உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அன்புமணி பொதுக்குழு கூட்டம்: தடை கேட்டு ராமதாஸ் வழக்கு

அன்புமணி பொதுக்குழு கூட்டம்: தடை கேட்டு ராமதாஸ் வழக்கு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: அன்புமணி கூட்டியுள்ள பாமக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி, அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.பாமக நிறுவனர் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே மோதல் உச்சட்டத்தை அடைந்துள்ளது. கட்சியின் பொதுக்குழு கூட்டம் ஆக., 17 ல் நடக்கும் என ராமதாஸ் அறிவித்துள்ளார். போட்டிக்கு, ஆக.,09ல் பொதுக்குழு கூட்டம் நடக்கும் என அன்புமணி தரப்பும் அறிவித்துள்ளது. இது அக்கட்சியினர் இடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=4ggsbrhr&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், அன்புமணியின் பொதுக்குழு கூட்டத்துக்கு தடை கேட்டு ராமதாஸ் தரப்பு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது.ராமதாசால் நியமிக்கப்பட்ட மாநில பொதுச் செயலாளர் முரளி சங்கர் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது: அன்புமணி கூட்டும் பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும். அவரது பதவிக்காலம் மே 28 அன்றுடன் நிறைவு பெற்றது. அவர் தன்னைத் தானே தலைவர் என சொல்லிக் கொண்டு செயல்படுகிறார். அடுத்த தலைவரை தேர்வு செய்யும் அதிகாரம் பொதுக்குழுவுக்கே உள்ளது. குழப்பம் ஏற்படுத்தும் வகையில் பொதுக்குழுவை அன்புமணி கூட்டி உள்ளார் எனத் தெரிவித்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Chandru
ஆக 06, 2025 21:09

Why this old man is showing this amount of fuss.


SUBBU,MADURAI
ஆக 07, 2025 03:44

பெரிய மாங்காயும் சின்ன மாங்காயும் கண்ணாமூச்சி ஆட்டம் விளையாடிக்கிட்டு இருக்கானுங்க இவனுகளை போலவே தமிழக மக்களையும் மாங்காய் மடையர்கள் என்று நினைத்து விட்டான்கள்...


Anantharaman Srinivasan
ஆக 06, 2025 19:35

அட..சே.. இவங்க சண்டை சென்னை கூவத்தைவிட நாற்றமெடுக்குது. கோர்ட் தடை விதித்தால் பிளவுபட்டு புதியகட்சி உதயமாகும்.


Venkatesh
ஆக 06, 2025 18:26

தைலாபுரமா வீடா ... பரனுர் ஆபிஸா.. யார் பெரியவர்ன்னு கொளுத்தி பார்ப்போமா.. இல்ல மரத்தை வெட்டி யார் பெரியவன்னு பார்ப்போமா..


Anand
ஆக 06, 2025 18:10

சாகும் காலத்தில் கூட எவரையும் நிம்மதியாக வாழ விடமாட்டான்...


sankar
ஆக 06, 2025 18:10

முரளி சங்கர் அவர்களே - இது அப்பனுக்கும் மகனுக்கும் இடையே உள்ள பிரச்சினை - நடுவில் நீங்கள் - பரிதாபமான நிலை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை