வாசகர்கள் கருத்துகள் ( 2 )
ஐந்து திட்டங்களுக்கும் ஒரே விஞ்ஞான முறை நோக்கம்தானே?
இது திமுகவுக்கு கைவந்த கலை.. ஓசி என்றால் ஓடோடி வருவார்கள்
நமது சிறப்பு நிருபர்தமிழகம் முழுவதும் இன்று (டிசம்பர் 27) நடந்த டிஆர்பி தேர்வில் திமுக அரசின் திட்டங்களின் நோக்கம் மற்றும் தாக்கங்கள் குறித்து கேட்கப்பட்ட கேள்வி, சர்ச்சையை கிளப்பியுள்ளது.ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.) சார்பில் அரசு கலை, அறிவியல் மற்றும் அரசு கல்வியியல் (பி.எட்.) கல்லூரிகளுக்கான உதவி பேராசிரியர் தேர்வு தமிழகம் முழுவதும் இன்று நடத்தப்பட்டது. 2,708 உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப, 195 மையங்களில் இந்த தேர்வு நடத்தப்பட்டது. 42,000 பேர் தேர்வு எழுதினர். காலை, மதியம் என இரு பிரிவுகளாக தேர்வு நடத்தப்பட்டது. காலை கொள்குறி தேர்வு, மதியம் விரிவான விடை எழுதும் தேர்வு நடத்தப்பட்டன. மதியம் நடந்த தேர்வில், திமுக அரசின் திட்டங்களின் நோக்கம் மற்றும் தாக்கங்கள் குறித்து கேட்கப்பட்ட கேள்வி கடும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.* இல்லம் தேடிக் கல்வி (10 மதிப்பெண்கள்)* நான் முதல்வன் திட்டம் (10 மதிப்பெண்கள்)* முதல்வரின் காலை உணவுத் திட்டம் (10 மதிப்பெண்கள்)* கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் (10 மதிப்பெண்கள்)* முதல்வரின் காக்கும் கரங்கள் (10 மதிப்பெண்கள்)இந்த திட்டங்களின் நோக்கம், அவற்றின் தாக்கம் ஆகியவை பற்றிய கேள்வி, இணையத்தில் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது. உதவி பேராசிரியர் தேர்வை பயன்படுத்தி திமுக அரசு ஓசியில் தேர்தல் பிரசாரம் செய்வதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
ஐந்து திட்டங்களுக்கும் ஒரே விஞ்ஞான முறை நோக்கம்தானே?
இது திமுகவுக்கு கைவந்த கலை.. ஓசி என்றால் ஓடோடி வருவார்கள்