந்தியாவைச் சேர்ந்தவனாகவோ இந்த சிம்பொனியில் வந்து விடக கூடாது என்ற கட்டுப்பாட்டோடு, 35 நாட்களில் இசைக்குறிப்புகளை எழுதினேன்.சிம்பொனிக்கு உதவிய ஸ்ரீராமுக்கு நன்றி.

ரஜினி - இளையராஜா அலப்பறை

இருநாட்களுக்கு முன்பு போன் செய்த ரஜினி, நாம் பண்ணியதை அனைத்தும் சொல்லி விடுவேன் என்று கூறினார். நானும், மகேந்திரனும், ரஜினியும் மது அருந்தினோம். அப்போது, அரை பாட்டில் பீர் குடித்து விட்டு ஆடிய ஆட்டம் இருக்கே. அதைப் பற்றி சொல்லி விடுவேன் என்றார், உடனே மேடையில் இருந்து எழுந்து வந்த ரஜினி, 'விஜிபியில் வந்து ஜானி பட கம்போசிங். அங்கு சூட் பண்ணிட்டு இருந்ததால், அங்கேயே தங்கியிருந்தோம். அப்போது, நானும், மகேந்திரனும் மது அருந்தினோம். அப்போது, அங்கு வந்த இளையராஜாவும் அரை பாட்டில் பீர் அடித்தார். 3 மணி வரையில் ஆட்டம் போட்டார். அதன்பிறகு கிசு கிசுக்களை எல்லாம் கேட்டார். குறிப்பாக, ஹீரோயின்ஸ் பத்தி எல்லாம். இன்னும் நிறைய இருக்கு,' என்றார். இதைக் கேட்டு அரங்கில் இருந்தவர்கள் கலகலவென சிரித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Padmasridharan
செப் 15, 2025 08:22

பாடகி ஜானகி தாயைக் காணோம்.. பீர் பாட்டிலை பற்றிப்பேசி TASMACற்கு வோட்டு போட்டுவிட்டார்கள் மக்களிடையே. . திரையுலகத்தை சார்ந்தவர்கள்தான் குழந்தைகளை விட்டு தொழிலில் கோடி பணத்துக்காகவும் புகழுக்காகவும் வேலை செய்கின்றனர். அரசியலில் எட்டிப்பார்க்கின்றனர். சாதாரண மக்களிடையே ஏன் இதை நுழைக்கின்றனர். தற்பொழுது இவர்களும் குழந்தைகளை கவனிப்பதில்லையே, குடியும் கும்மாளமுமாய் இருக்கின்றனரே இலவசத்துக்கு அடிமைகளாய் சாமி.


Srprd
செப் 14, 2025 13:24

Rajini has become a campaigner for the DMK. The day he started acting for Sun Pictures, he sold out his neutrality.


தர்மராஜ் தங்கரத்தினம்
செப் 14, 2025 18:52

What neutrality was he maintaining even before that? He is ever craving for money and he himself a best opportunist.


Barakat Ali
செப் 14, 2025 09:54

ஆரியரை எப்படி பாட அனுமதித்தார்கள் பச்சைத் திராவிடர்கள் ????


Barakat Ali
செப் 14, 2025 09:51

ஆனால் அதைப்புரிந்து கொள்ளும் பக்குவமோ, அறிவு முதிர்ச்சியோ இருக்கிறதா துக்ளக்காருக்கு ????


Barakat Ali
செப் 14, 2025 09:49

அரசு விழாவில் சூப்பரு ஸ்டாரு போன்றவர்கள் சரக்கடிப்பது பற்றிப் பேசியுள்ளனர். இது தமிழ்நாட்டுக்கே அவமானம் .....


Barakat Ali
செப் 14, 2025 09:48

அரசு சார்பில் அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. காரணம் இளையராஜாவின் ரசிகர்களின் வாக்கு வங்கியைக் கவர வேண்டும் .....


Ethiraj
செப் 14, 2025 08:55

Expenditure on this function will be borne by DMK. party


தியாகு
செப் 14, 2025 00:35

இசை ஞானி, ஏ ஆர் ரகுமான், தேவா, வித்யாசாகர், பரணி, மணி சர்மா, பரத்வாஜ், எஸ் ஏ ராஜ்குமார் இவர்களெல்லாம் இருந்தவரையில் இசை இருந்தது, எப்போது நேபோட்டிசம் மூலம் இசை ஞானம் இல்லாத காதை கிழிக்கும் அனிருத் என்ற இசை கோளாறு வந்ததோ அப்போதே தமிழ் சினிமா இசை மெல்ல சமாதியாகிவிட்டது.


தியாகு
செப் 14, 2025 00:28

நான் பார்த்தவரையில் ரஜினியைப்போல காரியவாதியை எங்குமே பார்க்க இயலாது. அரசியலில் அவர் எப்போதுமே பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன். அவரை சொல்லி குற்றமில்லை, அவரையும் தெய்வத்திற்கு நிகராக பாவிக்கும் டுமிழ் சினிமா ரசிக விசிலடிச்சான் குஞ்சு கிறுக்கு கண்மணிகளை சொல்லணும்.


Barakat Ali
செப் 14, 2025 09:55

யாருக்கு, எப்போ பல்லு படாம பண்ணனும் ன்னு தெரிஞ்சு நடந்துப்பாரு சூப்பரு .....


Tamilan
செப் 14, 2025 00:25

மோடி பாரத ரத்னா விருது கொடுக்கவேண்டும் என்றும் கூறியிருக்கிறார்