உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / குடிநீர் வாரிய ஒப்பந்த ஊழியர் சம்பளத்தில் ரூ.90 கோடி ஊழல்; அன்புமணி குற்றச்சாட்டு

குடிநீர் வாரிய ஒப்பந்த ஊழியர் சம்பளத்தில் ரூ.90 கோடி ஊழல்; அன்புமணி குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: குடிநீர் வாரிய ஒப்பந்த ஊழியர் சம்பளத்தில், ஆண்டுதோறும் 90 கோடி ரூபாய் ஊழல் நடப்பதாக, பா.ம.க., தலைவர் அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார்.

அவரது அறிக்கை:

தமிழ்நாடு குடிநீர் வாரியத்தில் ஒப்பந்த அடிப்படையில், 11,597 தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். ஒவ்வொரு தொழிலாளிக்கும் குறைந்தபட்ச சம்பளம், 15,401 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.ஆனால் ஒப்பந்ததாரர்கள், 7500 முதல் 9800 ரூபாய் வரை மட்டுமே வழங்குகின்றனர். இதனால் மாதம், 7.5 கோடி ரூபாய் வீதம் ஆண்டுக்கு, 90 கோடி ரூபாய் சுருட்டப்படுகிறது. தொழிலாளர்களுக்கு சேர வேண்டிய இத்தொகையை அதிகாரிகளும், ஒப்பந்ததாரர்களும் பகிர்ந்து கொள்கின்றனர்.இது தொடர்பாக பலமுறை புகார் அளித்தும் கூட, இந்த ஊழலுக்கு முடிவு கட்டப்படவில்லை.முந்தைய ஆட்சியில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில், முதல்வரே சுட்டிக்காட்டியும் கூட இந்த ஊழல் தடுக்கப்படவில்லை; ஊழலுக்கு காரணமானவர்களும் தண்டிக்கப்படவில்லை. ஒப்பந்த தொழிலாளர்களுக்கான சம்பளம், வங்கிகள் வாயிலாக வரவு வைக்கப்பட வேண்டும் என்பது விதி. அவ்வாறு செய்தால் மோசடி அம்பலமாகி விடும் என்பதற்காக, ரொக்கமாக வழங்கப்படுகிறது. இதை அரசு வேடிக்கை பார்ப்பது, ஊழலுக்கு துணை போவதாகும்.இந்த ஊழல் குறித்து நியாயமான விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

புரொடஸ்டர்
ஜூன் 07, 2025 09:04

மத்திய அரசு பதவியிலிருந்தபோது நீ எத்தனை லட்சம் கோடிகள் ஊழல்கள் செய்தாய் அன்புமணி?


ராஜா
ஜூன் 07, 2025 08:55

இரண்டு மருத்துவ கல்லூரிகள் உள்ளன இவர் ஊழல் செய்து சம்பாதித்த பணத்தில் இருந்து பெறப்பட்டது, யோக்கியன் போல பேசுகிறார்,


வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூன் 07, 2025 08:23

ஊழல் பண்ணாவிட்டால் எங்களுக்கு தூக்கம் வாராது ... ஊழல் செய்யாவிட்டால் கை அரிக்கும் ... உடல் படபடக்கும் ... மயக்கம் வரும் ... பரபரப்பாக இருக்கும் ... தாழ்வு மனப்பாண்மை வரும் ...எதிலும் கவனம் செல்லாது ,சோர்வு, பலவீனம், உடல் அரிப்பு, வாந்தி, குமட்டல், பசியின்மை, போன்ற அறிகுறிகள் காணப்படும். ஊழல் செய்யமல் இருந்தால் அடிப்பது, கிள்ளுவது, கடிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவோம் . ஊழல் செய்யமல் இவற்றை குணப்படுத்த முடியாது..


Kasimani Baskaran
ஜூன் 07, 2025 05:59

ஒப்பந்த ஊழியர்கள் என்பவர்கள் பல வகைகளில் கொத்தடிமைகளாகவே கருதப்பட வேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை